- Saturday
- May 2nd, 2026
க.பொ.த. உயர்தரப் பரீட்சை செப்ரெம்பர் 7ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 2ஆம் திகதிவரையும் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்ரெம்பர் 13ஆம் திகதியும் நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலை ஓகஸ்ட் 8ஆம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டால் க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பன அதற்குப் பின்னரே...
யாழ். மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மக்கள் அதிகளவில் பதற்றம் கொள்ளத்தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவர் நேற்றையதினம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொடர்பான...
எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகளை 4 கட்டங்களாக மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ள நிலையில் பாடசாலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அந்தவகையில் தரம் 3 மற்றும் 4 ஆம் தரங்களுக்கு காலை 07:30 முதல் முற்பகல் 11:30 மணி வரையும் 5 ஆம் தரத்துக்கு காலை 07:30 முதல் நண்பகல் 12 மணிவரையும் 6,...
விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சிக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் வவுனியாவில்நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மூடப்பட்டிருக்கும் கட்டுநாயக்க விமான நிலையம் ஓகஸ்ட் முதலாம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மூடப்பட்டிருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு மேற்கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பாக...
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் திரும்பிய நிலையில், கொரொனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட தமிழக புடவை வியாபாரி, யாழில் பல இடங்களிற்கும் வர்த்தகத்திற்கு சென்று வந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கணேஸ் பாபு என்பவர் கடந்த பெப்ரவரி மாதம் மேலும் சிலருடன் யாழ்ப்பாணம் வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டார். இலங்கையில் சிக்கியிருந்த...
வடமாகாணத்தில் மருத்துவ நிர்வாக சேவையை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மலினப்படுத்துவதாக சமுதாய மருத்துவ நிபுணர் வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விடயம் வருமாறு, மருத்துவ சேவை வைத்தியர்களின் நியமனம் ஏனைய அரச சேவை நியமனங்களைப்போல் சேவை...
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாயை கடத்தி சென்ற இருவர் 25 ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்ற பின்னர் நாயை உரிமையாளர்களிடம் கையளித்துள்ளனர். [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy space[/caption] இந்தச் சம்பவம் தொடர்பில்...
நாவற்குழி பகுதியில் தொடருந்துப் பாதை சீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) முதல் கொரோனா நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ரயில் பாதைகளை சீரமைத்து சுத்தப்படுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய யாழ்ப்பாணத்தின் ரயில்ப் பாதைகளும் தனியார் ஒப்பந்த தாரர்களால் சீரமைக்கப்பட்டுவருகின்றன. இவ்வாறான...
வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) ஆரம்பமானது. குறித்த உற்சவம் நேற்று அதிகாலை மடைப்பண்டம் எடுத்துவரப்பட்டு சிறப்புற ஆரம்பமானது. கடந்த 01.06.2020 அன்று உப்பு நீரில் விளக்கெரிப்பதற்காக முல்லைத்தீவு சிலாவத்தை கடற்கரையில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கடந்த ஏழு நாட்களாக முள்ளியவளை காட்டு விநாயகர்...
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுமார் இரண்டு மாத கால கொரோனா வைரஸ் விடுமுறையைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது. அந்தவகையில் மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவர்களுக்காக மட்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (15) மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறக்கபடும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இறுதி ஆண்டு மருத்துவ பீட மாணவர்களுக்கான பரிட்சைகளை...
யாழ்.கொடிகாமம், வெள்ளாம்கோக்கட்டி பகுதியில் வாள்வெட்டு குழு நடாத்திய தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வெனிஸ்ரன், வேலுப்பிள்ளை சுரேந்திரன் (53-வயது) மற்றும் வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த மகேந்திரன் அஜந்தன் (23-வயது) ஆகியோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பான...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கான ரயில் சேவைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பிற்கான முதலாவது சேவை இன்று காலை 5.45 மணிக்கும் இரண்டாவது சேவை 9.45 மணிக்கும் ஆரம்பிக்கப்பட்டதாக யாழ்ப்பாண ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வருவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலையத்திக்குள்...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் இணைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள், வியாபார நிலையங்களில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் பரிசோதனை – விழிப்பூட்டல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். வெற்றுகாணிகளில் அந்த காணி உரிமையாளர்களால் முறைப்படி பற்றைகளை வெட்டி அகற்றி அதற்கு மேலாக அங்கு காணப்படுகின்ற சிரட்டைகள், பிளாஸ்டிக் கொள்கலன்...
பொதுப் போக்குவரத்து சேவைகள், இன்று (08) முதல் வழமைக்குத் திரும்புமென போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பொதுப் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கின்ற போது, விசேடமாக மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து சேவைகளை நடத்தும் போது, ஜனாதிபதி ஊடகப் பிரிவால் ஜூன் 5ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் நடந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். சுகாதார...
தற்போதைய நிலையில் பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் தொடர்பில் வடக்கு மாகாண விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை என மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ். சிவகுமார் தெரிவித்துள்ளார். பாலைவன வெட்டுக்கிளி தாக்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது; பாலைவன வெட்டுக்கிளிகள் என்பது உண்மையில் பயிர்களுக்குக் கூடியளவு சேதத்தினை ஏற்படுத்தக்கூடிய...
யாழில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் ஆவா குழு உறுப்பினர்களின் வீடுகளில் மேற்கொண்ட சோதனையின்போது அபாயகரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இராணுவப் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கானத் தீர்வை இலகுவாக பெற்றுக் கொடுக்க முடியும் என வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழில். இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தன்னாட்சி சுயாட்சி கொண்ட ஒரு நிர்வாக கட்டமைப்பினையே தமிழர்கள் கோருகின்றனர் என்றும் கூறினார். சந்திரிகா மையார் முன்வைத்த முன்மொழிவுகளை...
யாழ். புலோலி அ.மி.த.க.பாடசாலையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் காவலாளியாக கடமையாற்றி வந்தவரே, இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வழமை போன்று நேற்று இரவு, கடமைக்கு வந்த நிலையிலையே இன்றைய தினம் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்திலையில் சம்பவம்...
Loading posts...
All posts loaded
No more posts
