- Sunday
- February 8th, 2026
தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு தீவு மாதர் சங்க தலைவி சு.கங்கம்மா வேண்டுகோள் விடுத்தார். வட மாகாண ஆளுநர் செயலாளருக்கு முன்னால் புதன்கிழமை (8) இடம் பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம்...
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர்களே இன்று வெளிநாடுகளில் கூலிப்படையாக செயற்படுவதாக சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) சுட்டிக்காட்டியுள்ளார். ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் வெளிநாடுகளில் கூலிப்படையாக இணைப்பதாக வெளியாகும் போலிப் பிரச்சாரங்களில் இருந்து விலகியிருக்குமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம்...
ரஷ்ய-உக்ரைன் போர்முனைகளுக்கு இலங்கை இராணுவத்திரை அனுப்பிய குற்றச்சாட்டில், இராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரும் , இராணுவ சார்ஜண்ட் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநாகல் பிரதேசத்தில் வைத்து இன்று மாலை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இலங்கை இராணுவ சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகளை ரஷ்ய-உக்ரைன் போர்முனைகளுக்கு கூலிப்படையாக அனுப்பி வைப்பதற்கான...
“சமூக வலைத்தளங்களில் யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் அவதூறு பரப்பிய நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக” யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் ஒருவர் நோயாளிகளிடம் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டதாகத் தெரிவித்து நபரொருவரினால் சில நாட்களுக்கு முன்னர்...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) 5ஆவது முறையாக மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியாகியுள்ளார். ரஷ்யாவில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று அதற்கான முடிவுகள் வெளியான நிலையில் தற்போது அந்நாட்டு அதிபராக புதின் நேற்று (07) பதவியேற்றுள்ளார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் 88 சதவீத வாக்குகள் பெற்று...
தெல்லிப்பளை, ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதை அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது. தெல்லிப்பளை, ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளை திறக்குமாறும், இணைந்த வீதிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் பாதுகாப்பு பிரிவினரிடம் நேற்று (07) தெரிவித்தார். ஒட்டகப்புலம் பகுதிக்கு இன்று விஜயம் செய்த...
இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கினால் சுற்றுச்சூழல் பாதிப்பும் அதனால் அதனை சூழவுள்ள கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது கடந்த நான்கு, ஐந்து வருடங்களுக்கு மேலாக இணுவில் காரைக்கால் அம்மன் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான குப்பைகளை கொட்டும் பகுதியில்...
வடக்கு மாகாணத்தில் கடந்த வருடத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் பயிற்சிகளுக்காக மாத்திரம் 4 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் செயல்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களை அடிப்படையாக கொண்டு குறித்த தகவல் வெளிக்கொணரப்பட்டதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் அரச...
எதிர்வரும் வாரம் இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். குறிப்பாக எதிர்வரும் 13ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது எனவும், இவ்வாண்டின் முதலாவது தாழமுக்கமாக இது அமையும் என்றும் கூறியுள்ளார். அவர் மேலும்...
வெளிநாட்டவர் ஒருவரின் பெரும் தொகை பணமடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து காப்பாளரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர். பருத்தித்துறை சாலையில் காப்பாளராக கடமையாற்றும் பாலமயூரன் என்பவர் கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி சேவைக் கடமையில் நேற்று(07.05.2024)ஈடுபட்டிருந்தார். குறித்த பேருந்தில் வெளிநாட்டவர் ஒருவரினால் தவறவிடப்பட்ட கடவுச்சீட்டு, 120,840 இலங்கை ரூபாய் பணம் மற்றும் 300 யூரோ பணத்தினை...
இலங்கையின் பொதுவான கல்வி முறையை டிஜிட்டல் நிலையுருமாற்றம் செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய உதவிகளை வழங்குவதற்கு சீனா அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய சாத்தியவளக் கற்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தேசக் கருத்திட்டத்தின் மூலம் மிடுக்கான பார்த்தறியும் திரையுடன் கூடிய வகுப்பறை (Delivering Class Room), மிடுக்கான ஏற்புப்பரப்பு திரையுடன் கூடிய வகுப்பறை (Receiving...
வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர், ஆளுநரிடம் தெரிவித்துள்ளார் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்போது வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றங்கள், காணி விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள், சுற்றுலாத்துறை...
நாட்டில் தற்போது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக உடலின் வெப்பநிலை அதிகரித்து ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பப் பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக யாழ். போதான வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்தியர் பேரானந்தராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள யாழ். போதான வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்தியர் பேரானந்தராஜா, ஹீட் ஸ்ட்ரோக் மூலம் வைத்தியசாலையின் விடுதிகளில்...
மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் 484 மெகாவற்று காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக, குறித்த நிலையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தியாவின் M/s Adani Green Energy Limited இனால் மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு கடந்த...
தெல்லிப்பழை பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் எனும் 37 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார். அவர் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது கணவன் வெளிநாட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை...
ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள், மாகாண அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை 65 வரை நீட்டித்து, பின்னர் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்பட்ட நிலையில், அதற்கிடையிலான காலத்தில் 60 வயது பூர்த்தியான பின்னர் ஓய்வு...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவி வித்யா கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ் குமார் உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவில் இருந்து ஒருவர் விலகியுள்ளார். அதன்படி, குறித்த ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட நீதிபதி S.துரைராஜா நேற்று அந்தக் குழுவில்...
தெல்லிப்பழையில் உயிரிழந்த குடும்பப் பெண்ணைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழையிலுள்ள வீடொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. அது கொலையா? தற்கொலையா? என ஆராயப்பட்ட நிலையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் 16 வயதுடைய மகன் மீது...
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி இரண்டு செய்தி வாசிப்பாளர்களை செய்தி வாசிக்கச் செய்துள்ளது. இது உள்ளூர் ஊடகத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபல சிங்கள மொழி செய்தி வாசிப்பாளர்களான சமிந்த குணரத்ன மற்றும் நிஷாதி பண்டாரநாயக்க ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிக்கும் வகையில்...
கிளிநொச்சி டிப்போ சந்தியில் சட்ட விரோதமாக இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் நேரில் சென்று பார்வையிட்டதோடு இவ்விடத்தில் தொடர்ந்து இராணுவத்தினர் ஆதிக்கம் செலுத்துவது தொடர்ந்தால் மக்களே ஒருமித்த அளவிலான போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அவர்...
Loading posts...
All posts loaded
No more posts
