சர்வதேச நீதிகேட்டு நல்லூரில் நாளை பேரணி; அனைவரையும் அணிதிரள பல்கலை. மாணவர் ஒன்றியம் அழைப்பு!!

சர்வதேச நீதி கோரி நல்லூரில் நாளை புதன்கிழமை இடம்பெறும் பேரணிக்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது. இதுதொடர்பில் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்நாட்டின் பூர்வீக குடிகள் ஆகிய நாம் எமது இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புக்கு நீதி வேண்டியும் எமது உரிமைகளை பெற்றிடவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து...

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 6 பேர் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மன்னார் மீன்சந்தை தொற்றாளர்களுடன் தொடர்புடையா ஒரு பகுதியினருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஐவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட...
Ad Widget

தமிழர்களுக்கு தீர்வு வழங்க முடியுமென்றால் பசில் ராஜபக்ஷவை ஆதரிக்கத் தயார் – சுமந்திரன்

இலங்கையில் 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பசில் ராஜபக்ஷவால் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்படுமாக இருந்தால் அவரை ஆதரிக்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் . கொழும்பு சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்....

இலங்கையிலும் கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆராய நடவடிக்கை!

கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவுகள் தொடர்பாக ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவின் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொவிஷீல்ட் அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் பாவனையை சில உலக நாடுகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இந்த நிலையில், இலங்கையில் தடுப்பூசி பாவனையை நிறுத்துவது தொடர்பாக...

தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்குள்ளும் முளைத்தது தொல்பொருள் திணைக்கள அறிவித்தல்!!

தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் அதிபர் விடுதி பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் சின்னம் என தொல்பொருள் திணைக்களத்தினால் அறிவித்தல் பலகை நாட்டப்பட்டுள்ளது. அந்த காணியை அடாத்தாக பிடிக்க முயலும், இலங்கை அமெரிக்க மிசன் திருச்சபையின் பாதிரியார்களே இதன் பின்னணியில் செயற்பட்டதாக பாடசாலை சமூகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் அதிபர் விடுதி காணி 1816ஆம் ஆண்டு...

யாழ்ப்பாணத்தில் புதனன்று நடைபேறும் பேரணிக்கு தமிழ் அரசுக் கட்சி ஆதரவு

வடக்குக் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை அரசாட்சியாளரின் முக்கியமாக தமிழின அழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தும், அவ்வாறான நடவடிக்கைகளை இழைத்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டுமென்றும் இவ்வாறான இனவழிப்பு நடவடிக்கைகள் மீளநிகழாமல் தடுக்கவும் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை அரசு ஏற்றுக் கொள்ளவைப்பதற்கான பிரேரனையை எதிர்வரும் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்ற வேண்டுமென்றும் சர்வதேச நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்து...

பரீட்சைகள் தாமதமாகலாம் : இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை!!

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாண்டு புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பாடப்பரப்புக்கள் நிறைவு செய்யப்பட்டிருக்காவிட்டால் பரீட்சைகளை தாமதமாகலாம். எனினும் ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பரீட்சைகளை ஒத்தி வைப்பதற்கான இறுதி தீர்மானம் இது வரை எடுக்கப்படவில்லை என்று பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித வீரகேசரிக்கு தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள...

வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 422 பேரின் மாதிரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 13 பேரும் வவுனியா மாவட்டத்தில் ஒருவரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில்...

சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

சதோச விற்பனை நிலையங்கள் பெரிய வெங்காயம், சிவப்பு பச்சையரிசி மற்றும் உள்நாட்டு கிழங்கு உள்ளிட்ட சில பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, சந்தையில் 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 195 ரூபாவுக்கும், உள்நாட்டு கிழங்கு 150 ரூபாவுக்கும், சிவப்பு பச்சையரிசி 89 ரூபாவுக்கும் சதோச விற்பனை...

மாகாண ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கு இந்தியாவிற்கு கடமை இருக்கிறது

மாகாண ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கு இந்தியாவிற்கு கடமை இருக்கிறது.மாகாண ஆட்சி முறைமையை கொண்டு வருவதோடு மாத்திரமல்லாது காணி அதிகாரம், நிதி அதிகாரம், பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியது இந்தியாவின் கடமை.அதை இந்தியா செய்யும் என எதிர்பார்க்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். அம்பாறை...

மீள்பதிப்பு செய்யப்பட்ட இந்து கலைக் களஞ்சியம் கௌரவ பிரதமரின் தலைமையில் வெளியீடு

சைவ தமிழ் மக்களால் மகோன்னத நாளாக அனுஷ்டிக்கப்பட்டுவரும் மகா சிவராத்திரி நன்னாளினை முன்னிட்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மீள்பதிப்புச் செய்யப்பட்ட பன்னிரண்டு தொகுதிகளைக் கொண்ட இந்து கலைக் களஞ்சியம், புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் அலரி...

யாழ்ப்பாணம் -சென்னைக்கிடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

கொவிட் தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் -சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க அரசாங்கம் தயாராகி வருகிறது. அதேவேளை இரத்மலானை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இடையே உள்நாட்டு விமான சேவையையும் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார். பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களும் சர்வதேச விமான நிலையங்களாக அபிவிருத்தி...

யாழ்ப்பாணத்தில் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற இருவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 319 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய பயிற்சிப்...

குளுக்கோமா நோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் கண்பார்வை பாதிப்பை தவிர்க்க முடியும்

40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அரச வைத்தியசாலையில் அல்லது கண் மருத்துவர் ஒருவரை சந்தித்து குளுக்கோமா நோய் தொடர்பாக பரிசோதனை செய்வதன் முக்கியத்துவத்தை கண் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மார்ச் 7 ஆம் திகதி ஆரம்பமான குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு வைத்தியர்கள் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர். இந்த குளுக்கோமா வாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது....

நோயாளர்களுக்கான சகல சிகிச்சை நடவடிக்கைகளும் ஆரம்பம் – யாழ்.போதனா பதில் பணிப்பாளர்

யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான சகல சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், தொற்று நீக்கல் நடவடிக்கை யைத் தொடர்ந்து அனைத்து சிகிச்சையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். தொற்று உறுதியான வைத்தியரும் சிகிச்சை முடித்து ஒய்வில் உள்ளார் என்றும்...

வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (செவ்வாய்க்கிழமை) உறுதியாகியுள்ளது. அவர்களில் 10 பேர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் 6 பேர் இலங்கை வங்கி ஊழியர் ஒருவருடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்றும் மேலும்...

யாழில் தொடரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் 10வது நாளாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அருட்தந்தை சக்திவேல் மற்றும் மனித உரிமை ஆவலர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் - நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு...

எரிவாயு விலை அதிகரிக்கப்படுமா?

உள்நாட்டு எரிவாயு விலையில் அதிகரிப்பை மேற்கொள்ள எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், எரிவாயு விலையை அதிகரிக்க அமைச்சரவையில் வர்த்தக அமைச்சரால் முன்மொழியப்பட்டதாக கூறினார். இந்த திட்டத்தை மைதிப்பாய்வு செய்ய அரசாங்கம் முடிவு செய்த போதும் விலை...

காரைநகர் சாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

காரைநகர் இ.போ.ச.சாலை பேருந்து சேவைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவில்லை. காரைநகர் சாலையில் பணியாற்றும் சாரதிகள் மூவர், நடத்துனர்கள் மூவர் மற்றும் காப்பாளர்கள் இருவர் என எட்டு பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றைய பி.சி.ஆர்.பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அதாவது, காரைநகர் சாலையில் பணியாற்றுபவர்களில் 90பேரின் மாதிரிகள் பெறப்பட்டு நடத்தப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையிலேயே, 8பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...

கிளிநொச்சியில் பெண்ணொருவர் சடலமாக கண்டெடுப்பு!

கிளிநொச்சி அப்பாள் குளம் பகுதியில் இன்று(செவ்வாய்கிழமை) பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் 30 வயது மதிக்க தக்கவர் என்பதுடன், பாதணிகள், கைப்பை ஆகியனவும் சடலத்துடன் காணப்படுகின்றதோடு குளக்கட்டினை அண்மித்து ஒதுங்கியுள்ள சடலம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் ஆரம்பித்துள்ளனர்....
Loading posts...

All posts loaded

No more posts