தமிழில் நடிப்பாரா அமிதாப் பச்சன்?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழ்நாட்டின் நண்பர். சென்னையில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். படபிடிப்பில் பங்கேற்றிருக்கிறார். அந்தக் காலத்தில் சிவாஜி, இந்தக் காலத்தில் ரஜினி அவரது நண்பர்களாக இருக்கிறார்கள். அவர் சென்னை வரும்போதெல்லாம் பத்திரிகையாளர்களை சந்தித்தால் "தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது" என்பார். ஆனால் இதுவரை அது நடக்கவில்லை....

விஜயின் அடுத்த படம் ரஜினியின் தர்மத்தின் தலைவன் சாயலா?

அட்லி இயக்கிய முதல் படம் ராஜா ராணி. ஆர்யா, நயன்தாரா நடித்த அந்த படம் மணிரத்னம் இயக்கிய மெளனராகம் பாணியில் இருப்பதாக அப்போது விமர்சனங்கள் எழுந்தன. அதையடுத்து, விஜய் நடித்த தெறி படத்தை அவர் இயக்கியபோது விஜயகாந்தின் சத்ரியன் பாணியில் இருப்பதாக கூறப்பட்டது. என்றாலும், அந்த இரண்டு படங்களுமே ஹிட்டடித்ததால் எதிர்மறையான விமர்சனங்கள் அட்லியை பாதிக்கவில்லை....
Ad Widget

புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதி

படத்திற்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் விஜய் சேதுபதி. கமல்ஹாசனுக்குப் பிறகு அப்படி நடித்து பெயரை வாங்கியவர் விக்ரம். ஆனால், விக்ரமையும் தற்போது பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு பல புதுவிதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. 'ஓரம்போ, வ' படங்களை இயக்கிய புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய்சேதுபதி, கதிர், ஷ்ரத்தா...

விஜய் படத்தில் ஜோதிகா நடிக்கவில்லையாம்!

தமிழ் சினிமாவில் நடிப்பில் முத்திரை பதித்த சில குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜீத் நடித்த வாலி படத்தில் அறிமுகமான இவர், அதன்பிறகு ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இதில் சந்திரமுகி, மொழி உள்ளிட்ட சில படங்கள் அவருக்கு பெருமை சேர்க்கும் படங்களாக...

சுந்தர் சி.யின் பிரமாண்டத்தில் ஜெயம் ரவி, ஆர்யா

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் ரஜினியின் எந்திரன் 2-வான ‛2.O' மற்றும் பாகுபலி-2 படங்கள் தான். தற்போது இந்தப்படங்களையும் மிஞ்சும் வகையில் ஒரு படம் உருவாக உள்ளது. தேனாண்டாள் பிலிம்சின் 100வது படமாக பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ள இப்படத்திற்கு ‛சங்கமித்ரா' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதை சுந்தர்.சி இயக்கயிருப்பது அனைவரும் தெரிந்ததே....

அனிருத்துடன் கூட்டணி சேர்ந்துள்ள ராகவா லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள "சிவலிங்கா" படத்தில் குத்துப் பாடல் ஒன்றை பாடியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத். பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் ரித்திகா சிங் நடித்துள்ள படம் “சிவலிங்கா”.அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.ராகவா லாரன்ஸ் படத்திலுள்ள பாடல்களில் நடன...

ரசூல் பூக்குட்டியை அசரடித்த ரஜினிகாந்த்!

ஒரே நாளில் மூன்று ரீல்களுக்கு டப்பிங் பேசி ரசூல் பூக்குட்டியை அசத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் 2.0 படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த படத்திற்கான கிராபிக்ஸ் வேலைகளுக்கு பத்து மாதம் பிடிக்கும் என்பதால்,இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் வேலையை முடித்துவிட இயக்குநர் ஷங்கர்...

சிங்கம்3 யை பார்த்து பயந்து ஓடும் படங்கள்!

சிங்கம்-3 படம் வெளியாவதை முன்னிட்டு சில படங்கள் தங்களுடைய ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளன. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சிங்கம்-3 திரைப்படம் பல்வேறு இழுபறிகளுக்கு பின்னர் அடுத்தாண்டு குடியரசு தினத்தன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இந்த படம்,அதே நாளில் வெளியாக இருந்த வேறு சில படங்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் அந்த...

ரஜினி 2.0 படத்தில் வடிவேலு நடிக்கிறார்!

முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலு விஷால் நடிப்பில் வெளியான ‛கத்தி சண்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது வடிவேலு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ‛கத்தி சண்டை படத்தில் மருத்துவராக நடித்த வடிவேலுவின் நடிப்புக்கு ரசிகர்கள்...

நிர்வாண காட்சியில் நடித்த பாபி சிம்ஹா!

ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்து பேசப்பட்டவர் பாபி சிம்ஹா. அதோடு அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான தேசிய விருதும் பெற்ற அவர், பின்னர் முழுநேர ஹீரோவாகி விட்டார். ஆனால் அப்படி அவர் நடித்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் தற்போது நெகடீவ் கலந்த ஹீரோவாக திருட்டுப்பயலே-2 உள்ளிட்ட சில...

பிரபுவை நேரில் வாழ்த்திய ரஜினி!

பிரபுவின் 60 வது பிறந்த நாளையொட்டி ரஜினி நேரில் சென்று அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகனும், நடிகருமான பிரபுவுக்கு வருகிற டிசம்பர் 27 ஆம் திகதி பிறந்தநாள். இந்த பிறந்தநாளோடு அவருக்கு 60 வயது ஆகிறது. இந்நிலையில், பிரபுவின் பிறந்தநாளையொட்டி நேற்று பிரபுவை அவரது அன்னை இல்லத்தில்...

நாளை முல்லைத்தீவில் இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி

வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற உள்ளது. செம்மலை மகா வித்தியாலயத்தில் நாளை திங்கட்கிழமை (26.12.2016) பி.பகல் 2 மணிக்கு ஆரம்பமாக உள்ள இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொள்ள உள்ளார். விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற...

பல்கேரியாவிலிருந்து சென்னை திரும்பினார் அஜித்

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 57வது படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பா நாட்டில் நடைபெற்ற நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் பல்கேரியாவில் நடத்த...

ஜப்பானிய மொழியிலும் வெளியாகிறது ரஜினியின் பாட்ஷா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படம் சூப்பர், டூப்பர் ஹிட்டானது. 1995ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தை இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் பார்ப்பதற்கு ரசிகர்கள் தயாராயாக இருப்பர். 21 வருடங்களுக்கு பிறகும் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை கண்டு டிஜிட்டல் வெர்ஷனில் படத்தை தயார் செய்துள்ளனர். ஏற்கனவே சிவாஜி நடித்த கர்ணன், எம்.ஜி.ஆர்...

சூர்யாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

இந்தியாவின் டாப்-10 படங்களில் சூர்யா நடிப்பில் வெளியான ’24’ படமும் இடம்பெற்றுள்ளது. ”IMDb” எனப்படும் The Internet Movie Database தளமானது, திரைப்படங்கள் குறித்த தகவல்களை மக்களுக்கு அளித்து வரும் ஒரு சர்வதேச இணையதளமாகும். 2016-ஆம் ஆண்டின் டாப்-10 இந்திய படங்களை IMDb இணையதளம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த பட்டியலில் சூர்யா நடிப்பில் வெளியான 24...

ரஜினி எமி டூயட்டுக்கு உத்தர பிரதேச அரசு ஏற்பாடு

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் 2.ஓ. ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்புகள் இப்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ரஜினி, எமி ஜாக்சன் தொடர்பான ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலத்தின்...

“என் திரைவாழ்க்கையில் இப்படி ஒரு தமிழ்ப்படத்தை பார்த்ததில்லை” : ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழை உலக அரங்கிற்கு கொண்டு சென்றவர். இவர் தான் இசை அமைக்கும் படங்களை தவிர மற்ற படங்களை பெரும்பாலும் பார்ப்பது இல்லை. சமீபத்தில் தனது சொந்தக்காரரும், நடிகருமான ரஹ்மான் நடித்துள்ள “துருவங்கள் பதினாறு” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். மேலும் படத்தின் பிரிவியூ ஷோ பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின்...

ஆஸ்கருக்கு செல்லும் தோனி!

இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் வாழ்க்கை படம் ஆஸ்கர் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்திய ஒருநாள் அணியின் வெற்றிக்கேப்டன் தோனி. இவரது வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு, சமீபத்தில் வெளியானது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா முழுவதும் வெளியான இப்படம் ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிப்பில், நீரஜ் பாண்டே இயக்கத்தில், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்...

இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா குழந்தையாக பேபி மானஸ்வி

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. இதில் நயன்தாரா தம்பியாக அதர்வா நடிக்கிறார். இந்த படத்தில் போலீசாக வரும் நயன்தாரா 4-வயது குழந்தையின் அம்மாவாகவும் நடிக்கிறார். அவருடைய குழந்தையாக நடிப்பது பேபிமானஸ்வி. இந்த குழந்தை நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள். ‘சதுரங்கவேட்டை-2’, ‘ஏதோவானிலை மாறுதே’ படங்களில் நடித்து வரும் இந்த குழந்தை...

சாமானியர்களின் பிரச்சினையை சொல்லும் சமுத்திரகனியின் தொண்டன்!

நாடோடிகள் படத்தில் காதலை கதையை படமாக்கியபோதும், ஒரு காதலை சேர்த்து வைப்பதற்காக நண்பர்கள் எத்தனை பிரச்சினைகளை, இழப்புகளை சந்தித்தார்கள் என்பதை சொல்லியிருந்தார் சமுத்திரகனி. அதேபோல், அதன்பிறகு அவர் இயக்கிய போராளி, நிமிர்ந்து நில், அப்பா ஆகிய படங்களும் சமூக பிரச்சினைகளை சொல்லும் கதைகளில்தான் உருவாகியிருந்தது. இந்த நிலையில், தற்போது அவர் தொண்டன் என்றொரு படத்தை இயக்கி...
Loading posts...

All posts loaded

No more posts