- Friday
- August 15th, 2025

இலங்கைக்கு அருகில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வானம் இருள் சூழ்ந்து காணப்படும் எனவும், இதன்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும்...

யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பான ரயில் கடவைகள் ரயில் வருவதற்காக மூடப்படும் போது, ரயில் கடவையானது எப்போது திறக்கப்படும் என்ற அவசரத்தில் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல் வீதியை முழுமையாக ஆக்கிரமித்து நிற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இரட்டை வீதிகள் என்பது இல்லாமல், இருவழிக்கு ஒரே வீதியில் நடுவில் வெள்ளைக்...

இம்முறை வரவுசெலவில் அத்தியவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலைக்குறைப்பை கண்காணிக்க நுகர்வோர் அதிகாரசபையூடாக எமது அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வரவுசெலவு 2016 இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் நேற்று (26) பாராளுமன்றில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரவிக்கையைில், மக்களுக்கு...

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் நாட்டில் சகல பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்களையும் விழிப்பாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஆகக் கூடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் மின்னல் தாக்கும் என்றும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

சந்திரனை சுற்றி பல வர்ணங்களுடன் வெளிச்சமான வளையங்கள் தோற்றுவதன் ஊடாக எதிர்வரும் நாட்களில் புயலுடன் கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் தோன்றும் என நட்சத்திர உயிரியல் விஞ்ஞான ஆய்வு நிபுணர் கீர்த்தி விக்கிரமரத்ன எதிர்வு கூறப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். வானவில்லைப் போன்று சந்திரனைச் சுற்றி தோன்றியிருந்த வளையங்களை கடந்த சில நாட்களாக இரவு வானில்...

யாழ்.நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து வருவதாக யாழ்.போதனா வைத்திய சாலை தரப்பினர் எச்சரித்துள்ளனர். கடந்த இரு நாட்களில் மட்டும் எட்டுப்பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். தற்போது மழை காலம் ஆரம்பித்து உள்ள நிலையில், மழை பெய்து வெற்றுக் காணிகள், வீட்டில் காணப்படும் பொருட்களில்...

இலங்கையின் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் அறைகளை வாடகைக்கு விடும் விடுதியொன்றில் ரகசியக் கமரா மூலம் அறைகளில் நடைபெறுபவற்றை பதிவு செய்து வந்த நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். பிளக் பொயிண்ட் இன் ஒரு துவாரத்திற்குள் ரகசியக் கமரா வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த ஹொட்டலில் உள்ள அறைகளில் சூட்சுமமான முறையில் அந்தரங்க விடயங்கள் பதிவு செய்யப்பட்டு அவை வேறொரு...

யாழ் மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் நெற்செய்கைக்கான உரங்களை (யூரியா, சுப்பர் பொசுபரசு (TSP), மியூரேற் பொட்டாசு (MOP), விவசாயிகள் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு கொள்வனவு செய்யும் நிலை ஏற்படின் அது தொடர்பான முறைப்பாட்டினை மாவட்ட செயலகத்திற்கு அறியத்தருமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்...

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சிறுவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்த வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை தீர்மானித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பற்ற முறையில் சிறுவர்கள் பயணிக்கும்போது விபத்துக்கள் நேர்வதாக சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். இருவர் மாத்திரம் பயணிக்க கூடிய மோட்டார் சைக்கிளில் மூவர் அல்லது நால்வர் பயணிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள...

திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பெண்களை காதலித்து ஏமாற்றி அவர்களிடமிருந்து நகைகளை கொள்ளையடித்து வந்த நபரை, பிரதேச மக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. தோப்பூர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த அப்துல் கலீம் (வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு நையப்புடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், நல்லூர்...

வடக்கில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற காரணத்தினால் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் புகுந்து ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலும், பொது இடங்களிலும், நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர். குறிப்பாக பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், சிறுவர்கள், வயதானோர் என அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் சமைத்த உணவுகளையும் உடனடியாக வழங்கி வரும்...

2015.11.16 ஆம் திகதி காலை காலை 05.30 மணிக்கு வழங்கப்பட்ட வானிலை முன்னறிவிப்பு: நேற்றைய தினம் வங்காளவிரிகுடாப் பகுதியில் திருகோணமலைக்கு அருகில் காணப்பட்ட தாழமுக்கமானது தற்போது அதன் வலு குறைவடைந்து இலங்கையை விட்டு அப்பால் நகர்கின்றது. இது நாளை பிற்பகல் இந்திய தமிழ் நாட்டு கரையோரத்திற்கு நகரும் என உதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தினால் நாட்டின் வட...

கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடாக் கடலில் காணப்பட்ட தாழமுக்க வலயமானது தற்போது தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது. அது தற்போது இலங்கையின் வடகிழக்கிற்கு மிக அண்மையில் காணப்படுகிறது. இதன் தாக்கத்தினால் மேகமூட்டத்துடன் கூடிய மழை கொண்ட காலநிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிலும் சூழவுள்ள கடல் பிராந்தியங்களிலும் கடும் காற்றும் வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இலங்கைத்தீவின்...

வானிலையில் ஏற்பட்டுள்ள தாழமுக்க மாற்றம் தற்போது கிழக்கு பாகத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இன்றும் (15) அதிக மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து பாகங்களிலும் பகல் இரவு என எந்நேரங்களிலும் இம் மழை பெய்யலாம் எனவும் அத்துடன் இம் மழைவீழ்ச்சியினளவு 150...

வானிலையில் ஏற்பட்டுள்ள தாழமுக்க மாற்றத்தினால் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இன்று (14) அதிக மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து பாகங்களிலும் பகல் இரவு என எந்நேரங்களிலும் இம் மழை பெய்யலாம் எனவும் அத்துடன் இம் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக...

நீண்டகாலமாக இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி நாளை 13ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பூரண கடையடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் அழைப்பு விடுத்துள்ளன. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் விதமாக நாளை வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடையடைப்பு...

அரசியல் கைதிகள் அனைவரதும் விடுதலையை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை(13-11-2015) திட்டமிட்டவாறு நடைபெறும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அறிவித்துள்ளார். அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது பல நூற்றுக் கணக்கானவர்கள் தசாப்தகாலமாக கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளில் வாடும்போது ஒரு சிலருக்கு மட்டும் பிணைவழங்குவதன் மூலம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கு...

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள பூரண ஹர்த்தாலுக்கு மக்களை ஒத்துழைக்குமாறு கோரியுள்ளார் வடக்கு மாகாண அமைச்சர் பா. டெனிஸ்வரன். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- "கடந்த மாதம் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் ஜனாதிபதியின்...

யாழ்.மாவட்டத்தில் வாகனங்களுக்கு புகைப்பரிசோதனை மேற்கொள்ள வருபவர்கள் முக்கிய ஆவணங்களை கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதென்பதுடன் அவ்வாறு கொண்டுவரத் தவறும் பட்சத்தில் புகைப்பரிசோதனை மேற்கொள்ளப்படமாட்டாது என யாழ்.மாவட்டச் செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் புகைப்பரிசோதனையின் போது மூலப் பதிவுச் சான்றிதழ் (Original Certificate of Registration) அல்லது வாகன அடையாள அட்டை மூலப்பிரதி (Original Vehicle Identy Card) இனை...

வடக்கு, கிழக்குக் கடல் பகுதிகளில் கடும் கடல் கொந்தளிப்பு அபாயம் நீடிப்பதால் மீனவர்களை கடலுக்குச் செல்லவேண்டாம் என திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்குத் திசையில் 300 கிலோமீற்றருக்கு அப்பால் மணிக்கு 300 கிலோமீற்றர் வேகத்தில் தாழமுக்கம் மையங்கொண்டுள்ளது. இதனால் கடும் காற்று வீசுவதுடன் மிகக் கொந்தளிப்பான கடலும் காணப்படும்....

All posts loaded
No more posts