- Tuesday
- October 13th, 2026
தற்போது `துருவ நட்சத்திரம்' படத்தில் பிசியாக இருக்கும் கவுதம் மேனன், அதனைதொடர்ந்து, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒன்ராகா எண்டெர்டைன்மெண்ட் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி நடிகர்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்திற்காக, ஏற்கனவே மலையாளத்தில் பிரித்விராஜும், கன்னடத்தில் புனித் ராஜ்குமாரும் ஒப்பந்தமாகி உள்ளனர்....
சிம்பு, அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு நடிகராக இருந்தபோதும் அஜித் படம் வெளியாகும்போதெல்லாம் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் அளவுக்கு அஜித்தின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார் சிம்பு. இந்நிலையில், சிம்புவின் ‘வாலு’ படம் ரிலீஸ் பிரச்சினையின்போது விஜய் தலையிட்டு அந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வழிவகுத்தார். அன்றுமுதல்...
தமிழக அரசியல்வாதிகள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தனது இலங்கைப் பயணத்தை இரத்து செய்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை மக்களுக்காக வவுனியாவில் கட்டப்பட்ட வீடுகளைக் கையளிக்க தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்கத் தாம் இலங்கை செல்ல சம்மதித்ததாகவும்...
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அனேகன். அந்த படத்தில் நாயகியாக மும்பையில் இருந்து தமிழுக்கு இறக்குமதியானவர் அமைரா தஸ்தூர். அந்த படத்தை அடுத்து இந்தி படங்களில் நடிக்க சென்று விட்ட அவர், மறுபடியும் சந்தானம் நடிக்கும் ஓடி ஓடி உழைக்கனும் படத்திற்காக கோலிவுட்டிற்கு வந்திருக்கிறார். இந்த முறை தமிழில் நிரந்தர நடிகையாகி விட வேண்டும்...
சினிமாவில் பின்னணி பாடும் வாய்ப்புகள் குறைந்த பிறகு வெளிநாடுகளில் தனது மகன் எஸ்.பி.பி.சரணுடன் இணைந்து பிரமாண்டமாக இசைக்கச்சேரிகளிளல் நடத்தி வருகிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அந்த வகையில், வெளிநாடு களில் கச்சேரிகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 20 கோடி வரை சம்பாதிக்கிறாராம் எஸ்.பி.பி., இந்த ஆண்டும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் எஸ்.பி.பி-50 என்ற பெயரில் பிரமாண்ட இசை...
தமிழ் சினிமாவை பொறுத்தவரை வாரத்தின் கடைசியிாள, வெள்ளிக்கிழமை தோறும் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகின்றன. ஆனால் ரிலீசாகும் அனைத்து படங்களுமே வெற்றி பெறுவதாக கூற முடியாது. முன்பெல்லாம் 50 நாள்கள் அல்லது 100 நாள்கள் ஓடினால் தான் படத்தின் வெற்றியை கொண்டாடினார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் படங்கள் 2 முதல் 3 நாள்கள் திரைகளில் முழுவதுமாக...
சசிகுமார் அடுத்தாக ‘குட்டிப்புலி’ இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘கொடி வீரன்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் நடைபெறுகிறது. அர்ஜுன் கிராமத்து அதிரடி வில்லனாக நடிப்பதாக...
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்ருது வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார் என்பது அனைவருக்கு தெரிந்ததே. தற்போது நான்காவதாக ஒரு கெட்டப்பிலும் இதில சிம்பு நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சிம்புவே கூறியுள்ளார். அவர் சொல்லும்போது, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் டீசரை பார்த்துவிட்டு, நீங்களாக கற்பனை செய்து...
இசையமைப்பாளர் இளயராஜாவால் அனுப்பப்பட்ட சட்ட எச்சரிக்கை அறிக்கையை தொடர்ந்து இனிமேல் இளையராஜாவின் பாடல்களை மேடைகளில் படமாட்டேன் என பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அதிரடி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். காலத்தால் அழியா காவியப் பாடல்களை கொடுத்த, இசையமைப்பாளர் இளையராஜாவும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியும் இணைந்த கூட்டணியில் வெளிவந்த பல பாடல்கள் இசை ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்திருக்கின்றன....
தேசிய கட்சியான பா.ஜனதா தமிழகத்தின் ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் வேட்பாளரை நிறுத்த தவறுவது இல்லை. ஆனால் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பதில் பா.ஜனதா தொடர்ந்து குழப்பத்தில் இருந்து வந்தது. யாரை வேட்பாளராக நிறுத்தலாம்? என்று தீவிர பரிசீலனை நடந்தது. இதில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகை கவுதமி, இசை...
ரஜினியின் நடிப்பில் 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு 99 சதவீதம் படங்களில் பாலிவுட் நடிகைகள்தான் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். எந்திரன் படத்தில் ஐஸ்வர்யராய், கோச்சடையானில் தீபிகா படுகோனே, லிங்காவில் சோனாக்ஷி சின்ஹா, கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படத்தில் ராதிகா ஆப்தே என பாலிவுட் ஹீரோயின்களின் ஆதிக்கம்தான் அதிகமாக காணப்படுகிறது. அந்த வரிசையில் ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் புதிய...
அஜித்குமார் நடித்து வரும் ‘விவேகம்’ அவரது 57-வது படமாக வெளிவர இருக்கிறது. அதிரடி கதையம்சத்துடன் திகில் படமாக தயாராகிறது. இந்த படத்தை சிவா டைரக்டு செய்து வருகிறார். இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து வீரம், வேதாளம் என்ற இரண்டு படங்களை இயக்கி வெளியிட்டார். இந்த படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தன. இதனால், ‘விவேகம்’ படத்தில்...
சிறிய பட்ஜெட்டில் கோலி சோடாவை கொடுத்து வெற்றி பெற்ற விஜய் மில்டன், பெரிய பட்ஜெட்டில் பத்து எண்றதுக்குள்ள படத்தை கொடுத்து தோல்வி அடைந்தார். ஒரு வெற்றி, ஒரு தோல்விக்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கி உள்ள படம் கடுகு. இதில் பரத், ராஜகுமாரன், சுபிக்ஷா, ராதிகா பிரதிஷ்டா உள்பட பலர் நடித்துள்ளார்கள். எஸ்.என்.அருணகிரி இசை அமைத்துள்ளார்....
ஜித்தன் 2, கிரிங் கிரிங் போன்ற திகில் படங்களை இயக்கியவர் ராகுல். இவர் தற்போது இயக்கி இருக்கும் 3வது திகில் படம் 1 ஏ.எம் இதில் புதுமுகங்கள் மோகன், சவ்ரவ், பிரதீப் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ஒளிப்பதிவு செய்துள்ளார், கார்த்திக் இசை அமைத்துள்ளார். ஆர்.பி.என்., சினிமா சார்பில் இயக்குனர் ராகுலே தயாரித்தும் உள்ளார். படம்...
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பாகுபலி-2’ படத்தின் டிரைலர் நாளை வெளியாகப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த டிரைலர் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ‘பாகுபலி-2’ டிரைலர் 2 நிமிடம் 20 வினாடிகள் ஓடக்கூடியதாக தயாராகியுள்ளதாம். இந்த டிரைலரில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம்பெறும்படியும் அமைக்கப்பட்டுள்ளதாம். படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கிராபிக்ஸ் காட்சிகளில்...
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் மலையாள ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான். அவரது ஒர்க்கிங் ஸ்டைல் பிடித்துப்போகவே விக்ரமை வைத்து தான் இயக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்திற்கும் அவரையே ஒளிப்பதிவாளராக பணியாற்ற வைத்தார் கௌதம் மேனன். சும்மா சொல்லக்கூடாது படப்பிடிப்பின் ஆரம்பத்திலேயே ஐந்து நிமிட...
பெரும்பாலும் படப்பிடிப்பு தளங்களில் நடிகர் - நடிகைகள் கேரவனுக்குள் அமர்ந்து கடலை போடுவது வழக்கம். கடலை என்றால் ஏதாவது ஜாலியாக பேசிக்கொண்டிருப்பார்கள். சிலர் சீட்டு விளையாடுவார்கள். சிலர் சினிமா உலகத்துக் கதைகளை பேசுவார்கள். இன்னும் சிலர் வீடியோ கேம் விளையாடுவார்கள். கிராமப்புறங்களுக்குப் போனால் கிரிக்கெட் கூட விளையாடுவார்கள். இப்படித்தான் படப்பிடிப்பு தளங்களில் நடிகர் நடிகைகளை ஓய்வு...
அமலாபால் தற்போது தனுசுடன் ‘வேலையில்லா பட்டதாரி-2’, ‘வடசென்னை’ படங்களில் ஜோடியாக நடிக்கிறார். இதுபற்றி கேட்ட போது அமலா பால் அளித்த பதில்... “தனுஷ் ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்தேன். இப்போது அதன் 2-வது பாகத்திலும் நாங்கள் சேர்ந்து நடிக்கிறோம். தனுஷ் எனக்கு பிடித்த நடிகர். அவரிடம் பலவித திறமைகள் இருக்கின்றன. கதை, கதாபாத்திரங்களை கவனமாக...
தற்போதைக்கு தமிழ் சினிமாவில் கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கும் ஒரே நடிகர் விஜய் சேதுபதிதான். தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட்டாகிக் கொண்டே வருகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதியை வைத்து ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தியை வைத்து ‘காஷ்மோரா’ படத்தை...
நடிகர் கமல்ஹாசன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:- ‘விஸ்வரூபம்’ படத்துக்கு பிறகு எழுந்த பிரச்சனைக்கு காரணம் இஸ்லாமியர்கள் அல்ல. அரசியல்வாதிகள் தான் முழுக்க முழுக்க காரணம். எனது படத்தை வெளியிடவிடாமல் தடுத்ததே அப்போதைய ஆட்சியில் இருந்தவர்கள் தான். நான் பகுத்தறிவாதத்தை பேசிக்கொண்டேதான் இருப்பேன். அரசியல் வர்த்தகம் ஆகிவிட்டது. நிகழ்கால அரசியலுக்கு தீங்கு...
Loading posts...
All posts loaded
No more posts
