பாடசாலை வரலாற்று பாட நூல்களில் தமிழ் மக்களது வரலாறுகளுக்கு பாரபட்சங்கள் நிகழாது!

எமது பாடசாலை வரலாற்றுப் பாட நூல்களில் இந்த நாட்டு தமிழ் மக்களது வரலாறுகள் மறைக்கப்பட்டும், திரிபுபடுத்தப்பட்டும் வரலாறுகள் எழுதப்பட்டிருப்பதையும், சிங்கள மொழியில் எழுதப்படுகின்ற வரலாற்று பாடங்களே தமிழில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிடப்படுவதையும், தமிழ் வரலாற்று வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்தோர் மொழி பெயர்ப்பாளர்களாகவும், எழுத்துப் பிழைகளை ஒப்பு நோக்குவோராகவும் பயன்படுத்தப்பட்டு வருவதையும் நாடாளுமன்ற உறுப்பினர்...

விஜய்யுடன் இணையும் சிம்பு?

சிம்பு, அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு நடிகராக இருந்தபோதும் அஜித் படம் வெளியாகும்போதெல்லாம் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் அளவுக்கு அஜித்தின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார் சிம்பு. இந்நிலையில், சிம்புவின் ‘வாலு’ படம் ரிலீஸ் பிரச்சினையின்போது விஜய் தலையிட்டு அந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வழிவகுத்தார். அன்றுமுதல்...
Ad Widget

டெங்கு வருமுன் தடுக்க அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார துறையினர் வேண்டுகோள்

சுகாதார அமைச்சானது எதிர்வரும் வரும் 29 இலிருந்து சித்திரை 4 வரை நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தினைப் பிரகடனப்படுத்தியுள்ளது. 2017 ம் ஆண்டில் வரும் முதலாவது டெங்குக் கட்டுப்பாட்டு வாரமாக கடைப்பிடிக்கப்படவுள்ளது. எனவே தேசிய நிகழ்ச்சி திட்டத்திற்கு மக்களின் ஒத்துழைப்பை வழங்குமாறும் பொதுச் சுகாதார துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வரலாற்றில் இல்லாத பாரிய டெங்குநோய்த் தாக்கத்திற்கு நாடு...

இலங்கை அணிக்குள் இரு முக்கிய வீரர்கள்? : அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும் கிரிக்கெட் சபை!

இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடன் பெற்ற மோசமான தோல்வியினையடுத்து, அணியில் இரு மாற்றங்களை ஏற்படுத்த இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான நுவான் குலசேகர மற்றும் நுவான் பிரதீப் அணிக்குள் அழைக்கப்படலாம் என இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று...

தோல்வியடைந்தமைக்கான காரணத்தை தெரிவித்துள்ளார் சந்திமால்

பங்­க­ளா­தே­ஷிற்கு எதி­ரான போட்­டியில் இலங்கை அணி தோல்­வி­யுற்­ற­தற்கு காரணம் களத்­த­டுப்­பா­ளர்­கள்தான் என்று தினேஷ் சந்­திமால் தெரி­வித்­துள்ளார். ஒவ்­வொரு போட்­டியின் முடி­விலும் போட்டி குறித்து விளக்­க­ம­ளிக்க அந்­தந்த அணியின் வீரர் ஒருவர் அழைக்­கப்­ப­டுவார். அந்த வகையில் இந்தப் போட்டி குறித்து பேச சந்­திமால் வந்­தி­ருந்தார். அவரும் தோல்­விக்கு கார­ணத்தை சொல்­லி­விட்டு சென்­று­விட்டார். ஒவ்­வொரு ரசி­க­னுக்கும் பார்­வை­யா­ள­னுக்கும் தேவை...

24562 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

2017 ஆண்டு இதுவரையானக் காலப்பகுதியில் 24 ஆயிரத்து 562 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தினை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 3 நாட்கள் காச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மக்களுக்குஅவதான எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை விஜயம் தொடர்பில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை!

தமிழக அரசியல்வாதிகள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தனது இலங்கைப் பயணத்தை இரத்து செய்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை மக்களுக்காக வவுனியாவில் கட்டப்பட்ட வீடுகளைக் கையளிக்க தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்கத் தாம் இலங்கை செல்ல சம்மதித்ததாகவும்...

ஏழு நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும்

படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை எதிர்வரும் ஏழு நாட்களுக்குள் விடுவிக்காவிட்டால் தங்களது போராட்ட வடிவத்தை மாற்றி தீவிரப்படுத்தவுள்ளதாக முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பூர்வீக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இம் மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 26 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், தமது போராட்டத்தின் ஓர் அங்கமாக...

வவுனியா சிறைச்சாலை கைதி, பொது வைத்தியசாலையில் உயிரிழப்பு

வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த 8 ஆம் திகதி வவுனியா பாசார் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் ஒன்றினை உடைத்து, களவாட முயன்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 69...

சாட்சியை கோரும் இராணுவம்; கதிகலங்கும் மக்கள்

இராணுவத்தின் கையில் கொடுத்த தமது பிள்ளைகள் தொடர்பில் விசாரணைக்காக செல்லும்போது உங்கள் பிள்ளையை இராணுவத்திடம் கொடுத்ததற்கான சாட்சிகள் உள்ளதா? என கேட்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர். இறுதி யுத்தம் நிறைவடைந்த நிலையில் இராணுவத்தின் கையில் கொடுத்து விட்டே தாம் நலன்புரி நிலையங்களுக்கு சென்று தமது பிள்ளைகள் வருவார்கள் என காத்திருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்....

‘உள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துக’ ஜனாதிபதி உத்தரவு!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை, மேலதிக தாமதங்களின்றி நடத்துமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக அறியக் கிடைக்கிறது. மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் என, நாட்டில் மொத்தமாக 335 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது இது குறித்து, எமது சகோதரப் பத்திரிகையான டெய்லி...

வெளி நாடுகளில் உள்ள புலம்பெயர் உறவுகள் பணியாற்ற முன் வரவேண்டும் : வட மாகாண முதலமைச்சர்

யாழ்ப்பாணத்தில் உலக வங்கியின் நிதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. திட்டங்களுக்கான பொறியியலாளர்கள் பற்றாக் குறையாகவுள்ளதனால் வெளி நாடுகளில் உள்ள புலம்பெயர் உறவுகள் பணியாற்ற முன் வரவேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புலம்பெயர் பொறியியலாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார் உலக வங்கியின் நிதி திட்டம் தொடர்பில் உலக வங்கியின் பிரதிநிதிகள்மற்றும் வட மாகாண முதலமைச்சர் தலமையிலான...

பொலிஸாரின் புதுவருட தின விளையாட்டு நிகழ்வுகள்

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸாரால் புதுவருட தினத்தை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்ம ரட்ண தெரிவித்தார். புதுவருட தினத்தை முன்னிட்டு வருடாந்தம் பொலிஸாரால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

ரயில் கடவையில் படுத்திருந்தவர் பலி

நாவற்குழி - புங்கன்குளம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில் கடவையில் படுத்திருந்த நபர், ரயில் மோதி உயிரிழந்துள்ளார். இவர் நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்று யாழ். அரியாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தவநாயகம் திரேந்திரா (வயது 28) என தெரியவந்துள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த...

வடக்கு முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு சலுகைகள்

வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்கின்றவர்களுக்கு இரட்டிப்பு சலுகைகளும் இதர வசதிகளும் செய்யப்பட உள்ளதாகவும் இதற்கான அறிவித்தலை பிரதமர் வெகுவிரைவில் விடுப்பார் என்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, யாழில் வைத்து தெரிவித்துள்ளார். தமது யாழ்ப்பாண அனுபவங்களையும் பகிர்ந்து கொண்ட அமைச்சர் தமிழ் மக்களின் விருந்தோம்பல் பண்புகளையும் தான் புலிகளின் அரசியற்...

ரணிலின் கைப்பொம்மையாக சுமந்திரன் செயற்படுகின்றார் : சுரேஸ் பிரேமச்சந்திரன்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்காக அரசாங்கத் தரப்பால் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியினாலும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினாலும் பாவிக்கப்படுகின்ற கைப்பொம்மையாகவே சுமந்திரன் உள்ளார். இங்கு நடைபெறுகின்ற விடயங்களைப் பார்த்தாலும் அவ்வாறே எண்ணத் தோன்றுகிறது. அதற்கமையவே சுமந்திரனும் தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்...

இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை வரவேற்கின்றது த.தே. கூட்டமைப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டதை வரவேற்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்பானது, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் முகமாக 2015ம் ஆண்டின் 30/1 பிரேரணையை...

2 படகுகள் கடலில் முழ்கியதில் 200க்கும் மேற்பட்ட அகதிகள் பலி!

உள்நாட்டு போர் நடைபெறும் லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிலர் அகதிகளாக புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைய வருகின்றனர். சட்ட விரோதமாக படகுகளில் புறப்பட்டு வரும் அவர்கள் மத்திய தரைக்கடலில் மூழ்கி உயிரை விடுகின்றனர். இச்சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அகதிகள் படகுகளில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். அவர்களது...

கல்வியமைச்சின் தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் போர்க்கொடி

ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு ஆசிரியர் வெற்றிடம் நிரப்புவதற்கு கல்வியமைச்சு எடுத்துள்ள தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் போர்க்கொடி உயர்த்தியுள்ளது. நூற்றுக்கணக்கான வேலையில்லாப் பட்டதாரிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொழில்வாய்ப்பு கோரி போராட்டங்களில் ஈடுபட்டுள்ள சந்தர்ப்பத்தில் கல்வியமைச்சின் இந்த தீர்மானம் முட்டாள்தனமானது என்று அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற...

ஸ்ரீதரனின் கருத்தால் சபையில் பெரும் சலசலப்பு!

யுத்தம் என்ற போர்வையில் அரசாங்க தரப்பினரால் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவரது கருத்தால் நாடாளுமன்றில் கூட்டமைப்பினருக்கும், நீதி அமைச்சிற்கும் இடையே நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சபையில் உரையாற்றிய ஸ்ரீதரன், கடந்த கால...
Loading posts...

All posts loaded

No more posts