Ad Widget

“மாதவனை மன்னிக்கவே மாட்டேன்” : கெளதம் மேனன்

‘மின்னலே’ படத்தின் கதையை இயக்குநர் மணிரத்னத்திடம் சொல்ல வைத்த மாதவனை என்றைக்குமே மன்னிக்க மாட்டேன் என இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

gautham-menon-madhavan

கெளதம் மேனன் முதன்முதலாக தமிழில் இயக்கிய திரைப்படம் “மின்னலே”. இந்த திரைப்படத்தில் மாதவன் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடிப்பதற்கு முன்புதான் மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘அலைபாயுதே ‘படத்தில் மாதவன் அறிமுகமாகியிருந்தார். அலைபாயுதே படம் சூப்பர் ஹிட்டானதால்,மாதவனுக்கு பல தமிழ்ப்பட வாய்ப்புகள் தேடி வரத் துவங்கியிருந்தன.

இந்நிலையில் மாதவனிடம் தனது மின்னலே கதையை கெளதம் மேனன் சொல்லியிருந்தார்.ஆனால் முதலில் தன்னை தமிழில் அறிமுகப்படுத்திய மணிரத்னத்திடம் இந்த கதையை கூறுமாறும்,அவருக்கு பிடித்திருந்தால் இந்த படத்தில் நடிப்பதாகவும் மாதவன் தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து மணிரத்னத்திடம் கெளதம் மேனன் ,தனது மின்னலே கதையை கூறினார்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த கெளதம் மேனன்,”என்னை மணிரத்னத்திடம் கதை சொல்ல வைத்து தர்மசங்கடத்தில் சிக்க வைத்த மாதவனை என்றைக்குமே மன்னிக்க மாட்டேன்.” என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

“மணி சார் என்னுடைய கதைக்கு ஓகே சொல்கிறாரா,இல்லையா என்பதை விட அவரிடம் கதை சொல்லப் போவதை நினைத்துதான் பதட்டமாக இருந்தது. அந்த நாள் என்னால் மறக்க முடியாத ஒன்று. எனக்கு முன்மாதிரியாக இருந்த மணி சாரிடம் ஒரு ’சப்ப’ கதையை கூறப் போவதை பற்றிதான் என் மனது யோசித்துக் கொண்டிருந்தது.மணி சாரின் நேரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது எனக்கு தெரியும்.ஒரு மணி நேரம் அவருக்கு மின்னலே கதையை கூறினேன். அவரை என் கதை மூலம் கவர வேண்டும் என நான் முயற்சித்தது, எனக்கு மேலும் பதட்டத்தை அதிகரித்தது. இதற்காகவே மாதவனை நான் மன்னிக்க மாட்டேன்.”என கெளதம் மேனன் அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

ஆனால் கெளதம் மேனன் கூறிய மின்னலே கதை மணிரத்னத்திற்கு பிடிக்கவில்லை.அதன் பிறகு எப்படியோ மாதவன் அந்த படத்தில் நடித்து,அந்த படம் சூப்பர் ஹிட்டாகவும் ஓடியது குறிப்பிடத்தக்கது.

Related Posts