- Saturday
- May 2nd, 2026
வவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் வாள்களுடன் சென்ற நபர்கள், மோட்டார் சைக்கிளை எரித்ததுடன், நாய்குட்டிகளையும் கடத்திச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டிற்குள் சென்ற இனந்தொரியாதோர், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த, மோட்டார் சைக்கிளை தீக்கிரையாக்கியதுடன், வீட்டின் கதவு மற்றும் யன்னல்களையும் உடைத்து, வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு விலையுயர்ந்த நாய்குட்டிகளையும் களவாடி சென்றுள்ளனர்....
யாழ்ப்பாணத்தில் தேர்தல் அறிவிக்கப்படத்திலிருந்து இன்றுவரை ஒரு தேர்தல் வன்முறை சம்பவம் உட்பட 15 தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கி.அமலராஜ் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதான் பின்னர் இன்றுவரை 15 தேர்தல்...
கிளிநொச்சி – பளையில் இராணுவத்தினருடையது என சந்தேகிக்கப்படும் அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புலோப்பளை காற்றாலை அமைந்துள்ள பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட காணியினை சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதன்போது, கேகாலை மாவட்டதைச் சேர்ந்த ஒருவரின் தேசிய அடையாள அட்டை, சாரதி...
வல்லை. இராணுவ முகாமுக்கு முன்பாக வெடிபொருள் நிரப்பிய பொம்மை ஒன்றை வீசிச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் நீர்வேலியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸார் ஊடாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக பொம்மை ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. அந்தப் பொம்மையை...
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நண்பர்கள் இருவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய போது, சட்டவிரோத கூட்டத்தைக் கூட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 பேரில் 24 பேரை வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் போது வழக்கில் முற்படுத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இருவரையே ஒரு லட்சம் ரூபாய் ஆள் பிணையில்...
40 ஆயிரம் மாவீரர்கள் 40 ஆண்டுகளாக சுமந்த கனவு வீண்போகக் கூடாது என்ற ஒற்றைக் காரணத்துக்காக எங்களுடைய வாழ்வை அரசியலுக்குள் அர்ப்பணித்தவர்கள்தான் நாங்கள் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். “சலுகைகளை அனுபவிக்கவேண்டும் என்ற காரணத்துக்காக நாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வரவில்லை....
2020 பொதுத் தேர்தலுக்கான தபால்மூலமான வாக்களிப்பு திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூலமான வாக்களிப்பு ஜூலை 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது. மேலும் ஜூலை 16 மற்றும் 17 திகதிகளில் மதியம் 12 மணி வரை மாவட்ட செயலாளர்கள், முப்படையினர், பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் வாக்களிக்க முடியும். குறித்த...
யாழ்.மாநகர சபையில் இருந்து பருத்தித்துறைக்குச் சென்ற தீயணைப்பு வாகனம் நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு முன்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த தீயணைப்பு வாகனத்திற்ன் முன் பகுதி சில்லு திடீரென காற்றுப் போன காரணத்தினால் வாகனம் வீதியை விட்டு விலகிய வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில்...
“தமிழர்களின் ஏக பிரதிநிதித்துவம் என சொல்லி கட்சிகளாகப் பிரிந்து நிற்கிறார். தாம் மட்டும் பிரிந்து நிற்காமல், மக்களையும் பிரித்தாள்கிறார்கள். இதனால் தமிழர்கள் பிரதிநிதித்துவமின்றி தனித்துவிடப்பட்டுள்ளார்கள்” என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் கட்சியின் நாடாளுமன்ற தேர்தலின் யாழ். தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மாதம்பை பொலிஸ் நிலையத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். புத்தளம் – மாதம்பை பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த அவர், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை வடக்கைச் சேர்ந்த நமசிவாயம் டயஸ் (26-வயது) என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
விடுதலைப் புலிகள் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் போராட்ட அடையாளம். அத்தகையவர்களை தேர்தல் காலம் நெருங்கியவுடன் புகழ்பாட சில தமிழ் அரசியல்வாதிகள் ஆரம்பித்துள்ளனரென நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளரான பொ.ஐங்கரநேசன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணம்- வலிகாமம் பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மாவீரர்கள் எந்நாளும்...
ஆவா குழு தலைவரின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கோண்டாவில் பகுதியில் வைத்து நேற்று (15) மாலை, ஆவா குழு தலைவர் என கூறப்படும் சன்னாவின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த யாழ்ப்பாணம் பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று கேக்...
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் ஒருசிலரின் பொறுப்பற்ற செயலால் இலங்கையில் கொரோனா இரண்டாம் கற்ற அலையும் ஏற்படும் அபாயம் இருக்கின்றது என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்தார். அத்துடன் இந்தியாவில் இந்த நோய் வேகமாக பரவி வருவதால் இலங்கையின் கடல் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா...
சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள் என்பன திறக்கப்படவுள்ளன. இதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும்...
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணொருவருக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்தார். அனுராதபுரம் கெபிதிகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு மீண்டும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். குறித்த பெண்...
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழியில் உறவினர்களுக்கு இடையிலான தகராறு கத்தி குத்தில் முடிவடைந்ததில் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy space[/caption] நாவற்குழி 300 வீட்டு திட்டம் பகுதியை...
யாழ்ப்பாணம் - கலட்டி பகுதியில் வீதியால் செல்லும் பெண்களுடன் சேட்டையில் ஈடுபட்டுவந்த இளைஞர்கள் நால்வர் நையப்புடைக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கலட்டி வீதியால் செல்லும் பெண்களுடன் தொடர்ச்சியாக சேட்டையில் ஈடுபட்டுவந்த இளைஞர்களின் தொல்லை தாங்காமல், பெண்கள் தமது உறவினர்களிடம் விடயத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அப் பெண்களின் உறவுக்காரர்களால் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் நேற்று மாலை நையப்புடைக்கப்பட்டதாக...
மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கடுமையான காற்றின் தாக்கம் காரணமாக தூக்கி வீசப்பட்ட முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய் தெற்கு பகுதியினை சேர்ந்த சந்திரசேகர் சரவணமுத்து , வயது 80 என்ற முதியவரே உயிரிழந்தவர் ஆவார். கடந்த வெள்ளிக்கிழமை மேற்படி முதியவர் தனது மகனுடன்...
உயர் தரத்தில் தொழில் கற்கை நெறியின் கீழ் தரம் 12க்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த கற்கை நெறிக்கு மாணவர்களை உள்வாங்கும் போது க.பொ.தராதர சாதாரண தரத்தில் சித்தியடைந்தமை அல்லது சித்திபெறத்தவறியமை கவனத்திற்கொள்ளப்படமாட்டாது. தாம் விரும்பும் பாடசாலையை தெரிவுசெய்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் மாணவர்களுக்கு கிடைக்கின்றது. இந்த வருடம் தொடக்கம் அனைத்து மாகாண மற்றும் கல்வி வலயங்களை...
அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை (கிளினிக்) மருந்து மற்றும் அரச ஒசுசல மூலம் பெற்றுக்கொள்ளப்படும் மருந்து வகைகளின் உரிமைமயாளர்களுக்கு தபால் திணைக்கள அலுவலக பணியாளர் மூலம் விநியோகிக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார். கொரோனா வைரசு தொற்றுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி செயலணிக்குழுவின் கோரிக்கையின் அடிப்படையில் அரசாங்க...
Loading posts...
All posts loaded
No more posts
