கையடக்க தொலைபேசி வாங்கினால் வெங்காயம் இலவசம்!!

தமிழகத்தில், ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற தொலைபேசி கடைக்காரரின் அறிவிப்பு, வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆடம்பர பொருளான தங்கத்தின் விலையைப் போன்று, மக்களின் அத்தியாவசிய தேவைப் பொருளான வெங்காயத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வருகிறது.... Read more »

பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த 27-ம் தேதி இரவு கால்நடை பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட... Read more »

“அனைத்து மக்களுக்கு சமனான ஆட்சியை வழங்க வேண்டியது அவரது கடமை” கோட்டாபய தொடர்பில் கமல்ஹாசன் கருத்து!!

மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் என்ற ரீதியில் அனைத்து மக்களுக்குமான ஆட்சியினை வழங்க வேண்டியது நல்ல தலைவரின் கடமை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஒரிசா மாநிலத்தில் வழங்கப்பட்ட கௌரவ கலாநிதி பட்டத்தினை ஏற்றுக்கொண்டு தமிழகம் திரும்பிய அவர்... Read more »

மருத்துவமனையில் இருந்து கல்லறை: சுஜித்தின் உடல் அடக்கம்

திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து, இன்று (செவ்வாய்கிழமை) சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் சுஜித்தின் உடல் பாத்திமா புதூர் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 82 மணிநேர மீட்புப்பணிக்கு பின், குழந்தை சுஜித்தின் உடல்... Read more »

சுஜித் வில்சனை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு தீவிர முயற்சி – விரிவான தகவல்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், கடந்த 25-ம் தேதி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 63 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள்... Read more »

ஆயுள் தண்டனைக் கைதியான சரவணபவன் உரிமையாளர் மரணம்!

சைவ உணவு விடுதிகளில் புகழ்பெற்ற சரவணபவன் உணவகத்துக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளது. இதன் உரிமையாளர் ராஜகோபால். இவரது நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதியைத் திருமணம் செய்தால் மேலும் வளர்ச்சியடையலாம் என்று ஜோதிடர்கள் கூறியதையடுத்து ஜீவஜோதியை... Read more »

தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் மாவை சேனாதிராஜா!!!

தி.மு.க. தலைவர் ஸ்டாலினை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று சந்தித்தார். இதுபற்றி, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கருணாநிதி மறைவுக்கு பின், தி.மு.க., தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதன்பின், இலங்கையில் உள்ள, தமிழர் தலைவர்கள் யாரும், ஸ்டாலினை சந்தித்து... Read more »

பிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடிதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கையளிப்பு !

திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினிடம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கடிதம், நா.தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாட்டு பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தலில் வெற்றியீட்டிய திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணிக்கு தலைமைதாங்கிய மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கூறும் வகையில் அமைந்துள்ள இக்கடித்தில், இந்தியாவின்... Read more »

சஹ்ரானின் இரு சகோதரர்கள் கேரளாவில் கைது!

கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை திட்டமிட்ட மொஹமட் சஹ்ரானின் காசிமின் சகோதரர்கள் இருவர் இந்தியாவின் கேரளாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். Read more »

இலங்கை தாக்குதல் தொடர்பில் இந்தியாவில் விசாரணைகள் ஆரம்பம்!!

ஐ.எஸ் தீவிரவாத குழுவினரை தேடும் பலத்த பணிகளுக்கு மத்தியில் இந்தியா இறங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நேற்று பலத்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அங்கு வீடொன்றிலிருந்து அராபிய எழுத்துக்களில் எழுதப்பட்ட ஆவணங்கள் சிலவும், DVD ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத்... Read more »

12 மணித்தியாலத்துக்குள் ஃபானிப் புயல்!

இந்திய வானிலை அவதான நிலையம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் ஃபானி புயலாக வலுப்பெறுகிறது என்று இந்திய வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள தகவலில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு... Read more »

காற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு

தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 27, 28 ஆகிய திகதிகளில் புயலாக வலுப்பெறும். தமிழக கரையை நோக்கி புயல் நகர கூடும். 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை... Read more »

இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல்

இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல் ஒன்று வர இருப்பதாக n சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலைய அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல் ஒன்று வர இருக்கிறது. இதனால்... Read more »

இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் – ரஜினிகாந்த்

இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள 2.0 திரைப்படம் இந்தியா முழுவதும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்ற நிலையில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் இந்தியா டுடே சார்பில் எடுக்கப்பட்ட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு... Read more »

இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது

இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது எனவும் எந்தவிதமான நன்மையும் கிடைக்கப்போவது இல்லை எனவும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு... Read more »

பிரபாகரன் நலமுடன் உள்ளார்! உரிய நேரத்தில் வெளிவருவார்!!- நெடுமாறன்

`இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரபாகரன் தலைமை ஏற்பார்’ என்று பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ”இலங்கைக் கடற்படையினரால்... Read more »

யாழ்ப்பாணம் வருகிறார் பன்னீர் செல்வம் !!

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் தமிழக கல்வி அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ஆகியோர் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளனர். யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு ஒரு தொகை நூல்களைக் கையளித்தல், மற்றும் பிரமுகர்களுடனான சந்திப்புக்காக அவர்கள் வருகை தரவுள்ளனர்... Read more »

கேரள வெள்ள நிவாரணப் பொருட்களுடன், பிரபாகரனின் படம் பொறித்த பதாகைகள்

கேரளாவில் வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கச் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்மாநில காவற்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அடை மழை மற்றும் வெள்ளத்தில் கடுமையான பாதிப்புக்கு உள்ளான கேரள மாநிலம் மெல்ல மீண்டு வருகிறது. இந்த... Read more »

திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டது

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து முதலில் கோபாலபுரம் இல்லத்தில்... Read more »

கருணாநிதி விரைவில் குணமடைய மைத்திரிபால சிறிசேன பிரார்த்தனை!

கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிய தமிழகம் சென்றுள்ள இ.தொ.காவின் தலைவரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாழ்த்து கடிதத்தை திராவிட முன்னேற்ற கழக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கையளித்துள்ளார். தமிழகத்தின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியை தமிழக... Read more »