Ad Widget

யாழில் அதிகரிக்கும் தொற்று நோய்கள் : மக்களை விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்

யாழில் டெங்கு காய்ச்சல் , வயிற்றோட்டம், எலிக்காய்ச்சல் மற்றும் உண்ணிக்காய்ச்சல் ஆகிய தொற்று நோய்கள் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சத்தியமூர்த்தி, இவை தொடர்பில் சுகாதார பிரிவினரால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வருடத்தில் இதுவரை இந்நான்கு தொற்று நோய்களினால் ஆயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெங்கு காய்ச்ச லினால் ஆயிரத்து 15 பேரும், வயிற்றோட் டத்தினால் 350 பேரும், எலிக்காய்ச்சலினால் 21 பேரும், உண்ணிக் காய்ச்சலினால் 348 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் டெங்கு நுளம்பினாலும், வயிற்றோட்டம் சுட்டாறிய தண்ணீரினை பருகாமையாலும், எலிக்காய்ச்சல் அதிகமாக வயல்களில் வேலை செய்பவர்க ளில் எலியின் மலம் அல்லது கழிவுகளில் உள்ள கிருமிகள் உட்செல்வதாலும், உண்ணிக்காய்ச்சல் நாய் போன்ற வளர்ப்பு மிருகங்களில் காணப்படும் உண்ணிகளாலும் பரப்பப்படுகின்றது.

டெங்கு காய்ச்சல் யாழில் குருநகர் பகுதியிலேயே அதிகமாகவும், வயிற்றோட்டம் யாழ்.மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் பரவலாகவும், எலிக்காய்ச்சல் வயல் வேலை செய்யுமிடங்களிலும், உண்ணிக் காய்ச்சல் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தெல்லிப்பளை, கோப்பாய் ஆகிய இடங்களிலும் அதிகமாக பரவுகின்றது.

இந்நான்கு தொற்று நோய்களிலும் டெங்கு மற்றும் வயிற்றோட்டம் ஆகியன விரை வாக பரவிவருகின்றன. இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் சடுதியாக கடந்த மாதங்களிலும் பார்க்க அதிகரித்து வருகின்றது. இதில் டெங்கு நோயினாலும் எலிக்காய்ச்சலினாலும் இரு வேறு உயிரிழ ப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நோய்கள் அனைத்தினதும் முழுமையான தாக்கம் அடுத்த வருட முற்பகுதியிலேயே தென்பட வாய்ப்புக்கள் உள்ளன. குறிப்பாக டெங்கு நுளம்பின் பெருக்கம் தற்போது ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றன. இதற்கு தொடர்ச்சியான மழையே காரணம். இம்மாதம் முழுவதும் மழை பெய்து ஓய்ந்ததும் அடுத்த மாதம் முழுவதும் தேங்கி இருக்கும் நீர்களில் டெங்கு நுளம் பின் பெருக்கம் பல் மடங்காக அதிகரிக்கும்.

இதனால் நோயாளர்களின் எண்ணிக்கையும் பல மடங்காகும், ஒவ்வொரு வருடமும் இதுவே நடைபெறுகின்றது. இந்த நவம்பர் மாதத்தில் 192 பேரே டெங்கு காய் ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ள போதிலும் கடந்த ஜனவரி மாதத்தில் 348 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு உள்ளனர். ஆகவே வருடத்தின் இறுதி பகுதியிலும் பார்க்க முற் பகுதியில் டெங்கின் தீவிரம் அதிகரிக்கின்றது.

இதனை இம்மாதத்தில் இயலுமான வரையில் கட்டுப்படுத்தாவிட்டால் தை மாதத்தில் இதன் தாக்கத்தை யாழ்ப்பாணத்தில் மாத்திரம் பலநூற்றுக் கணக்கானவர்கள் உணர வேண்டி வரலாம். குறிப்பாக டெங்கு நுளம்புகள் வயல்கள், குளங்களில் பெருகுவதிலும் பார்க்க, நன்னீர் தேங்கும் சில்வர், போத்தல்கள், சிரட்டை, வீட்டு கூரை, மற்றும் அலங்கார சாடிகள் போன்ற இடங்களி லேயே அதிகளவில் பரவுகின்றன.

இவற்றை ஒவ்வொரு வீட்டு உரிமையாளர்களும் இனம் கண்டு அழிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சலில் இருந்து ஓரளவிற்கு விடுபட முடியும் என வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts