இலங்கை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

நாட்டில் நிலவி வரும் கடும் வெப்பநிலையுடனான காலநிலை காரணமாக அதிகளவு நீர் பருகுமாறு மக்களுக்கு சர்வதேச சுகாதார ஆய்வு நிறுவனத்தின் போசாக்கு பிரிவு பிரதானி வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ அறிவுறுத்தல் விடுத்துள்ளார். மேலும், வயது வந்தவர்கள் மூன்றரை லீட்டர் நீரும் சிறுவர்கள் ஒன்றரை லீட்டர் நீரும் நாளொன்றுக்கு பருக வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் தேசிக்காய் சாறு,...

கடந்த வருடத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் மட்டும் 76 பேர் விபத்தினால் பலி!!

கடந்த 2023ஆம் ஆண்டு, விபத்துக்கு உள்ளாகி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த வருடம் விபத்துக்களில் சிக்கிய நிலையில் ஆயிரத்து 559 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.
Ad Widget

யாழில் பேருந்தில் பெண்களிடம் சில்மிஷம் – இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இருவரும் அராலி பகுதியை சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர் . யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ்ஸில் சாதாரண உடையில் இருந்த பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த இருவரும்...

ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மீனவர்கள் கவனயீர்ப்பு பேரணி

ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி மீனவர்கள் இன்று (09) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன் ஆரம்பமான இந்த பேரணி வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை சென்றது. பின்னர், ஆளுநர் ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு ஐந்து அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்று ஆளுநரின் பிரதிச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. அந்த...

யாழ் பல்கலைக் கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா மார்ச்சில்!!

யாழ் பல்கலைக் கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவானது, எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற தகுதியான மாணவர்களின் விபரங்கள் யாழ் பல்கலைக்கழக இணையத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

யாழில் 106 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கிவைப்பு!

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால், யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கு இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மேலதிகமாக 20 பயனாளிகளுக்கு வீடமைப்பு கடனுக்கான முதற்கட்ட காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, உப...

தென்னிந்திய பிரபலங்களை முற்றுகையிடுவோம்!

யாழுக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய பிரபலங்களுடன், புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு பணம் அறவிடப்பட்டால் அவர்கள் தங்கியுள்ள விடுதிகளை முற்றுகையிடுவோம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா எச்சரித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு...

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 10 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை!!

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டது. பண்டத்தரிப்பு பொதுச் சுகாதாரப்பரிசோசகர் ஆர்.ஜே.பிரகலாதன் 3 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்து 69000 ரூபா தண்டப்பணம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஆனைக்கோட்டை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் கு.பாலேந்திரகுமார் 09 உணவகங்களுக்கு எதிராக தாக்கல்...

இலங்கையில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம்!!

நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார். புதுப்பிக்கத்தக்க மின் நிலைய திட்டங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்தப்படா விட்டால், இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வங்குரோத்து நிலைமைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்பிப்பதற்காக மின்சார சபையின் அதிகாரிகள் நாடாளுமன்ற...

பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் மீது தாக்குதல்!

சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மீது திருட்டுக் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி மந்துவில் பகுதியில் கும்பலொன்று வீதியில் பொருத்தப்பட்டிருந்த மின் குமிழ்களைத் திருடிக்கொண்டிருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் இது குறித்து சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கு. குகானந்தனுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த குகானந்தன்...

TIN இலக்கத்துடன் தொடர்புடைய வங்கிச் சேவை எனக் கூறி மக்களை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை!!

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வரி செலுத்துவருக்கான TIN இலக்கத்துடன் தொடர்புடைய வங்கிச் சேவை எனக் கூறி மக்களை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கிக் கணக்குகளில் பணத்தை ஏமாற்றும் ஹேக்கர் கும்பல் இயங்கி வருவதாக குருநாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மோசடி கும்பலிடம் சிக்கி...

அணு ஆயுதங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க தயாராகும் ரஷ்யா!!

ரஷ்யாவில் உயர்நிலை பாடசாலை வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு அணு ஆயுத தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் கற்பிக்கப்பட இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. "தாய்நாட்டை பாதுகாக்கும் அடிப்படைகள்" எனும் பாடத்தின் கீழ் போரில் இருந்து தற்காத்துக் கொள்ளும் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான பாடத்திட்டங்கள் இந்த ஆண்டு...

யாழில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு!! மூவர் கைது!!

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, மூவரைக் கைதுசெய்துள்ளனர். இன்று காலை பளையில் இருந்து புத்தூர் நோக்கிப் பயணித்த குறித்த டிப்பரை பொலிஸார் இடைமறித்த போது டிப்பரின் சாரதி, பொலிஸாரை உதாசீனம் செய்துவிட்டு வேகமாக சென்றுள்ள பொதே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் டிப்பர்...

வட்டுக்கோட்டை பொலிசார் தனக்கு அடித்ததாக நாடகமாடிய பல்கலைக்கழக மாணவன் ஐஸ் போதைக்கு அடிமை!!

வட்டுக்கோட்டை பொலிசார் தன்னை தாக்கியதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் முறையிட்டது போலியான சம்பவம் என்பது உறுதியாகியுள்ளது. முறைப்பாடளித்த பலகலைக்கழக மாணவன் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது. பொலிசார் தன்னை காலில் பிடித்து தூக்கியடித்ததாக மாணவன் முறைப்பாடளித்துள்ள போதும், மாணவன் தாக்கப்பட்டதற்கான எந்தவொரு அறிகுறியும், தடயமும் அவரில் இல்லையென்பதும் மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது....

சாந்தன் மீண்டும் இலங்கைக்கு திரும்ப பாதுகாப்பு அமைச்சு அனுமதி!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தன் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லையென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடப்பட்டதன் அடிப்படையில்...

ஆவா குழுவை இயக்குபவர்கள் ஐரோப்பிய நாட்டில்! கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்!!

ஆவா குழுவினை இயக்குபவர்கள் ஐரோப்பாவில் வசிப்பதாக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் அங்கத்தவர் ஒருவர் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபரே நேற்று (06.02.2024) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தான் அந்த குழுவில் இரண்டு வருடங்களாக அங்கத்தவராக இருப்பதாக குறித்த சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். அதேவேளை, ஆவா குழுவின்...

யாழில் ஹரிகரனின் இசை நிகழ்ச்சி!! ரம்பா மற்றும் கலா மாஸ்டர் வருகை!!

NORTHERN UNI இன் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் இன்று செவ்வாய்க்கிழமை (6) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்த இசை நிகழ்ச்சியானது எதிர்வரும் (9)ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. நடைபெறவிருக்கும் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே இவர்கள்...

செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கும் சாரதி அனுமதிப்பத்திரம்!

முழு செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2022 ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று அமைச்சரவை தீர்மானத்தின்படி, கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி, அதன் பெறுபேறுகளுக்கு அமைய இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர்...

வடக்கில் வறுமையினால் கேள்விக்குறியாகியுள்ள மாணவர்களின் கல்வி!

வறுமை காரணமாக வடமாகாணத்தில் உள்ள மாணவர்களின் அடைவு மட்டம் மிகவும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தலைமையில்,வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தில்” வறுமைகாரணமாக மாணவர்களின் அடைவுமட்டங்கள் குறைவடைந்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளதோடு, மாணவர்களின் அடைவுமட்டங்களை அதிகரிப்பதற்கு முன்னெடுக்கவேண்டிய தேவை குறித்தும்...

சாதனை முயற்சியில் யாழ் இளைஞர்கள்!

இலங்கையில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுற்றுலாத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். இத்திட்டத்தின் படி, மூன்று இளைஞர்களும் முச்சக்கர வண்டி மூலம் இலங்கையின் 25 மாவட்டங்களையும் 40 நாட்களில் சுற்றிவரத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவானது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – சக்கோடை முனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இது குறித்து குறித்த இளைஞர்கள்...
Loading posts...

All posts loaded

No more posts