- Wednesday
- August 19th, 2026
இலங்கையிலிருந்து 269 பேரை கனடாவுக்கு அனுப்புவதாக ஆசைகாட்டி பலகோடி ரூபாவைச் சுருட்டிக் கொண்டு ஆபிரிக்க நாடுகளான டோஹோ மற்றும் மாலி முதலான நாடுகளுக்கு கூட்டிச்சென்று அநாதரவான நிலையில் அவர்களைக் கைவிட்ட பிரதான சந்தேக நபரான அருணகிரிநாதன் ஜெயரூபனைக் கைதுசெய்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பலகோணங்களிலும் விசாரணைகளை முடுக்கிவருவதாகவும் கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி அகலிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில் வீதிக்கு காப்பெற் போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கடந்த ஓராண்டு காலமாக காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீதி அகலிப்பு பணிகளின் காரணமாக இந்த வீதியால் பயணம் செய்யும் வாகனங்களும் பொது மக்களும் பாடசாலை மாணவாகளும் பெரும் சிரமங்களை அனுபவித்து வந்துள்ளனர். இன்றும் தொடர்ந்து அந் நிலையே காண்படகிறது....
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்துடன் மேலதிக எரிபொருள் கட்டணம் ஒன்றை அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் டாக்டர் ஜயதிஸ்ஸ டி கொஸ்தா தெரிவித்துள்ளார்மின்சார உற்பத்திக்காக எரிபொருள் கொள்வனவுத் தொகை அதிகரித்துள்ளமையை சமாளிப்பதற்காக இந்த மேலதிக எரிபொருள் கட்டணம் அறவிடப்படுகின்றதாகவும்.உலக சந்தையில் எண்ணெய் விலை குறைவடைந்தால் இப்புதிய...
கடந்த வார இறுதியில் இருந்து சிறீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ADSL புரோட்பாண்ட் இணைய சேவைகளில் நாடுமுழுவதிலும் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கி இணைய சேவைகள் நேற்றிரவில் இருந்து மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.இது தொடர்பாக யாழ் ரெலிகொம் அலுவலகத்தில் இருந்து கிடைத்த தகவல்களின்படி பொறியலாளர்களினால் மேற்படிப்பிரச்சனை சீர்செய்யப்பட்டுவிட்டதாக நேற்றிரவு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இன்று காலை ADSL இணையப்பாவனையாளர்கள் மத்தியில்...
அமெரிக்க டொருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று 120.10 ரூபாவாக குறைவடைந்தது. வரலாற்றில் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மிகக் குறைந்த பெறுமதி இதுவாகும். நாணயப் பரிமாற்ற வீதத்தில் இலங்கை மத்திய வங்கி தனது தலையீட்டை விலக்கிக் கொண்டதையடுத்து இவ்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர்கள் நேற்றுத் திங்கட்கிழமை முதல் விரிவுரைகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விஞ்ஞானபீட மூன்றாம் வருட மாணவர் ஒருவரை பல்கலைக்கழக நிர்வாகம் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்திய செயலைக் கண்டித்து இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் குதித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது:- (more…)
யாழ்ப்பாணத்திலிருந்து தொலைக்காட்சி சேவை நடத்திவரும் நிறுவனமொன்று விநியோகித்த டொல்பின் தொலைக்காட்சி சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தொலைகாட்சி சேவைக்கென பெருமளவு பணத்தைச் செலுத்தி இணைப்புக்களை வாங்கிய பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, (more…)
சிறீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ADSL புரோட்பாண்ட் இணைய சேவைகளில் நாடுமுழுவதிலும் கடந்த வாரத்தில் இருந்து தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இணைப்பு வகைகளில் ஒரு சில தவிர்ந்த ஏனையவற்றில் இந்தத்தடங்கல் ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது. கணக்குகளுக்கான கடவுச்சொல் பயனாளர் சொல் ஆகியவற்றினை பரிசோதிக்கும் சேவரில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இந்தத்தடங்கல் ஏற்பட்டுள்ளதாக ரெலிகொம் இன் தொழில்நுட்பப்பிரிவில்...
”போருக்கு பிந்தைய சூழலில் திறன் அபிவிருத்தி ” என்ற தொனிப்பொருளில் யாழ் பல்கலைக்கழகம் வரும் ஜூலை 20ம் திகதி நடாத்தவிருக்கும் மாநாட்டுக்காக ஆய்வுக்கட்டுரைகள் கோரப்பட்டிருக்கிறது பட்டியலிடப்பட்ட துறைகளில் இதுபற்றி ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலதிக தகவல்களை http://www.jfn.ac.lk/juice2012/ இல் பார்வையிடலாம்.பல்கலைக்கழக மாணவர்கள் துறைசார் வல்லுனர்கள் கூட ஆய்வுகளை சமர்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது...
கொழும்பில் அண்மையில் இயற்கை பண்பாட்டு மரபுவளப் பாதுகாப்பு மையம் நடத்திய பசுமை அமைதி விருதுப் போட்டியில் யாழ். இந்துக் கல்லூரி மாணவர் ஒருவர் வடமாகாண ரீதியில் முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.யாழ். இந்துக் கல்லூரி மாணவரான செங்கதிர்ச்செல்வன் சேந்தன் என்ற மாணவனே வட மாகாண ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இம்மாணவருக்கான தங்கப்பதக்கத்தை பேராசிரியர் எஸ்.ஏ.நோபேற் வழங்கிக்...
நாட்டை பாதுகாத்து கௌரவப்படுத்தும் மாணவ சமூதாயம் எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகர்த்தக் கூடிய ஆளுமையுள்ள பிரஜைகள் ஆசிரியர்களினால் உருவாக்கப்பட வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் யாழ். மத்திய கல்லூரியில் 4.1 மில்லியன் ரூபா செலவில் இளைஞர்களுக்கான நாளை அமைப்பினால் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை...
ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்துக்ககான விஜயத்தை ஒட்டி யாழ்ப்பாணத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. விடுதலைப்புலிகளுடனான போர்க்காலங்களைப் போல் யாழ். நகரை அண்டிய பகுதிகளில் இராணுவ மோட்டார் சைக்கிள் படையினர் உட்பட பல நூற்றுக் கணக்கான படையினரும் பொலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.கண்களை மூடிக் கவசமிட்ட பீல்ட் பைக் படையினர் பொது மக்களைக் கிலி கொள்ள வைக்குமளவுக்கு நகர வீதிகளில் உறுமியபடி...
யாழ்ப்பாணத்திற்கான நேரடி மின்விநியோகம் இன்று உத்தியோக புர்வமாக ஆரம்பித்து வைப்பப்படவுள்ளது. இந்த நேரடி மின்விநியோகத்தை கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ள மின்சக்தி மின்வலு அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க ஆரம்பித்து வைக்கவுள்ளார்.தென்னிலங்கையிலிருந்து வரும் நீர் மின்வலு வழங்கலின் மூலமான 33,000 உயர் மின்அழுத்த இணைப்பு வடமாகாணத்துக்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாக வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் வடமாகாணத்துக்கான...
யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளதாக வடமாகாண ஆளுநரின் செயலளர் எஸ்.இளங்கோவன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இவ் அபிவிருத்திக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர் மற்றும் அரச திணைக்களங்கள், பொது அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்...
வெள்ளிக்கிழமை (03-02-2012) காலை 6.00 மணியளவில் யாழ் இந்துக் கல்லூரியின் 2012 ஆம் ஆண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டியின் முதல் நிகழ்வான 32ஆவது வீதியோட்டம்(5km) நடைபெற்றது. இந்நிகழ்வு இளநிலைப் பிரிவு, முதுநிலைப் பிரிவு எனும் இரு கட்டங்களாக நடைபெற்றன. முதலாவதாக நடைபெற்ற இளநிலைப் பிரிவு போட்டியை யாழ் இந்துக் கல்லூரியின் இங்கிலாந்து பழையமாணர்சங்கத்தலைவர் திரு..P.விவேகானந்தா ஆரம்பித்து...
ஹோட்டல்ஸ் பிறைவேட் லிமிட்டட் நிறுவனத்தால் யாழில் புதிதாக அமைக்கப்படவுள்ள 14 மாடி கொண்ட “ஜெட்விங் யாழ்” உல்லாச விடுதிக்கான அடிக்கல் நாட்டுவிழா (03.02.2012) வெள்ளிக்கிழமை மதியம் 01.00மணிக்கு நடைபெற்றது.ராஜன் ஆசீர்வாதம் தலைமையில் நடைம்பெற்ற இலக்கம் 37 மகாத்மா காந்தி வீதியல் புதிதாக அமைக்கப்படவுள்ள இந்த ஹோட்டலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், (more…)
மருந்துப் பொருள்களைத் தவிர ஏனைய பொருள்களை மொத்த மாகவோ சில்லறையாகவோ விநியோகம் செய்யும் வர்த்தகர்கள், ஒருவீதம் விற்பனை வரியைச் செலுத்தியே ஆகவேண்டும் என்று யாழ்.பிராந்திய உள்நாட்டு இறை வரித் திணைக்களப் பிரதி ஆணையாளர் பா.சிவாஜி தெரிவித்தார்.யாழ்.வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் உள்ள பொருள் விநியோகம் செய்வோருக்கான கலந்துரையாடல் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. (more…)
தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சர்வதேசம் வழங்கும் சந்தர்ப்பங்களை இலங்கை அரசு தொடர்ந்தும் தட்டிக்கழிக்குமானால், இந்த நாட்டை சர்வதேச சமூகம் உலகில் நிராகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் சேர்த்துவிடக் கூடும். அதுமட்டுமன்றி, தமிழர்களுடன் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயலாமல் அரசு தொடர்ந்தும் போர் வெற்றி மமதையில் இருக்குமானால், ஆசியாவின் ஆச்சரியமாக அன்றி "அழிவு' ஆகவே இலங்கை தோற்றம் பெறும்....
வாகன சாரதிகளுக்கு எதிராக மோட்டார் வாகன போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வாகன சாரதிகளும், முன் ஆசனத்திலிருந்து பயணம் செய்பவர்களும் ஆசனப்பட்டியணியாது செல்லும் போது போக்குவரத்து காவற்துறையினரால் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு அதே இடத்தில் தண்டப்பண அறவீடு வழங்கப்பபடும், (more…)
ஊர் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களை கொண்டிருக்கும் கட்சிக்கு எப்படி வாக்களிக்க முடியும் ?ஈ.பி.டி.பி கட்சியை இணைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டதனாலாயே வடக்கில் அரச கட்சி மண் கவ்வ வேண்டி ஏற்பட்டது. இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்தார் யாழ். மாவட்டத்திலுள்ள அரச வேலையற்ற பட்டதாரி ஒருவர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
