முல்லைத்தீவு முன்னாள் நீதவானுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை : சி.ஐ.டி. வழங்கிய முழுமையான அறிக்கை

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி சரவணராஜாவுக்கு உயிருக்கு எவ்வித அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் திடீரென வெளிநாடு சென்றமை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 25ஆம் திகதி இந்தியா செல்வதற்கு நீதிபதி விடுப்பு கோரி விண்ணப்பித்தபோது, அதற்கு அனுமதி வழங்கப்பட்டு செப்டம்பர் 24ஆம் திகதி அவர் திடீரென வேறு நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்...

நீதித்துறையின் சுயாதீனத்துவத்தை உறுதிசெய்வதில் தலையிடுங்கள் – 7 தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டுக்கடிதம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா விவகாரத்தில் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி 7 தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து சர்வதேச சமூகத்துக்கு எழுதியுள்ள கடிதம், வெள்ளிக்கிழமை (13) உரிய இராஜதந்திரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் மற்றும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாகப் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டு கடந்த மாத இறுதியில் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு அவரது...
Ad Widget

யாழில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியில் இலங்கை வங்கிக்கு அருகாமையில் உள்ள ஒழுங்கை ஒன்றில் இருந்து குறித்த சடலமானது நேற்று (12.10.2023) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. இதன் போது சம்பவ இடத்துக்குச் சென்ற யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை...

பதில் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை: இஸ்ரேல் விடுத்த பகிரங்க அறிவிப்பு!!

பணயக் கைதிகளாக அழைத்து செல்லப்பட்டுள்ள தங்களது நாட்டு பிரஜைகள் விடுவிக்கப்படும் வரை காசா மீதான பதில் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவுக்கான எரிபொருள், நீர் மற்றும் உணவு விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ள நிலையில் காசாவில் மின்சாரம் துண்டிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹமாஸ் தரப்பினர் நடத்திய தாக்குதல்களில் இஸ்ரேலில் இதுவரையில் 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்....

யாழில் ஊடக சந்திப்பை நடாத்திய கலா மாஸ்டர்!

NORTHERNUNIஇன் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தகதி யாழ்ப்பாணம் முத்தவெளிஅரங்கிலே இடம்பெறவுள்ளது. இது தொடர்பான ஊடக சந்திப்பு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. ஊடக சந்திப்பில் தென்னிந்தியாவின் பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர்...

இலங்கை வான் பரப்பிலிருந்து விழுந்த மர்ம பொருளால் குழப்பத்தில் மக்கள்

இலங்கையின் சில பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில் வானத்தில் இருந்து மர்ம பொருள் விழுந்ததால் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்துள்ளனர். பொலன்னறுவை, திம்புலாகலை, வெலிகந்த, மஹாவலி உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில் வானத்தில் இருந்து அடையாளம் தெரியாத சிலந்தி வலை போன்ற வெள்ளை நூல் விழுந்ததால் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்துள்ளனர். நேற்றுமுன்...

சிறுமி வைசாலி விவகாரத்தில் மூன்று பேரை உடனடியாக கைது செய்ய கோரிக்கை!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு யாழ். நீதவான் நீதிமன்றில் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துண்டிக்கப்பட்ட கை தொடர்பில் மருத்துவப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வைத்தியர்...

தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம் :மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்திற்கு இடையில் நடந்து வரும் போர் ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்து வரும் நிலையில், தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காசா மீதான தமது வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவம் அதிகமான இராணுவ துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. கனரக இராணுவத் தளவாடங்களுடன்...

விபத்தில் சிக்கி உயிரிழந்த பருத்தித்துறை பொலிஸ் நிலைய பெண் கான்ஸ்டபிள்!

அம்பேபுஸ்ஸ - திருகோணமலை வீதியில் தலகிரியாகம பகுதியில் மோட்டார் சைக்கிளும் ரிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளதாக தலகிரியாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 24 வயதான பெண் பொலிஸ் கான்ஸ்டபிளான...

யாழில் முச்சக்கர வண்டி உரிமையாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்தில் இன்று காலை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, ஆரம்பமாகிய பேரணி யாழ் நகரில் முடிவடைந்தது. அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கர வண்டியினை தமது...

நெல்லியடியில் கைக்குண்டுடன் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று (10) செவ்வாய்க்கிழமை கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி துண்ணாலை பகுதியில், நெல்லியடி பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பாட்டார். யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும், இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் குறித்த நபருக்கு தொடர்பு இருப்பதாவும், வவுனியாவை சேர்ந்த நபர் நீண்ட...

வெளியானது கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை!

2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை நடாத்தப்படவுள்ளது. பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவிருந்த...

யாழில் அமெரிக்க இராஜாங்க அதிகாரிகளை சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்

ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க அதிகாரிகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பானது யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்(10-10-2023) இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க.சுகாஷ், மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகர் மற்றும் மகளிர் அணிச் செயலாளர் கிருபா கிரிதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்....

பாலஸ்தீனியர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் பாஸ்பரஸ் குண்டு தாக்குதல்!!

தடை செய்யப்பட்ட வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாக பாலஸ்தீனியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நிகழ்த்திய ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளது. இந்நிலையில், காஸா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலால், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியது. மேலும், தடைசெய்யப்பட்ட வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல்...

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் முதல் மின்கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(10.10.2023) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார். கட்டணத்தை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நாள் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்...

சங்கானை பொதுச் சந்தைக்குள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் – பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்களா?

வலிகாமம் மேற்கு சங்கானை பொதுச் சந்தைக்குள் இரவு வேளை அத்துமீறி நுழைந்த குழு ஒன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி மிரட்டிவிட்டுச் சென்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திங்கட்கிழமை இரவு சங்கானை பொதுச்சந்தை பாதுகாப்பு நடவடிக்கையில் தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்புக் கடமையாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன் போது, அங்கு வந்த போதையில் இருந்தவர்கள்...

ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் தொடர்பான அறிவிப்பு!

ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சைகான மேலதிக வகுப்புகளை நாளை நள்ளிரவின் பின்னர் நடத்தவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை நாடளாவிய ரீதியில் இரண்டாயிர்தது 888 பரீட்சை மத்திய நிலையங்களில் எதிர்வரும் 15 ஆம் திகதி தரம்...

இந்தியா – இலங்கைக்கு இடையிலான கப்பல் சேவை பிற்போடப்பட்டது

இந்தியா - இலங்கைக்கு இடையிலான கப்பல் சேவை இன்று ஆரம்பமாவிருந்த நிலையில் திடீரென பிற்போடப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழகம் நாகப்பட்டினம் - இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை இன்று (10) ஆரம்பமாகவிருந்த நிலையில் தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. செரியாபாணி கப்பலின் பரீட்சார்த்த...

அனைத்து பொருட்களுக்கமான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்!!

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கோர விபத்து : இரு விசேட அதிரடிப்படையினர் பலி..! 6பேர் படுகாயம்!!

வவுனியா வெளிக்குளம் பகுதியில் திங்கட்கிழமை (9) இரவு 9.30 மணியளவில் ஏற்பட் விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திங்கட்கிழமை (9) 9.30 மணியளவில் மடுகந்தை பகுதியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த அதிரடிப்படைக்கு சொந்தமான...
Loading posts...

All posts loaded

No more posts