- Wednesday
- September 17th, 2025

சுன்னாகம் பிரதேச கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 73 வீதமானவற்றில் கழிவு எண்ணெயும், கிறீஸும் கலந்துள்ளமையை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. எனவே அப்பகுதி நீரைப் பருக வேண்டாம் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேட்டுள்ளார். சுன்னாகம் பிரதேசத்தின் கிணறுகளில் கழிவு எண்ணெய் படியவில்லை என்று...

யாழ். மாவட்டத்தில் உணவிலிருந்து ஏற்படும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 25 வீதம் தொடக்கம் 30 வீதம் வரையில் 2014ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டுள்ளதாக, யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ சங்கம் ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தது. உலக சுகாதார தினம் 7ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ சங்கத்தின்...

கழிவு நீர் மாசடைதலினால், பல்வேறு தரப்பினரிடமும் உதவிக்காக அணுகிய போதும், குறைந்த பட்ச ஜனநாயக உரிமை கிடைக்கவில்லை என கோரி, மக்கள் பேரணி ஒன்றினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் மற்றும் இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையம் விதை குழுமம் ஆகியன இணைந்து, இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்....

இலங்கையில் வாழ்கின்றவர்கள், நாளை சனிக்கிழமை(04) அரை சந்திர கிரகணத்தை பார்க்க முடியும் என்று நவீன தொழில்நுட்பம் தொடர்பிலான ஆர்தர் சி கிளார்க் மத்தியநிலையம் அறிவித்துள்ளது. மாலை 5 மணிக்கே அரை சந்திர கிரகணம் தென்படும் என்றும் அந்த மத்தியநிலையம் அறிவித்துள்ளது. எனினும், சந்திர கிரகணத்தின் இறுதி இரவு 8 மணிவரையும் தென்படும் என்றும் அறிவித்துள்ளது. சந்திரன்...

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அளித்த வாக்குறுதிக்கு அமைய சீமெந்துக்கான நிர்ணய விலை உள்ளடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 31ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்தவொரு இலட்சினையின் கீழும் விற்பனை செய்யப்படும் 50 கிலோ சீமெந்து ஒரு மூடையின் விலை 870 ரூபாவாக...

யேமனில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனால் யேமனில் உள்ள தங்கள் உறவினர்கள் குறித்து தகவல்களை 0112323015 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி வழங்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. யேமனில் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் விமான நிலையங்கள் மூடப்பட்டு நாட்டில் குழப்ப நிலை தோன்றியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளியாகியுள்ள கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி வரையிலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை இன்று வெளியாகிய பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தள முகவரிகளில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் வரவு செலவுத் திட்டத்தினூடாக அறிவிக்கப்பட்ட திருமணப் பதிவு கட்டணக் குறைப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக வட மாகாண உதவிப் பதிவாளர் செல்வி ஆனந்தி ஜெயரட்ணம் புதன்கிழமை (25) தெரிவித்துள்ளார். முன்பு வீட்டுக்கு வந்து திருமணப் பதிவு செய்ய 3,500 ரூபாய் கட்டணம் அறவிடப்பட்டது. தற்போது அக்கட்டணம் 50 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. திருமணப் பதிவாளருக்கு 1500...

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினூடாக சுமார் ஒரு மில்லியன் வரையான வீட்டு சுற்றுச்சூழலை சோதனைக்கு உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொலிஸார், இராணுவத்தினர், சமூக சேவை அமைப்புகள் மற்றும் சுகாதார...

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பது, ஏப்ரல் 02ஆம் திகதி முதல் தடை செய்யப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு பயணிப்பது, மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் தடை செய்யப்படும் என்று பொலிஸார் ஏற்கெனவே தெரிவித்தனர். எனினும் இத்திட்டம்...

இலங்கையில் நான்கு வருடங்களுக்கு பின்னர் இன்று முதல் இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒழுங்குத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார். இரட்டை குடியுரிமைக்காக இதுவரை சுமார் 300 பொதுமக்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்களும் புதிய விண்ணப்பங்களுடன் பரிசீலிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களின்போது வயது வந்தவர்களுக்கு 250,...

புனர்வாழ்வு அதிகார சபையின் நடமாடும் சேவை எதிர்வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் நடைபெற உள்ளதாக சபையின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.எம்.வதூர்தீன் தெரிவித்தார். இந்நடமாடும் சேவையில் கடந்த காலத்தில் தென்மராட்சி பிரதேசத்தில் தமது சொத்துக்களை இழந்து பாதிப்படைந்தவர்கள் தொடர்பில் கவனம் செலத்தப்படவுள்ளதாக...

யாழ்.போதனா வைத்தியசாலையின் பாலியல் தொற்று நோய் தடுப்பு சிகிச்சை பிரிவின் புதிய தொலைபேசி இலக்கம் 0212217756 என மாற்றப்பட்டுள்ளதாக பாலியல் தொற்று நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்திய அதிகாரி தாரணி குருபரன் வெள்ளிக்கிழமை (20) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வடமாகாணத்தில் பாலியல் தொற்று நோய் அதிகரித்துக் காணப்படுகின்றது. யாழ்.போதனா...

5 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் பாவனையின் போது விழிப்புணர்வுடன் இருக்குமாறு பொதுக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் 5 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த போலி நாணயத்தாள்களின் புழக்கம் தற்போது நாடு முழுவதிலும் பரவலாக இருந்து வருவதால்,...

இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான ஆறு நிபந்தனைகள் விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட உள்ளது. அதற்கமைய, தொழில் தகைமைகள் அல்லது கல்வித் தகைமைகள் வைத்திருத்தல். இலங்கையில் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான நிலையான சொத்துக்களை வைத்திருத்தல். இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட வங்கியொன்றில் 2.5 மில்லியனுக்கு...

இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை தடை செய்ய சிவில் நிர்வாக, கல்வித்துறை, மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது. இது அரசியலமைப்பு உரிமையாகும். இதை தடை செய்வது சட்ட விரோதமாகும். இந்த சட்டபூர்வ உரிமை நாடு முழுக்க அமுலாகும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் ஒரு சுற்றறிக்கை ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பி...

வெளிநாடுகளுக்குச் சென்று காணாமற் போனவர்களின் உறவினர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் அநாமதேய நபர்கள் காணாமற் போனோரின் பெயருக்கு பெரும் தொகைக்கான காசோலை வந்துள்ளதாக கூறி ஏமாற்றும் சம்பவங்கள் நடக்கின்றன. சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பில் கவனமாகச் செயற்படுமாறு அறிவுறுத் தப்படுகிறது. கடந்தவாரம் இவ்வாறான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த கணக்கொன்றுக்கு 25ஆயிரம் ரூபாவை வைப்பிலிட்டால் தங்களுக்குரிய 4...

14.03.2015 காலை 6.00 தொடக்கம் மாலை 4.00 மணிவரை துவிச்சக்கர வண்டிகளையோ மோட்டார் சைக்கிள்களையோ வேறு ஏதாவது வாகனங்களையோ உங்கள் வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் முன்னால் நிறுத்திவைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். குறிப்பு: இதனை கருத்தில் கொள்ளாது நிறுத்திவைக்கப்படும் வாகனங்கள் பெரிய வாகனத்தில் ஏற்றிச்செல்லப்படும். அவ்வாறு ஏற்றும் போது வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல....

முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியைப் பொறுவதற்கு இதுவரையில் 40 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்தப் பதிவுகளை மேற் கொள்வதற்கான கால எல்லை இந்த மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் பதிவுகளுக்கான காலம் முடிவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. உதவிகளைப் பெறப் பதிவு செய்பவர்களுக்கு...

யாழ்.மாவட்ட உணவகங்களில் கடந்த காலத்தில் விற்பனை செய்ததை விட 20 வீதம் விலை குறைத்து உணவுவகைளை விற்பனை செய்ய அனைத்து உணவகங்களினதும் உரிமையாளர்கள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் - இவ்வாறு யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினால் கோரிக்கை விடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வணிகர் கழக அலுவலக மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள்...

All posts loaded
No more posts