- Tuesday
- August 5th, 2025

நடிகர் அஜித்தின் 57 வது படத்திற்கு விவேகம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் தன்னுடைய 57வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. அஜித் நடித்து வெளிவந்த...

விக்ரம் நடிக்கும், துருவ நட்சத்திரத்தின் படப்பிடிப்பு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், சமீபத்தில் துவங்கி, வேகமாக நடந்து வருகிறது. கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் விக்ரமும், கவுதம் மேனனும், இதில் கூட்டணி அமைத்துள்ளதால், படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதற்கேற்ற வகையில், படத்தின், 'பர்ஸ்ட் லுக், டிரெயிலர்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. சூர்யாவுக்காக, இந்த படத்தை பார்த்து பார்த்து...

தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஹன்சிகா. அதையடுத்து பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம்ரவியுடன் எங்கேயும் காதல் படத்தில் நடித்தார். தொடர்ந்து ஜெயம்ரவியுடன் ரோமியோ ஜூலியட் படத்தில் நடித்த ஹன்சிகா, இன்று திரைக்கு வரும் போகன் படத்திலும் அவருடன் நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று...

'பைரவா'வை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை அட்லி இயக்குகிறார். 'தெறி'யின் வெற்றியை தொடர்ந்து விஜய்யும், அட்லியும் மீண்டும் இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2 ஆம் தேதி துவங்குகிறது. 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' பட நிறுவனம் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் பிலிட் என்ற பேனரில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். காஜல் அகர்வால்,...

நடிகர் ராகவா லாரன்சின் சமீபத்திய நடவடிக்கைகள் எல்லாம் அரசியலுக்கு அவர் அச்சாரம் போடுவது போன்று இருப்பதாக செய்தி வௌிவந்திருந்தன, தற்போது அது உண்மையாகிவிட்டது, ஆம் தேவைப்பட்டால் நான் அரசியலுக்கு வரத் தயார் என்று அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய எழுச்சி போராட்டத்தில் லாரன்ஸ் முழுக்க முழுக்க ஆதரவு தெரிவித்தார். அவர்களுக்கு தேவையான உதவிகளை...

தனது நடிப்பில் உருவாகி வரும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் ட்ரைலரை நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டிருக்கிறார். ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் படம் மொட்ட சிவா கெட்ட சிவா. லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா2 படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் மிகவும் பிரபலமாக, படத்திற்கு தலைப்பாகவே வைத்து விட்டனர். இப்படத்தில்...

மலையாள இயக்குனர் உன்னி கிருஷ்ணன் அடுத்து மோகன்லாலை வைத்து 4-வது படம் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் தென் இந்திய மொழியை சேர்ந்த முக்கிய நடிகர் ஒருவர் நடிப்பதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. இப்போது இதில் விஷால் நடிக்க இருப்பதாகவும், அவரை இந்த மலையாள படத்தில் நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது....

ஜல்லிக்கட்டுக்கு நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வந்தன.மேலும் ஜல்லிக்கட்டை எதிர்த்த பீட்டா அமைப்பிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் பலரும் பீட்டாவை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அவர்களில் சூர்யாவும் பீட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து, சூர்யாவின் அறிக்கைக்கு...

சமூக வலைதளங்களில் என்னைப்பற்றி தவறான விஷயங்களை பரப்பி என்னை பழிவாங்குகிறார்கள் என்று விஷால் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பாக கடந்த ஒருவார காலமாக நடந்து வந்த அமைதி போராட்டம் நேற்று சில இடங்களில் வன்முறையாக மாறியது. போலீஸ் பல இடங்களில் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர். இந்நிலையில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது சரியே என்று நடிகர்...

எம்ஜிஆர் இருந்திருந்தால் இந்த மாதிரி வன்முறை நடந்திருக்காது. போராட்டக்காரர்களிடம் அவர் நேரில் பேசி முடித்து வைத்திருப்பார் என்றார் நடிகர் கமல் ஹாஸன். சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் நேற்று காலை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அப்போது காவல் துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மெரினாவிலிருந்து வெளியேற மாணவர்களும் பொதுமக்களும் மறுத்தார்கள். அதன் பிறகு போராட்டக்...

சினிமாக்காரர்களை இனி எந்தப் போராட்டத்திலும் அனுமதிக்கக் கூடாது எனும் அளவுக்கு கோபத்தில் இருக்கிறார்கள் மாணவர்கள். அதில் நூறு சதவீதம் உண்மை இருக்கிறது என்கிறார்கள் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு தார்மீக ஆதரவளித்த திரைத்துறையினர். இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் எந்த நடிகர் நடிகைகளை நம்பியோ எதிர்ப்பார்த்தோ நடந்ததல்ல. வெறும் 17 மாணவர்களுடன் ஆரம்பித்த இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் குவிந்தனர்...

'குங்பூ யோகா' படத்தின் ப்ரமோஷன் வேலைகளுக்காக இந்தியா வந்துள்ளார் நடிகர் ஜாக்கி சான். நேற்று காலை மும்பை வந்தடைந்த அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நடிகர் சோனு சூட் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். அதன்பின்னர் ஜாக்கி சான் கபில் ஷர்மா நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது ஜாக்கி சான் பேசியதாவது,...

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழகத்தில் மாணவர்கள் துவக்கி வைத்த அறவழி எழுச்சி போராட்டம் நேற்று சில இடங்களில் வன்முறை போராட்டமாக முடிந்தது. சில தீய சக்திகளின் ஊடுவலால் இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்... சென்னையில்...

சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டுள்ளது. நேற்று காலை முதலே சென்னையில் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறின. திருவல்லிக்கேணியில் உள்ள ஐஸ்ஹவுஸ்...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக சென்னை மெரினாவில் மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும், தமிழ் மக்களும் குடும்பம் குடும்பமாகப் போராடி வந்தார்கள். இன்று காலை முதல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிகாலை முதல் ஆரம்பமான நடவடிக்கை இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. சாலை பக்கம் மணலில் அமர்ந்திருந்த...

'நானும் தமிழ் பொறுக்கிதான் ஆனால் நான் டெல்லியில் பொறுக்கவில்லை' என ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த சுப்ரமணிய சாமியின் கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார். நேற்று சென்னையில் ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கான இணையதள துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய கமல்,”யாரோ ஒருவர் தமிழர்கள்...

ஜல்லிக்கட்டு போரட்டத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஹிப் ஹாப் ஆதி கூறியுள்ளதற்கு இயக்குநர் சமுத்திரக் கனி பதிலடி கொடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றிவிட்டதால்,இளைஞர் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என இன்று இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி பேட்டி அளித்திருந்தார்.ஹிப் ஹாப் ஆதியின் இந்த...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டங்களில் சிலர் சமூகத்திற்கு விரோதமாக எதிராக நடந்து கொண்டார்கள் என்றும், இதனால் தான் மனதளவில் புண்பட்டு இருப்பதாகவும் ஹிப்ஹாப் தமிழன் என்று அறியப்படும் ஆதி ஒரு காணொளியில் கூறியுள்ளார். மேலும், இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து தான் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய முகநூல் கணக்கில் காணொளி ஒன்றை பதிவு...

ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள பீட்டா அமைப்பின் முகத்திரையை கிழித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி. ஜல்லிக்கட்டின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், அவற்றின் நலன் கருதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாய் கிழிய கூறியது விலங்குகள் நல அமைப்பான பீட்டா. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பீட்டா ஆண்டுதோறும் ஏகப்பட்ட விலங்குகளை கொன்று குவித்து வருகிறது. இது...

மெரினாவில் நடைபெற்று வரும் இளைஞர்கள் போராட்டத்துக்கு விஜய் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று மெரினாவில் இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்தி வரும் போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள். முதலில் விஜய் தனது ஆதரவை வீடியோ பதிவு ஒன்றின் மூலம் வெளிப்படுத்தினார்....

All posts loaded
No more posts