- Monday
- April 27th, 2026
கொரோனா காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ரயில் சேவைகள் இன்று (12) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பிரதான மார்க்கம், கரையோர மார்க்கம், களனிவௌி மார்க்கம் மற்றும் வடக்கு மார்க்கத்தில் ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. நீண்ட காலத்திற்கு பின்னர் வவுனியா-பெலியத்த புகையிரதம் வழமை போல காலை 03:30 மணிக்கு புறப்படவுள்ளது. எதிர்வரும்...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல...
நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பைப் பேணியதாக அறியப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தலதா அத்துகோறள ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவரோடு தொடர்புகளைப் பேணிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். அத்தோடு, அவர்களுக்கு பி.சீ.ஆர். பாிசோதனைகளும்...
அடுத்த மாதம் ஒக்ஸ்போர்ட் மற்றும் பைசர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை இந்தியா மூலமாகவும், பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பின் மூலமாகவும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது குறித்து இந்தியாவுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை இடம்பெற்றுவருவதாகவும் அவர்...
கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி காலப்பகுதியில் பலதுறைகளும் பாதிக்கப்பட்டது போன்று நாடகத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்லில் நாடக ஆற்றுகைகளை நிகழ்த்துவதற்கு மெய்நிகர் வெளியைப் பயன்படுத்தும் எண்ணம் உலக அளவில் சில நாடுகளில் ஆரம்பமாகியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை நாடகங்களை நிகழ்த்த முடியாத நிலை நீடிக்கின்ற சூழலில் தமிழ் நாடகங்களையும் நிகழ்த்த முடியாதுள்ளது. அந்தவகையில், நாடக உலகில்...
ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு விடுக்கவுள்ள கோரிக்கைகள் குறித்து, இலங்கையின் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கு நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். ஹனா சிங்கரின் அழைப்பின் பேரில் சி.வி.விக்னேஸ்வரன், அவரது அலுவலகத்திற்கு நேற்று (திங்கட்கிழமை) சென்று கலந்துரையாடலை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பில், ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச்சில் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் மற்றும் வருங்காலத்தில்...
வவுனியா நகர கோரோனா தொற்று கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 25 பேருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு மாகாணத்தில் இன்று 31 பேருக்கு கோரோனா வைரஸ் தோற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதன்மூலம் வவுனியா நகர கொத்தணியினால் பாதிக்கப்பட்டோர்...
வர்த்தக நிலையங்கள், அங்காடிகள் மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியவற்றின் பணிகளை முன்னெடுக்கும்போது, அரசாங்கம் வெளியிட்டுள்ள சுகாதார பரிந்துரைகள் அடங்கிய வர்த்தமானிக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் இன்று முதல் கண்காணிக்கப்படவுள்ளது. இதற்காக விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சமூக இடைவெளியை பேணுதல், கிருமித்...
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் திடீர் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நினைவுத்தூபி விவகாரத்தில் பல்கலைகழக துணைவேந்தரின் நடவடிக்கையில் மாணவர்கள் சந்தேகமடைந்துள்ளதையடுத்து, புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய தூபி அமைக்க பல்கலைகழக துணைவேந்தர் அடிக்கல் நாட்டினார். இதன் பின்னர் உண்ணாவிரத போராட்டத்தையும் முடித்து வைத்தார். எனினும், உடனடியாக தூபி அமைக்க துணைவேந்தர் மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும், இன்றே… இப்பொழுதே தூபி...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு- கிழக்கில் பூரண ஹர்த்தால் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. அனைத்து தமிழ் கட்சிகள், மாணவர் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புகளால் கதவடைப்பு போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் குறித்த கதவடைப்பு போராட்டத்திற்கு வடக்கு- கிழக்கு மக்களும் தமது பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள். அதற்கமைய...
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் இன்று (திங்கட்கிழமை) காலை நாட்டப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த மாணவர்களுக்கு துணைவேந்தருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கையை...
வவுனியா நகர கோரோனா தொற்று கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 6 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதன்மூலம் வவுனியா நகர கொத்தணியினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60ஆக உயர்வடைந்துள்ளது. வவுனியா மாவட்டத்தின் நகர்ப் பகுதியில் உள்ள பஜார் வீதி, தர்மலிங்கம்...
“மாணவர்களின் உணர்வுடன் இசைந்தே துணைவேந்தரும் பயணிக்கின்றார். அவ்வகையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை ஒரு அங்கீகரிக்கப்பட்ட நினைவுத் தூபியாக கட்டியெழுப்ப தயாராக உள்ளேன்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், மூத்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராசா தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைப்பது தொடர்பான மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்குவதாக துணைவேந்தர் உறுதியளித்துள்ளார் என்று நாடாளுமன்ற...
வடக்கு- கிழக்கு தழுவிய நிலையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பூரண வழமை மறுப்பிற்கு எமது பரிபூரண ஆதரவையும் வழங்குகின்றோம் என பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “எமது பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற, ‘இறந்தோர் நினைவுச் சின்னம்’ இடித்தகற்றப்பட்டமை...
அரச நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும் திங்கட்கிழமை முதல் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளலர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். கொவிட் – 19 தொற்று காரணமாக கடந்த காலங்களில் அனைத்து அரச நிறுவனங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களே சேவைக்கு...
வடக்கு, கிழக்கில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகமும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்து தரைமட்டமாக்கியதை எதிர்த்தும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு இந்த அரசினால் இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும் வடக்கு, கிழக்கில் திங்கட்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது....
முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நினைவுத் தூபி இடிக்கப்பட்டமை, பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானம் என தெரிவித்துள்ள அவர், அந்த விடயத்திற்கும் இராணுவத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவம் இவ்விடயத்தில் தலையிடப் போவதில்லை எனவும் இராணுவத்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தலா ஒரு ஆள் பிணையில் அவர்களை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும்...
வவுனியா மாவட்ட பொது மக்களுக்கானதும் ஏனையோருக்குமான சுகாதாரத் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல் ஒன்றை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வவுனியா மாவட்டத்தின் நகர்ப் பகுதியில் உள்ள பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி மற்றும் மில் வீதிகளில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் கடமை...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் கோரிக்கைகளை முன்வைத்துப் 9 மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு வெளிப்புறத்தில் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அனுமதிக்கவேண்டும், பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு பொலிஸார்...
Loading posts...
All posts loaded
No more posts
