- Wednesday
- September 17th, 2025

நடிகர் கருணாஸ் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவாடனை தொகுதியில் அதிமுக சார்பில் நின்று வெற்றி பெற்றார். முதன்முதலாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாஸ், சட்டசபையில் ஜெயலலிதாவை புகழ்ந்துப் பாடி, அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவங்களும் நடந்ததுண்டு. இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்ததாக வெளிவந்த செய்திக்கு பிறகு, ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது....

நடிகரும் பிரபல பத்திரிக்கையாளருமான சோ. ராமசாமி இன்று சென்னையில் காலமானார். சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு பல அரசியல் பிரமுகர்களும், திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் அரசியல் ஆசானாக விளங்கியவர் சோ. சோ வின் நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...

மறைந்த ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகர் விஜய் உள்ளிட்ட திரையுலகினரும், கி.வீரமணி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர். சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அஞ்சலி செலுத்தினார். தமிழக...

தமிழக முதல்வராக செல்வி ஜெயலலிதாவின் மரணத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் 'தமிழ்நாடு மட்டுமல்ல.... இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்' என்று கூறியுள்ளார். இறப்பின் வலி இரட்டிப்பாகின்றது: வைரமுத்து முதல்வர் ஜெயலலிதா...

காபி வித் ‘டி-டி’ என்ற விஜய் டிவி நிகழ்ச்சியை நடத்தி புகழ் பெற்றவர் டிடி. இவர் ஏற்கனவே கமலஹாசன், மாதவன் ஆகியோர் நடித்த நள தமயந்தி, விசில், சரோஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதன்பின் இவருக்கு வாய்ப்புகள் எதுவும் சரியாக இல்லாத காரணத்தினால், முழுநேரமாக டி-வி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது தனுஷ் தயாரித்து...

சிங்கம் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் வெற்றியைத் தொடந்து சிங்கம் மூன்றாம் பாகத்திற்காக சூர்யாவும் இயக்குநர் ஹரியும் மீண்டும் கூட்டணி அமைத்தனர்.இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் சமீபத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து,டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி சிங்கம் 3 வெளியாகும் என கூறப்பட்டது.இந்நிலையில் சிங்கம்...

'தெறி' படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் நடித்துள்ள பைரவா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.பைரவா திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதால்,படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் “ரஃப் கட்” காட்சிகளை பார்த்த இளைய தளபதி விஜய்,இயக்குநர் பரதனை பாராட்டியுள்ளார்.”என்கிட்ட சொன்னதுக்கு மேலயே செஞ்சுருக்கிங்க..உங்க கடுமையான உழைப்புக்கான மரியாதை பைரவா காட்சிகளை...

சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் பொலிவூட் நடிகர் சல்மான்கான் தொடர்பில் நடிகை எமி ஜக்சன் மனந்திறந்துள்ளார். “ரஜினிகாந்துடன் 2.0 திரைப்படத்தில் நடித்தது இனிமையான அனுபவம். அந்த திரைப்படத்தின் முதல் தோற்றத்தை வெளியிடும் நிகழ்ச்சியை மும்பையில் நடத்தி முடித்தனர். அந்த விழாவுக்கு செல்வதற்கு முன்னால், நானும் ரஜினிகாந்தும் ‘2.0’ படப்பிடிப்பில் முக்கிய காட்சி ஒன்றில் நடித்துக்கொண்டு இருந்தோம்....

ஒற்றுமையாக இருக்க வேண்டிய சங்கத்தை தற்போது பிளவுபடுத்தி உள்ளனர் என சரத்குமார் குற்றம் சாட்டி உள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஐதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நடிகர் சங்க...

‘நடிகராவதற்கு முன்பு சூர்யா தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து அங்கு தரையை சுத்தம் செய்து இருக்கிறார்’’ என்று நடிகர் சிவகுமார் பட விழாவில் பேசினார். அசோக் செல்வன்–பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்துள்ள படம், ‘கூட்டத்தில் ஒருத்தன்.’ டி.ஜே.ஞானவேல் டைரக்டு செய்துள்ளார். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, ரமணியம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு...

கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘முத்துராமலிங்கம்’. இப்படத்தை ராஜதுரை என்பவர் இயக்கி வருகிறார். இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் நெப்போலியன், பிரியா ஆனந்த், வம்சி கிருஷ்ணா, விவேக், சுமன், பெப்சி விஜயன், சிங்கம் புலி, சிங்கமுத்து என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய்...

லண்டன் நடிகை எமி ஜாக்சன்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது அதிரடியான போட்டோக்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்து வந்தார். அவரைத் தொடர்ந்து இலியானா தண்ணீருக்குள் பிகினி அணிந்தபடி நீந்தும் ஒரு வீடியோவை சில வாரங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பு கூட்டினார். அதை பல லட்சம் ரசிகர்கள் கண்டுகளித்தனர். அதன்பிறகு...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக உக்ரைன் நாட்டு லொகேஷனையே சென்னையில் உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர். பிரமாண்டம் என்ற வார்த்தைக்கு புது அர்த்தம் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். ரஜினி நடிக்கும் 2.0 படத்தில் இடம்பெறும் ஒரு டூயட் பாடலை உக்ரைனில் படம்பிடிக்கத்தான் முதலில் முடிவு செய்திருந்தாராம். ஆனால் உக்ரைன் போக முடியாத சூழல். ரஜினியும் வெளிநாட்டுப் பயணத்தை விரும்பவில்லை....

ராஜாராணி படத்தின் ஹிட்டுக்கு பிறகு விஜய்க்காக இரண்டு வருடங்களுக்கு மேல் காத்திருந்தார் அட்லி. பின்னர் தெறி படத்தை இயக்கினார். முதல் படம் எப்படி மெளனராகம் பாணியில் இருப்பதாக விமர்சிக்கப்பட்டதோ அதேபோல் தெறி படமும் சத்ரியன் போன்று இருப்பதாக கூறப்பட்டது. என்றாலும், இந்த விமர்சனங்கள் எதுவும் படத்தின் வெற்றியை பாதிக்கவில்லை. ஆக, இரண்டு படங்களையுமே ஹிட்டாக கொடுத்து...

தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், மற்றும் ராதாரவி ஆகிய இருவரும் நிரந்தரமாக நீக்கப்பட்டது தொடர்பாக நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் விளக்கம் அளித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் சரத்குமார், ராதாரவி ஆகிய இருவரையும் நிரந்தரமாக நீக்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழுவிற்கு பிறகு,...

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்திருக்கிறது என்று கூறியிருப்பது விதிகளின் படி சரியானதா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, அந்த கூட்டத்தின் வாயிலாக எங்களை நிரந்தரமாக நீக்கியிருக்கிறோம் என்று கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக்...

ட்விட்டரில் அஜித் ரசிகர்களுக்கும் ஜி.வி. பிரகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சமீபத்தில் வெளிவந்த கடவுள் இருக்கான் குமாரு படம் குறித்து ரசிகர்கள் சிலர் விமரிசனங்களை முன்வைத்தார்கள். இதையடுத்து, அஜித் ரசிகர்களை ஆமைகள் என்று ஜி.வி. மறைமுகமாகக் கூறியதால் அஜித் ரசிகர்கள் ஜி.விக்கு எதிராக ட்விட்டரில் திரண்டார்கள். பதிலுக்கு விஜய் ரசிகர்கள் ஜி.விக்கு ஆதரவாகக் களமிறங்கினார்கள். மேலும்...

மதுரை மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்தனர். அதில், தங்களுக்கு 3-வது மகனாக பிறந்த மகன் தனுஷ் என்றும், பதினொன்றாம் வகுப்பு பயின்ற போது அவர் சென்னைக்கு ஓடி விட்டதாக தெரிவித்து இருந்தனர். மேலும் அந்த மனுவில், “பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை....

கபாலி படத்திற்கு பிறகு மற்றொரு தமிழ் படத்தில் ராதிகா ஆப்தே நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிர்வாண காட்சிகளில் நடித்ததற்காக இந்தியா முழுவதும் ராதிகா ஆப்தேவுக்கு எதிர்ப்பு கிளம்பினாலும்,எதை பற்றியும் கவலைப்படாமல் தனது நடிப்பு பணியை சிறப்பாக செய்து வருகிறார் .குறிப்பாக சவாலான கதாபாத்திரங்களை ராதிகா ஆப்தே தேடித்தேடி நடித்து வருகிறார். பாலிவுட்டில் அவர் சர்ச்சைக்குரிய...

'மின்னலே' படத்தின் கதையை இயக்குநர் மணிரத்னத்திடம் சொல்ல வைத்த மாதவனை என்றைக்குமே மன்னிக்க மாட்டேன் என இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார். கெளதம் மேனன் முதன்முதலாக தமிழில் இயக்கிய திரைப்படம் “மின்னலே”. இந்த திரைப்படத்தில் மாதவன் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்புதான் மணிரத்னத்தின் இயக்கத்தில் 'அலைபாயுதே 'படத்தில் மாதவன் அறிமுகமாகியிருந்தார். அலைபாயுதே படம்...

All posts loaded
No more posts