- Monday
- April 27th, 2026
வடக்கு மாகாணத்தில் புதிய கொரோனா தொற்றாளர்கள் ஒவ்வொரு நாளும் அடையாளம் காணப்படுவதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னாரில் கடந்த சில நாட்களில் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நேரடித்...
இலங்கையில் கோரோனா வைரஸின் புதிய வலுவான மாறுபாட்டை வெளிநாட்டிலிருந்து வருவோரால் நாட்டுக்குள் பரவும் அபாயம் இல்லை என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர், மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்ததாவது; இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட...
வடக்கு மாகாணத்தில் நேற்றையதினம் 8 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மன்னாரில் கடந்த சில நாள்களில் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்புடைய 4 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அத்துடன், மன்னார் பொது வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தருக்கு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று...
யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு நேற்றையதினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில் இந்த அலங்கார வளைவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியிலும், நிதி ஒதுக்கீட்டிலும் இந்த அலங்கார வளைவு சம்பிரதாய, பண்பாட்டுச் சின்னங்களைத் தாங்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்...
சுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ்ப்பாணம் நகரில் திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள திரையரங்கே இன்று நண்பகல் முதல் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டது. நாட்டின் திரையரங்குகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதித்து இயங்க அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது. எனினும் யாழ்ப்பாணம் நகரில் மூடப்பட்ட திரையரங்கு...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் உள்ளிட்ட 5 பேரையும் விடுவித்து விடுதலை செய்து ( Acquitted and Released) மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்த குற்றச்சாட்டில்...
வவுனியா நகரப் பகுதிகளைச் சேர்ந்த மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்றையதினம் (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, வவுனியா நகர்ப் பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 146 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு...
பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்கு வந்த ஒருவர் புதிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பிரித்தானியா மற்றும் பல நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு காணப்படுவதாக தொற்றுநோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். வௌிநாடுகளில் இருந்து...
தைப்பொங்கல் திருநாளை வீட்டிலிருந்து கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு கேட்டுள்ளது. ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப அடுத்த ஆறு மாதங்களில் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி வலியுறுத்தினார். இன்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், கோரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க சரியான...
முள்ளியவளை நாவல்காட்டு கிராமத்தில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சம் நெஞ்சில் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளது என்று சட்ட மருத்துவ வல்லுநரின் நிபுணத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் அந்த நபர் 6 மாதங்களுக்கு அண்மித்த காலப்பகுதியில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளமையும் ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவல்காட்டு கிராமத்தில்...
புதிய வருடத்தில் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப புதிய வருடத்தில் இத்தகைய தியாகங்களைச் செய்ய வேண்டும் என கூறினார். கொரோனா வைரஸிலிருந்து...
யாழ். மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 358 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்தோடு நேற்று காலையிலிருந்து யாழ்ப்பாண குடாநாட்டில் பெய்த மழை தாக்கத்தின் காரணமாக 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் ரீ.என்.சூரியராஜா மேலும்...
அலுவலக கடமைகளுக்காக உரிய கடமை நேரத்திற்கு பதிலாக நெகிழ்வான (Flexible) கடமை நேரத்தை தீர்மானிப்பது தொடர்பிலான வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நேற்யை தினம் இவ்வாண்டுக்கான பாடசாலை முதலாம் தவணை ஆரம்பமானதை தொடர்ந்து பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு ஆர்வம் கொண்டுள்ளனர். தற்போதைய கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் தமக்குரிய வானகங்களில் பிள்ளைகளை பாடசாலைக்கு...
யாழ்ப்பாண பல்கலைக்கழக நினைவு தூபி உடைக்கப்பட்டது தொடர்பில் அரசுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. அதுதொடர்பில் அரசு எந்தவித தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் மாநாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு...
கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கான நீர்வருகை தொடர்ந்து காணப்படுவதனால் குளத்தின் வான் கதவுகள் 14ம் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது. இரண்டு வான் கதவுகள் 2 அடியாகவும், 4 வான் கதவுகள் 1 அடி 6 அங்குலமாகவும், 4 வான் கதவுகள் 1 அடியாகவும், 4 வான் கதவுகள் 6 அங்குலமாகவும் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசன...
யாழ்.மாவட்டத்தில் நேற்று காலை தொடக்கம் இன்று காலை வரை 149.3. மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ். பிராந்திய வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார். குறிப்பாக யாழ் நகரப் பகுதியிலேயே அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அடுத்துவரும் 24 மணித்தியாலத்திற்கு இந்த மழையுடன் கூடிய காலநிலை தொடரும்...
கொரோனா காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ரயில் சேவைகள் இன்று (12) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பிரதான மார்க்கம், கரையோர மார்க்கம், களனிவௌி மார்க்கம் மற்றும் வடக்கு மார்க்கத்தில் ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. நீண்ட காலத்திற்கு பின்னர் வவுனியா-பெலியத்த புகையிரதம் வழமை போல காலை 03:30 மணிக்கு புறப்படவுள்ளது. எதிர்வரும்...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல...
நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பைப் பேணியதாக அறியப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தலதா அத்துகோறள ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவரோடு தொடர்புகளைப் பேணிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். அத்தோடு, அவர்களுக்கு பி.சீ.ஆர். பாிசோதனைகளும்...
Loading posts...
All posts loaded
No more posts
