- Tuesday
- October 13th, 2026
தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற, ஓ.பி.எஸ்., - இடைப்பாடி அணியினர் இடையே, இன்று சட்டசபையில் பலப்பரீட்சை நடைபெறுகிறது. தமிழகத்தில் நிலவும் அரசியல் அசாதாரண சூழல் குறித்து அவ்வப்போது தொடர்ந்து டுவிட்டரில் பதிவிட்டு வரும் கமல், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஒரு பதிவை டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில் கமல் கூறியிருப்பதாவது... ‛‛இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை....
சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவரது படத்திலும் ரஜினியை முன்னிலைப்படுத்தி பல காட்சிகளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்நிலையில், ரஜினி...
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிமுகங்கள், தொழில்நுட்பங்கள் என அதன் அடுத்த நிலையை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போதைய நிலையில், ரசிகர்களை கவரும் வகையில் நடிகர்களும், நடிகைகளும் தங்களது பங்களிப்பை பலவிதங்களில் அளித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர்கள் ஆபத்தான ஸ்டன்ட்களில் டூப் ஏதுமின்றி தாமாகவே நடித்து ரசிகர்களை கவர்கின்றனர். இவ்வாறு டூப்...
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் `விவேகம்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், படத்தின் ரிலீசுக்காக அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுவான பார்வையாளர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், அஜித் மற்றும் `விவேகம்' படம் குறித்து அப்படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத், சில ருசீகர தகவல்களை தெரிவித்துள்ளார். இதில், `வேதாளம்' படத்திற்கு...
விஸ்வரூபம் 2 படம் எப்பொழுது தான் வெளியாகும் என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் கமல் ஹாஸன் உலக நாயகன் கமல் ஹாஸன், பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த விஸ்வரூபம் படம் படாதபாடு பட்டு ரிலீஸானது. நான் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று விஸ்வரூபம் ரிலீஸ் பிரச்சனை நடந்தபோது கமல் தெரிவித்தார். இதையடுத்து...
2007-ல் லட்சுமி கல்யாணம் என்கிற தெலுங்குப் படம் மூலமாக திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இன்றுடன் காஜல் அகர்வால் திரையுலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து ட்விட்டரில் அவர் கூறியதாவது: என்னுடைய தடைக்கற்களுக்கு நன்றி. அவற்றை நான் எதிர்கொண்டிருக்காவிட்டால்...
ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா நடித்து வெளியான படம் சி 3 (சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம்). இதற்கு முன்பு வெளிவந்த இரு பாகங்களும் வெற்றி பெற்றதால் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவான சி 3 படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவானது. இந்தப் படம், பிப்ரவரி 9 அன்று வெளியானது....
பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் மகளான காயத்ரி ரகுராம் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார். தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான காயத்ரி ரகுராம் பின்னர் நடன இயக்குநராக தனது துறையை மாற்றிக் கொண்டார். எனினும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது `யாதுமாகி நின்றால்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்....
வடிவேலு- கோவை சரளா இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அப்படி அவர்கள் நடித்ததில் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளியான என்னம்மா கண்ணு படத்தில் அவர்களது காமெடி பெரிய அளவில் பேசப் பட்டது. அதேபோல் வி.சேகரின் காலம் மாறிப்போச்சு, விஜய்யின் வில்லு போன்ற படங்களிலும் சிறப்பான காமெடி காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் பின்னர் வடிவேலு காமெடியனாக...
அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ‘விவேகம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், திருவான்மியூரில் அரண்மனை போன்ற ஒரு வீட்டை அஜித் கட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த வீட்டை அதிக பொருட்செலவில் அரண்மனை போன்று கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த வீட்டிற்குள்ளேயே உயர்தர உபகரணங்கள் கொண்ட நவீன ஜிம்மையும் அஜித் உருவாக்கவிருக்கிறாராம்....
சூர்யா நடிப்பில் ‘சி3’ படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக திரைகளில் ஓடிவருகிறது. `சிங்கம்', `சிங்கம் 2' படத்தின் அடுத்த பாகமாக உருவாக்கியுள்ள `சி3' படத்தை ஹரி இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யா - அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன்,விவேக், சூரி, ராதாரவி, தாகூர் அனூப் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 9-ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு...
அகிரா படத்தை இந்தியில் இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அதையடுத்து மகேஷ்பாபு நடிப்பில் சாம்பவமி -என்ற படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கி வருகிறார். ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் ராகுல்ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், நதியா உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்,...
ரஜினிகாந்த்-ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து 2010-ம் ஆண்டு வெளிவந்து வசூல் குவித்த ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. தமிழ் பட உலக வரலாற்றில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது. ரூ.300 கோடி செலவில் இந்த படத்தை தயாரிக்கின்றனர். இதில் நாயகியாக எமிஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடிக்கிறார்கள்....
தமிழக அரசியல் நிலவரம் குறித்து நடிகர் அரவிந்தசாமி சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார். எம்.எல்.ஏ.க்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆலோசனைகள் சொல்லியும் கருத்து வெளியிடுகிறார். கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சசிகலா சென்று இருந்த நிலையில், “நினைவுபடுத்துகிறேன். அவரவர் எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்களிடம் சொல்லுங்கள்....
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சி-3’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய்யை இயக்குவது குறித்து ஹரி தெரிவிக்கையில் “விஜய்யை இயக்கும் விருப்பம் இருக்கிறது. நானும் விஜய்யும் சேர்ந்து படம் பண்ண விரும்புகிறோம். இது மட்டுமல்ல மற்ற ஹீரோக்களுடனும் சேர்ந்து பணிபுரிய ஆசை இருக்கிறது. விஜய்யும் நானும் சேர்ந்து பணியாற்றினாலும், சரியான தயாரிப்பாளர் அமைய காத்திருக்க...
கே.வி.ஆனந்த்-விஜய் சேதுபதி முதன்முறையாக இணையும் படம் `கவண்'. கடந்த ஆண்டு தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த விஜய் சேதுபதி `கவண்' படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். இப்படத்தில் இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அவரது அடுக்குமொழி வசனமும் அடங்காத நடிப்பும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையப்போகிறது. குறிப்பாக விஜய்...
‘பைரவா’ படத்தை தொடர்ந்து விஜய், அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கதாநாயகிகளாக ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வைகைப்புயல் வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒரு...
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், தற்போது நிறைய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து வருகிறார். அந்த வேடங்கள் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தருவதால், தொடர்ந்து அதுமாதிரியான வேடங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கவுதம் மேனனின் கனவுப் படமான ‘துருவ நட்சத்திரம்’ படத்தில்...
தனிஒருவன் படத்திற்கு முன்பு வரை ரீமேக் ராஜாவாக இருந்தவர் டைரக்டர் ஜெயம்ராஜா. அந்த படத்தை முதன்முறையாக சொந்த கதையில் இயக்கியதோடு மோகன்ராஜா என்றும் தனது பெயரை மாற்றினார். அந்த படம் ஹிட்டாகி அவரது கேரியரில் ஒரு நல்ல மாற்றத்தைக்கொடுத்தது. அதனால், இந்த பெயரை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், இனிமேல் ரீமேக் படங்களை இயக்கப்போவதில்லை என்று முடிவெடுத்த...
முதலமைச்சர் ஆசனத்தில் அமர்வதற்கு, ஜெயலலிதாவுடனான நட்பு மட்டுமே போதுமான தகுதி அல்ல என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்கும் வழக்கமுடைய நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்....
Loading posts...
All posts loaded
No more posts
