Ad Widget

யாழில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு- மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தின் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால், மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் க.மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் தற்பொழுது கொரோனா தொற்று குறைந்த நிலைமை இல்லாது அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றது.

நேற்று 139 பேருக்கும் இன்று காலை 19 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழில் இதுவரை 4 ஆயித்து 122 பேர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 53 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் 2 ஆயிரத்து 42 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 712 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்

இதேவேளை நல்லூர் மற்றும் உடுவில் பிரதேச பிரிவுகளிலுள்ள இரு கிராம சேவகர் பிரிவுகள் மாத்திரம் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் கொரோனா நிலைமை அதிகரித்துச் செல்லும் போக்கே அதிகளவு காணப்படுகின்றது. ஆகவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்

Related Posts