- Tuesday
- July 22nd, 2025

இயக்குனர் மோகன்ராஜா இதுவரை இயக்கியுள்ள 7 படங்களில் 6 படங்களில் அவரது தம்பியான ஜெயம் ரவி தான் நடித்துள்ளார். மீதியுள்ள ஒரேயொரு படமான வேலாயுதத்தில் விஜய் நடித்திருந்தார். இவர் இயக்கிய படங்களில் கடைசியாக வெளிவந்த ‘தனி ஒருவன்’ படம் மட்டும்தான் நேரடி தமிழ் படமாக இருந்தது. மற்ற படங்கள் அனைத்தும் தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்டவை....

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவை சேர்ந்த 100 பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் பிரபலங்களின் வருமானம் மற்றும் அவர்கள் எவ்வளவு பிரபலமாக உள்ளனர் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஷாருக்கான் முதல் இடத்தை பிடித்து உள்ளார். கடந்த...

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தங்கமகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையைமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியானது. தனுஷ்-அனிருத் கூட்டணியில் வெளியான மெலோடி பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இது படம் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இப்படத்தின்...

2002-ம் ஆண்டு போதையில் காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்துள்ளது மும்பை உயர்நீதிமன்றம். முன்னதாக, நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க நேற்று மதியம் சுமார் 1.30 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்த சல்மான், பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்தார். நீதிபதி ஏ.ஆர்.ஜோஷி, ‘சல்மான்...

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்தார். ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்ற இப்படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. மோகன் ராஜா இப்படத்தை இயக்கியிருந்தார். தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவியை மிரட்டிய அரவிந்த் சாமி தற்போது மீண்டும் புதிய படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக...

மழை காரணமாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சிங்கம் – 3’ படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. ‘சிங்கம் – 2’ படத்தில் சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்தார். இதில் கல்லூரி மாணவியாக ஹன்சிகா நடித்தார். சிங்கம் – 3’ படத்திலும் சூர்யா ஜோடியாக அனுஷ்கா தான் நடிக்கிறார். இதில் அனுஷ்கா சூர்யாவின் மனைவியாக நடிக்க...

சமீபத்தில் கமல் இணையதளம் ஒன்றுக்கு தமிழக அரசுக்கு எதிராக பேட்டியளித்ததாக வெளிவந்த செய்தி மற்றும் அந்த பேட்டியளித்த கமலை கண்டித்து அமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை இவற்றுக்கெல்லாம் விளக்கம் அளிக்கும் விதமாக கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று? என்று நான் கேள்வி எழுப்பியதுபோல் சில ஊடகங்களில் சற்று நாட்களுக்கு...

சென்னை நகரம் முதல் மழையால் பாதிக்கப்பட்ட போதை நடிகர் சித்தார்த் வட இந்திய ஊடகங்களை விமர்சித்தது ஒளரவிற்கு நிலைமையை அவர்களுக்கு புரிய வைத்தது என்றே தோன்றுகிறது. தற்போது இரண்டாவது முறையாக சென்னை கனமழை மற்றும் வெள்ளம் தாக்கிய போது தேசிய அளவில் அதிக கவனம் பெற்றுள்ளது. நடிகர் சித்தார்த் சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களிடையே உதவிகளை செய்து...

நடிகர் ரஜினிக்கு வருகிற 12–ந்தேதி 65–வது பிறந்தநாள் ஆகும். இந்த பிறந்த நாளை அவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் கொண்டாட திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் உள்ள மக்கள் பெரும் இழப்பை...

சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் வீடுகளின் இரண்டாவது மாடி வரை நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. இந்த வெள்ள பாதிப்புக்கு நடிகர்-நடிகைகளும் தப்பவில்லை. கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம், வளசரவாக்கம், ஈக்காட்டுதாங்கல் பகுதிகளில்தான் நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்த பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள்...

வெள்ள சேத பாதிப்பால் மக்கள் படும் கஷ்டங்கள் தன்னை கவலையில் ஆழ்த்தி உள்ளதாகவும், சென்னைக்கே இந்த நிலைமையா? என்று வியப்படைவதாகவும் கமல்ஹாசன் கூறினார். இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் நேற்று அளித்த பேட்டி வருமாறு:- மழை வெள்ளத்தால் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை, இயற்கை பேரிடர் என்பது குறைத்து மதிப்பிடும் வார்த்தை. சென்னைக்கே இந்த நிலைமை ஏற்பட்டு...

விக்ரம் பிரபு நடிப்பில் ‘வாகா’ படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் ‘வீர சிவாஜி’ படத்தில் விக்ரம் பிரபு நடித்து வருகிறார். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஷாமிலி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்திற்குப் பிறகு ‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய பிரபாகரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ‘சுந்தரபாண்டியன்’ படம்...

சென்னையில் கடந்த சில நாட்களாக அடை மழை பொழிந்து வருகிறது. இந்த மழையால் சாலை முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது....

சிவகார்த்தி கேயன், சூரி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரஜினிமுருகன்' வருகிற 4–ந்தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி... நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் பாடல்கள் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் 'ரஜினி முருகன்' திரைப்படத்தில் இடம் பெற்ற "என்னம்மா இப்படி பண்றீங்களே மா" பாடல் அனைத்து தரப்பு...

இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் நடிகராக மாறிவிட்டனர். பல வெற்றி படங்களையும் கொடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் இடம் பிடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இவர் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். பிரபல தெலுங்கு விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான தில் ராஜு சமீபத்தில் நடந்த விழாவின் போது, தேவிஸ்ரீ...

விஜய் நடிக்கும் அவரது 59–வது படத்துக்கு ‘தெறி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய் நடித்த ‘புலி’ படத்தில் வேதாள உலகம் இடம் பெற்றது. இதையடுத்து அஜீத் படத்துக்கு ‘வேதாளம்’ என்று பெயர் சூட்டடப்பட்டது. இந்த படத்தில் அஜீத், ‘தெறிக்க விடலாமா’ என்று பேசும் வசனத்தை தொடர்ந்து விஜய் படத்துக்கு ‘தெறி’ என்று பெயர் வைத்துள்ளனர் என்று...

தமிழகத்தில் 2 வாரங்களுக்கும் மேல் கனமழை பெய்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நிவாரண பணிகளில் அரசு தற்போது முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசின் வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர்கள் பலர் நிதி உதவி வழங்கி வருகிறார்கள். இந்த நிதியை நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர் பொன் வண்ணன், பொருளாளர் கார்த்தி...

பிரபல நடிகர் கார்த்திக் உடல் நலககுறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வந்தது. மேலும் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ததாகவும், மாரடைப்பு ஏற்பட்டு விட்டதாகவும் செய்திகள் பரவின. கார்த்திக்கின் உடல் நலம் குறித்த வதந்திகளுக்கு சரியான விளக்கத்தை கௌதம் கார்த்திக் பதிவு செய்துள்ளார். அவர் கூறும்போது, "என் அப்பா...

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ‘கபாலி’. இப்படத்தை ரஞ்சித் இயக்கி வருகிறார். சென்னையில் தொடங்கிய முதற்கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தினார்கள். அடுத்த கட்டமாக கோவா செல்ல படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் பாடல் ஒன்று இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மலேசியாவில் ஒரு...

பிரபல இந்தி நடிகர் அமீர்கான், நேற்று முன்தினம் டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “நாட்டின் சகிப்பின்மை பிரச்சினையால் இந்தியாவை விட்டு வெளியேறலாமா? என்று மனைவி கிரண் என்னிடம் கேட்டார். இது நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு அதிகரித்து வருவதையே காட்டுகிறது” என்று குறிப்பிட்டு இருந்தார். அமீர்கானின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது. யாரும் நாட்டை...

All posts loaded
No more posts