பொது முடக்கத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் கோரும் எட்டு கட்சிகள்!!

பொது முடக்கத்திற்கு, தமிழ் பேசும் மக்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் நாம் உரிமையுடன் வேண்டுகின்றோம் என எட்டு கட்சிகள் கூட்டாக கோரியுள்ளன. யாழ். ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தீவு சுதந்திரம் அடைந்து, 75 வருடங்கள் கடந்து விட்ட போதிலும்,...

மருத்துவமனையின் மீது தாக்குதல் – 500 பேர் பலி!

காசாவில் உள்ள அஹ்லி அரபு மருத்துவமனையைத் தாக்கிய இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு 500 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடைவிடாத தாக்குதல்களில் இருந்து மருத்துவ சிகிச்சையை...
Ad Widget

குருந்தூர் மலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அதிகாரிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலைக்கு நேற்று (17) புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது குருந்தூர்குளம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர். கடந்த மாத இறுதியில் குருந்தி ராஜமஹா விகாரை அமைந்துள்ள தொல்பொருள் பகுதிக்கு சொந்தமில்லாத காணியில் இருந்து 3...

வட, கிழக்கு ஹர்த்தாலுக்கு தமிழரசு பூரண ஆதரவு – சுமந்திரன்

வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு தமிழரசுக்கட்சி பூரண ஆதரவு அளிக்கவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள அறிவிப்பில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானாகவும் இருந்த திரு சரவணராஜா, தனது நீதித்துறை கடமைகளை செய்த காரணத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவியிலிருந்து இராஜினாமா...

யாழில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு!!

குருநகர் பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய சக்திவாய்ந்த வெடிபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வடக்கு கடற்படைக் கட்டளைப் பிரிவினரால் நேற்று (17.10.2023) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்துக்கிடமான பொதியொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பொதியிலிருந்து ஒரு கிலோகிராமும் 950 கிராமும் நிறையுடைய வெடிபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், வெடிபொருளுக்கு பயன்படுத்தப்படும் ஒருவகை நூலும் குறித்த...

யாழ்ப்பாணப் பல்கலையிலுள்ள மே 18 நினைவுத்தூபியை அகற்ற மீண்டும் முயற்சி!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மே 18 நினைவுத் தூபியை மீண்டும் அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு பல தரப்புகளும் பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது. இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவரும், விசுவமடு மற்றும் கட்டுடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமகன்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இருவருமாக மேற்கொண்ட முறைப்பாடுகளையடுத்து அது தொடர்பில் தீவிர விசாரணைகள்...

இசையமைப்பாளர் சந்தோஷிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் அவசர கடிதம்!!

யாழ்ப்பாணத்தில், தென்னிந்திய பிரபல இசையமைப்பாளரால் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியானது எதிர்வரும் தினங்களில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இசை நிகழ்ச்சியை அந்த நாட்களில் நடாத்த வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளனர். குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தாங்கள்...

யாழ்.காங்கேசன்துறை ஐனாதிபதி மாளிகையை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் கைச்சாத்து!

யாழ்.காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி மாளிகையானது தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (SLIIT) சுமார் 50 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இதன் முதலீட்டு மதிப்பு அண்ணளவாக 5000 பில்லியன் ரூபாய்கள். கனேடிய முதலீட்டாளருடன் இணைந்து இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இதனை தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்யவுள்ளது. அதற்கான...

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் எரிபொருள் இருப்பை முகாமைத்துவம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபணம் தெரிவித்துள்ளது. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் எதிர்வரும் இரண்டு மாதங்களின் பின்னர் நாட்டில் எரிபொருள் கையிருப்பு எவ்வாறு அமையப்போகின்றது என்பது குறித்து எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் இணைந்து கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன. எவ்வாறாயினும்...

யாழில் வேகமாக பரவும் கண்நோய்!! சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கண் நோயானது தற்போது வேகமாக பரவி வருகின்றது. இது தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதில், வேகமாக பரவிவரும் கண் நோயிலிருந்து (Viral Conjunctivitis) எம்மை பாதுகாப்போம்' என்ற...

யாழில் காதலியின் மிரட்டலால் காதலன் உயிர்மாய்ப்பு!!

யாழில் காதலித்த பெண் தன்னைத் திருணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்யப் போவதாக கூறியதால் பீதியடைந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் - கொழும்புத்துறையில் நேற்று (16.10.2023) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் நெழுங்குளம் வீதி, கொழும்புத்துறையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞராவார். காதலித்த பெண்ணுக்கு வயது குறைவு என்பதால் தந்தையார் மகனைப்...

கிளிநொச்சியில் சோகம்: 17 வயதுடைய இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

கிளிநொச்சி - பெரியபரந்தன் பகுதியில் நண்பிகளான பாடசாலை சிறுமிகள் இருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளனர். நேற்று (16.0.2023) பிற்பகல் இரண்டு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு சிறுமிகளும் தற்கொலை செய்துள்ளனர். சுரேஸ்குமார்...

மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட கணவன் கைது!!

நாவற்குழி பகுதியில் மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட கணவன் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை அதிரடியாக முன்னெடுக்கப்பட்டது. நாவற்குழி, ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன் யமுனா என்கிற 23 வயதான இரண்டு...

யாழ். ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு கொடுக்க அகில இலங்கை இந்து மாமன்றம் எதிர்ப்பு!!

கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தென்னிலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை என்ற பெயரில் ஒப்படைக்க கூடாது என அகில இலங்கை இந்து மாமன்றம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கீரிமலை காங்கேசன்துறை வீதியில் உள்ள அரச மாளிகையும் அச்சுற்றாடலில் அழிக்கப்பட்ட சைவ ஆலயங்கள் மடங்கள் தொடர்பாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் ஆறு திருமுருகன்...

வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு!!

2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் நாட்டின் பொருளாதார நிலைமை கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதால் அது வரவு செலவு திட்டத்தில் பிரதிபலிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதேநேரம் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடு விரைவில் கைச்சாத்திடப்படும் என்றும் இதன் மூலம்...

யாழ் போதனா வைத்தியசாலை கிளினிக் இடமாற்றம்!!

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சுபாஸ் விடுதியில் இயங்கிவந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அனைத்து கிளினிக்குகளும் இன்று திங்கட்கிழமை(16) முதல் வைத்தியசாலையின் உட்புறம் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் என வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த...

யாழிலிருந்து விமானநிலையம், துறைமுகங்கள் ஊடாக விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதிக்கு ஏற்பாடு!!

யாழ்ப்பாணம் விமானநிலையம், துறைமுகங்கள் ஊடாக விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதிக்கு ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழு கூட்டம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர்...

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த இருவர் கைது!!

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அண்மையில்...

ரஷ்யா – வட கொரியா ஆயுத ஒப்பந்தம்: ஆதாரத்துடன் குற்றம் சுமத்திய அமெரிக்கா

ரஷ்யா - வட கொரியா இடையே ஆயுதப் பரிமாற்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாகக் ஆதாரத்துடன் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவிக்கையில், சமீபத்திய வாரங்களில் வட கொரியா 1,000 க்கும் மேற்பட்ட இராணுவ தளபாடங்கள் மற்றும் வெடிமருந்துகளை ரஷ்யாவிற்கு வழங்கியதாக அமெரிக்காவுக்குத் தகவல்...

யாழ்.மாவட்டத்தில் வெளிநாட்டு முகவர் மோசடி மற்றும் காணி மோசடிகள் அதிகரிப்பு! பொலிஸார் எச்சரிக்கை!!

யாழ்ப்பாணத்தில் பாரிய பண மோசடிகள் தொடர்பில் கடந்த 09 மாத கால பகுதிகளில் 26 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 16 முறைப்பாடுகள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடி செய்தமை தொடர்பிலானது என யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுளா செனரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்கள்...
Loading posts...

All posts loaded

No more posts