- Tuesday
- October 13th, 2026
கேரளாவில் ஓடும் காரில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பற்றி அவர் துணிச்சலாக புகார் கொடுத்ததை தொடர்ந்து இதில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இதைப்போல பாதிக்கப்பட்ட பலரும் தங்களுக்கு...
கவுதம் மேனன் தற்போது தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் நடுவே விக்ரமை வைத்து ’துருவ நட்சத்திரம்’ என்கிற படத்தையும் இயக்கி வருகிறார். படங்களை இயக்குவதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் கவுதம் மேனன். அந்த வரிசையில், அரவிந்த்சாமி அடுத்ததாக நடிக்கவிருக்கவிருக்கும் ‘நரகாசுரன்’ என்ற படத்தை...
பிரபல நடிகை பாவனா கடந்த 17-ந்தேதி திருச் சூரில் நடந்த படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சிக்கு திரும்பும்போது கடத்தப்பட்டார். ஓடும் காருக்குள் பாவனாவை அந்த கும்பல் பாலியல் தொல்லை கொடுத்து அதனை செல்போனிலும் பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக பாவனா கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின், பிரபல ரவுடி...
இயக்குனர் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த 'முந்தானை முடிச்சு' படத்தில் தவக்களை என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து காமெடி நடிகராக பிரபலமானவர் சிட்டிபாபு என்ற தவக்களை. இவருக்கு வயது 42. இவர் இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர்...
இந்திய அளவில் அதிக தொகையை வசூல் செய்த தென்னிந்திய சினிமா பாகுபலி படம் தான். பாகுபலி படத்தின் முதல் பாகத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பரபரப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் முடிவடைந்தது. தற்போது பாகுபலி படத்தின் முக்கிய...
தமிழில் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமானவர் பாவனா. அதன்பிறகு ஜெயங்கொண்டான், அசல் உள்பட பல படங்களில் நடித்தவருக்கு சமீபகாலமாக தமிழில் படங்கள் இல்லை. அதனால் மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாவனாவின் முன்னாள் கார் டிரைவரும், அவரது கூட்டாளிகளம் சேர்ந்து பாவனாவை கடத்திச்சென்று பாலியல்...
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.0 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளநிலையில், அடுத்து கிராபிக்ஸ் பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறார் ஷங்கர். 2.0 படத்தை தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 18 ஆம் தேதியன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். சுமார் 350 கோடியில் தயாராகியுள்ள 2.0 படத்தை 500 கோடிக்கு விற்க திட்டமிட்டுள்ளது லைகா. இந்த 500...
இயக்குனர் ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கவிருக்கும் 'சாமி 2' கதாநாயகியாக நடிகர் த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். இத்தகவலை 'சாமி 2' தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உறுதி செய்துள்ளார். மேலும், மீண்டும் தனது வெற்றிக்கு கூட்டணியில் இணைய ஆர்வமாக உள்ளதாக த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் படமான 'சாமி'...
`துப்பாக்கி', `கத்தி' வெற்றிப் படங்களுக்கு பிறகு விஜய் மீண்டும் ஏ.ஆர்முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. `பைரவா' படத்திற்கு பிறகு விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்பாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு ஏ.ஆர்.முருகதாசுடன் இணைவார் என்று கூறப்படும் நிலையில், விஜய்-யின் 62-ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவில்லை என்ற தகவல்...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக மாறியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் `வேலைக்காரன்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில்...
'பீப்' பாடல் பிரச்சனை வந்த போது சிம்புவும், அனிருத்தும் அவர்கள் இருவரும் நண்பர்களே இல்லை என்பது போலவே பேசினார்கள். அனிருத் இசையமைக்க சிம்பு பாடியதாகச் சொல்லப்பட்ட அந்த 'பீப்' பாடல் அப்போது மிகவும் பரபரப்பான சர்ச்சையைக் கிளப்பியது. சிம்பு - அனிருத் இருவருக்கும் எதிராக பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஒரு வழியாக அந்தப் பிரச்சனை அப்படியே...
சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் ஒரு பாடல், இரண்டு சண்டைக் காட்சிகள் ஆகியவற்றை படமாக்கியுள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் விஜய் வசந்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் வசந்த் நடிப்பில் சமீபத்தில்...
நடிகர் தனுஷ் முதன்முறையாக இயக்கி வரும் படம் பவர்பாண்டி. இப்படத்தில் தனுஷின் தந்தையான டைரக்டர் கஸ்தூரிராஜா இயக்கிய முதல் படமான என்ராசாவின் மனசிலே படத்தில் நாயகனாக நடித்த அதே ராஜ்கிரண் நாயகனாக நடித்து வருகிறார். அவருடன், பிரசன்னா, நதியா, சாயாசிங், ரோபோ சங்கர் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அவர்களுடன் டைரக்டர் கெளதம்மேனன், தனுஷ்,...
சிறுத்தை' சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் படம் `விவேகம்'. `வீரம்', `வேதாளம்' படத்திற்கு பின்னர் சிவாவுடன் அஜித் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பல்கேரியாவின் பிரபல ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான `விவேகம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்...
பிரபல டிவி சேனலின் நிகழ்ச்சி தயாரிப்பு தலைவர் ஒருவர் தன்னிடம் அசிங்கமாக நடந்து கொண்டதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட அதிர்ச்சி அடங்கும் முன்பு சீனியர் நடிகரான சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி திடுக்கிடும் தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது குறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது, இதை வெளியே...
`விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய தகவலை நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதில் `விஸ்வரூபம் 2' படத்தின் தடையாக இருந்த முக்கிய பிரச்சனைகள் நீங்கிவிட்டதாகவும், தொழிநுட்ப மற்றும் சட்டரீதியான சவால்களை மட்டுமே சமாளிக்க வேண்டி உள்ளது. எனவே படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விரைவில் துவங்கி 6 மாதத்தில்...
எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு பிறகு ரஜினியும், கமலும் தமிழ் திரைஉலகில் மிகப் பெரிய ஜாம்பவான்களாக திகழ்ந்து வருகிறார்கள். இவர்களில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்கிற கோஷம் நீண்ட காலமாகவே அவரது ரசிகர்கள் மத்தியில் பிரதானமாக இருந்து வருகிறது. “தலைவா வா... தமிழகத்துக்கு தலைமையேற்க வா” என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை கடந்த 20 ஆண்டுகளுக்கும்...
தமிழ், மலையாளம் உள்பட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா. இவர் கடந்த 17-ந்தேதி இரவு படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சிக்கு திரும்பினார். அத்தானி என்ற இடம் அருகே வந்தபோது இவரது கார் மீது இன்னொரு கார் மோதியது. இதனால் நடிகை பாவனா சென்ற காரை, டிரைவர் நிறுத்தினார். அப்போது இன்னொரு காரில்...
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பாவனா. இவர் தமிழில் தீபாவளி, சித்திரம் பேசுதடி, அசல், ஜெயம் கொண்டான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர், நடித்து வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பு திருச்சூர் அருகே நடந்து வருகிறது. இதில் பங்கேற்று விட்டு நடிகை பாவனா...
தமிழகத்தில் மாணவர் போராட்டம் வெடித்ததில் இருந்து அரசியலில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிமுக இரண்டாக உடைந்ததை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்ச ராகியுள்ளார். அதற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் அணியினர் கொடிபிடித்து வருகின்றனர். இப்படிப் பட்ட பரபரப்பான சூழ்நிலையில், அரசியல் நிலவரம் குறித்து இதுவரை ரஜினிதரப்பில் இருந்து எந்தவித கருத்துக்களும் வெளியிடப்படவில்லை. தனது முழு...
Loading posts...
All posts loaded
No more posts
