சிகையலங்காரம் செய்துகொண்டால் கைது!!

கட்சி சின்னத்துடன் வேட்பாளரின் விருப்பு இலக்கத்தையும் சேர்த்து சிகையலங்காரம் செய்துகொள்வது தேர்தல் சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும் என்று தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், தலைமுடியை அவ்வாறு அலங்காரம் செய்துகொண்டிருப்பவர்கள் கைதுசெய்யப்படுவர் என்றும் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாவும், அவ்வாறு சிகையலங்காரம் செய்துகொண்டு சுற்றித்திரிபவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாக்களிப்பு தொடர்பில் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் போது தெரிவு செய்த கட்சியின் பெயர் மற்றும் இலக்கத்துக்கு முன்பாக அல்லது சுயேற்சை குழுவின் இலக்கத்தின் முன்பாக ("X") அடையாளமிட வேண்டும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். அதற்கு பிறகு ஏற்றுக்கொண்ட கட்சியின் அல்லது சுயாதீன குழுவின் வேட்பாளர்கள் மூன்று பேரின் இலக்கங்களுடைய சதுரத்தில் ("X")...
Ad Widget

பரீட்சை மண்டபத்துக்கு செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்

க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு என்பவற்றை பரீட்சை நிலையத்துக்கு எடுத்து வருவது அவசியம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சை நிலையத்துக்கு செல்ல முன்னர் தனது தகவல்கள் சரியாக உள்ளனவா என மாணவர்கள் ஆராய்ந்து பார்த்தல்...

வல்வை மண்ணில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம்

அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ்தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபொரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் வல்வெட்டிதுறை நகரத்தில் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 02.08.2015 மாலை 4.30 மணிக்கு வல்வெட்டித்துறை கடற்கரையிலுள்ள ரேவடி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறும். இந் நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு விசேட உரை நிகழ்த்த உள்ளனர்.

17ஆவது சர்வதேச புகைப்பட கண்காட்சி மற்றும் போட்டிக்கான புகைப்படங்கள் கோரல்

17ஆவது சர்வதேச புகைப்பட கண்காட்சி மற்றும் போட்டிக்கான புகைப்படங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதியுடன் ஏற்றுக்கொள்ளும் திகதி நிறைவடையவுள்ளமையினால் உடனடியாக புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு இலங்கை தேசிய புகைப்படச்சங்கம் வேண்டுகோள் விடுத்துளள்து. ஓகஸ்ட் 19ஆம் திகதி தேசிய மற்றும் சர்வதேச தெரிவுக்குழுவினர் அடங்கிய குழுவினால் படங்கள் தெரிவு செய்யப்படவுள்ளன. கண்காட்சி எதிர்வரும்...

காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் அதிகளவில் விற்பனையாகின்றது : மக்களே அவதானம்!

நேற்றய தினம் பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முறையற்ற வர்த்தக நடவடிக்கை தொடர்பில் பதிவு செய்யப்பட்ட அதிகூடிய வழக்காக காலாவதியான பொருட்கள் விற்பனை தொடர்பில் 11 கடை உரிமையாளர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் தண்டப்பணமும் அறவிடப்பட்டது. இவ்வாறு காலாவதியான பொருட்களில் அழகுசாதனப் பொருட்கள் ( பேஸ்வோஸ், கிறீம்) அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றது. எனவே அழகுசாதனப் பொருட்களை கொள்வனவு...

குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கவும்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு மக்கள் முன்வந்து தெரிவிக்க வேண்டும் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வூட்லர் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாண முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்துக்கும் உதயகுமார வூட்லருக்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (16) இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, உதயகுமார் வூட்லர் இந்த வெண்டுகோளை விடுத்துள்ளார். மதுபானம் அருந்திவிட்டு...

தேர்தல் வன்முறைகளை முகப்புத்தகம் மூலம் முறையிடலாம்!

நாடளுமன்றத் தேர்தலில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு உடனடியாக அறிவிக்கும் விதத்தில் 'ஆணையாளருக்கு கூறுங்கள்' எனும் பெயரில் முகப்புத்தகக் கணக்கு (Facebook Account) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முகப்புத்தகத்தின் மூலம் செய்திகள் வேகமாகப் பரவுகின்றமையும், அதன் தாக்கம் அதிகரித்து இருப்பதனாலுமே 'ஆணையாளருக்குக் கூறுங்கள்' என்ற முகப்புத்தகப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் வன்முறைகளை இலகுவாகவும் விரைவாகவும்...

இலங்கையில் தமிழ் மக்கள் அடுத்த 15 வருடங்களில் 2ம் நிலை சிறுபான்மை இனமாக மாற்றப்படும்

இலங்கையில் தமிழ் மக்கள் அடுத்த 15 வருடங்களில் 2ம் நிலை சிறுபான்மை இனமாக மாற்றப்படும் அபாயம் உள்ளதாக சமுதாய மருத்துவ நிபுணரும் தற்போதைய யாழ்.மருத்துவர் சங்கத்தின் தலைவருமாகிய முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார். 2012ம் ஆண்டு 11.2 வீதமாக இருந்த தமிழர்கள் 2031ம் ஆண்டில் 10.3 வீதமாக மாறும் அபாயத்தை ஆய்வுகள் குறிப்பிடுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஜுலை...

தேர்தல் சட்ட மீறல்கள் : பொது மக்கள் தகவல் தரலாம்

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் அல்­லது அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்கள் சட்­டத்தை மீறும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டால், பொது­மக்­க­ளுக்கு தக­வல்­களை வழங்க முடியும் என பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது. இது குறித்த முறைப்­பா­டு­களை தொலை­பேசி அல்­லது மின்­னஞ்சல் மூலம் அறி­விக்க முடியும் என, பொலிஸ் தலை­மை­ய­கத்தால் வெளியி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது. வேட்­பு­மனு வழங்­கிய தினத்தில் இருந்து தேர்தல்...

தமிழர் இனப்பிரச்சனையில் ஏற்கப்பட்ட திம்புக்கோட்பாடு இன்று 30 வருட நிறைவை காண்கிறது

1980 களில் நிலவிய‌ பனிப்போர் மற்றும் புவிசார் உலக அரசியலை அப்போதைய போராளித்தலைமைகள் சரியாகவும் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் கையாண்டதால், எமக்கான ஒரு மிக முக்கியமான வரலாற்று பிரகடனம் ஒன்றிற்கு செல்லக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. 1976 இல் வட்டுக்கோட்டை பிரகடனம் செய்து , விஞ்ஞாபனத்தில் அதற்கு 1977 இல் ஆணை கேட்டுவிட்டு, பின்னர் அரசியல் தலைமைகள் இணங்கிபோய்...

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்திற்கான தடை நீடிப்பு

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் அணிவதற்கான தடை உத்தரவை செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது.

பாடசாலைகளுக்கு அண்மையில் விற்கப்படும் உணவுப்பொருட்கள் தொடர்பில் பெற்றோர், ஆசிரியர் கவனமாக இருக்கவேண்டும்

பாடசாலைகளுக்கு அண்மையில் விற்கப்படும் உணவுப்பொருட்கள் தொடர்பில் பெற்றோர், ஆசிரியர் கவனமாக இருக்கவேண்டும். சந்தேகத்துக்குரிய இனிப்பு வகை விற்பனை செய்வது தொடர்பில் அறியப்படுமாயின் 1977 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறைப்பாடு செய்யலாம் என நுகர்வோர் அதிகாரச்சபையின் பணிப்பாளர் சந்திரிக்கா திலக்கரத்ன தெரிவித்துள்ளார். டோரா (Dora) என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இனிப்பு வகைகளை உட்கொண்ட மஹாரகம பிரதேச...

நடமாடும் சேவை!

யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 28 ஆண்டு கால மனித நேய சேவை நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை காலை 09 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பூநகரி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள முழங்காவில் ஆதார வைத்தியசாலை வளாகத்தில் விசேட நடமாடும் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் போது மருத்துவ உபகரணங்கள்...

தலைக்கவசம் இன்றி மோட்டார் வாகனம் செலுத்தினால் அதியுச்ச தண்டனை : யாழ்.போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி

தலைக்கவசம் அணியாமல் வேகக்கட்டுப்பாட்டு இல்லாமல் மோட்டார் வாகனத்தில் வந்த இளைஞன் குருநகர் சேமக்காலைக்கு திரும்பு வளைவுடன் மோதுண்டதில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு 8 நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவத்தில் செல்வராசா றுபின் வயது 19 என்பவரே உயிரிழந்தவராவார். மேலும் இனிவரும் காலங்களில் தலைக்கவசம் அணியாமல் எவர் சென்றாலும் எக்காரணம் இல்லாமல் உடனடியாக அவர்கள்...

காணாமற்போன குடும்பஸ்தர் மற்றும் அவரது 3 வயது மகன் பற்றி தகவல் கோருகிறது பொலிஸ்!

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு காணாமற்போன உடுவில், மானிப்பாய் வீதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தரான பிறேம்குமார் நிந்துஜன் (வயது 30) மற்றும் அவருடைய மகன் நிந்துஜன் தரணிகன் (வயது 03) ஆகியோரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. இவர்கள் காணாமல்போனமை சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில அவருடைய மனைவியால் ஒரு வருடத்துக்கு...

வாக்களிக்க அடையாள அட்டை இல்லாதோர் விண்ணப்பிக்கவும்

தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை அவசியமாதலால் அடையாள அட்டை இல்லாதோர் பிரதேச செயலாளர் அலுவலகங்களில் அதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிடைக்கும் விண்ணப்பங்களை ஓகஸ்ட் 01 ஆம் திகதியளவில் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்க பிரதேச செயலாளர் அலுவலகங்கள் செயற்பட வேண்டுமென திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத்குமார தெரிவித்தார்....

யாழில் பரவும் இன்புளுவன்சா; கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை!!

யாழ். மாவட்டத்தில் இன்புளுவென்சா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகியவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரையில் 113பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணியொருவர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பவானி பசுபதிராஜா, வியாழக்கிழமை (02) தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த பணிப்பாளர், 'இந்த வைரஸ் தாக்கம் தொடர்பில் மே...

யாழ் மாவட்ட இளையோருக்கான முயற்சியாண்மை நிகழ்ச்சித்திட்டம் !

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (U.N.D.P) industrial Service Bureau (ISB) உடன் இணைந்து யாழ் மாவட்ட இளையோருக்கான முயற்சியாண்மை நிகழ்ச்சித்திட்டம் ஒன்று நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. இளையோர் எதிர்கொள்ளும் வேலைவாய்ப்பின்மையை குறைக்கும் நோக்கிலும் அவர்கள் சார்ந்த சுயதொழிலை ஆரம்பிக்க ஊக்குவிக்கும் நோக்கிலும் மேற்படி செயற்றிட்டம் நாடுமுழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனடிப்படையில் யாழ் மாவட்டத்திலுள்ள வேலனை, கரவெட்டி, பருத்தித்துறை,...

வேலை தேடுவோரின் விபரம் சேகரிப்பு

யாழ் மாவட்ட செயலகத்துடன் இணைந்து மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றுள்ள இளைஞர் யுவதிகளின் புள்ளிவபரங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றது. இதன் படி மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளையோர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி கரவெட்டியிலும், 29 ஆம் திகதி சண்டிலிப்பாயிலும், 30 ஆம் திகதி காரைநகர் மற்றும் சங்கானையிலும் ஜூலை மாதம் 03 ஆம்...
Loading posts...

All posts loaded

No more posts