- Sunday
- July 12th, 2026
வடக்கு தீவுகளில் சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க இந்தியா உடனடியாக முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள தீவுகளில் முன்னெடுக்கவிருந்த மின் உற்பத்தி திட்டங்களை சீன நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த விடயம் குறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள...
” மாதகல் காணிகளை கடற்படைக்கு வழங்குவதாக நான் ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை.” என்று வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் கடற்படைக்கு மாதகல் காணிகளை வழங்குவதாக தெரிவித்து சில ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளிவந்த நிலையில் இது தொடர்பில், இன்று தனியார் நிறுவனத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இன்று (வியாழக்கிழமை) அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டமொன்று இடம்பெற்றது. அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கமைய நீண்டகாலமாக நிலவிவரும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் சம்பள முரண்பாடு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் அடையாள மௌன...
யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடிப்புக்குள்ளான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டில் சமையலின் போது எரிவாயு அடுப்பு எரிவதை அவதானித்த வீட்டு உரிமையாளர், இது தொடர்பில் அருகிலுள்ள வர்த்தக நிலையத்துக்கு அறிவித்துள்ளார். இதனை அடுத்து வர்த்தக நிலையத்தினர் எரிவாயு சிலிண்டரை அகற்றி தீயை அணைத்தமையினால் பாரிய...
யாழ். மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ள நிலையில் டிசம்பர் 6 தொடக்கம் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் மழை உடனான காலநிலையின் பிற்பாடு டெங்கு...
லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் உள்நாட்டு LPG எரிவாயு சிலிண்டர்களின் எரிவாயு கலவையை மாற்றியமைத்துள்ளது என்பதை நிரூபிக்கும் ஆவணத்தை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வெளியிட்டுள்ளார். அந்த ஆவணத்தை பகிர்ந்துள்ள எம்.பி, “லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், 18 லீற்றர் சிலிண்டரின் எடையை 12.5 கிலோவிலிருந்து 9.2 கிலோவாக மாற்றியபோது, 20:80...
மின்சார மீள் இணைப்பு பணிகளில் ஈடுபட போவதில்லை என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு இதனை தெரிவித்துள்ளார். சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமையினால், 8 மணிநேரத்திற்கு மேலதிகமாக பணிப்புரிய போவதில்லை...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி கிழக்கு ஜே/163 கிராம சேவகர் பிரிவிலுள்ள இரண்டு வீடுகளில் அண்மையில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 28ஆம் திகதி ஒரு வீட்டிலும், 29ஆம் திகதி மற்றைய வீட்டிலும் வெடித்துச் சிதறியுள்ளன. இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒரு வீட்டினரால் நேற்று (புதன்கிழமை) முறைப்பாடு பதிவு...
மன்னார் – தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் உட்பட 15 பேருக்கு நேற்றையதினம் மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தலைமன்னார் வைத்தியசாலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளடங்களாக 50...
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமையநேற்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 744 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 564,733 ஆக அதிகரித்துள்ளது.
ஒமிக்ரோன் பிறழ்வு இந்நாட்டிற்கு வந்துள்ளதாக உறுதியாக கூற முடியாது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது நாட்டிற்கு குறித்த வைரஸ் தாமதமாக வரக்கூடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர்மேலும் தெரிவிக்கையில்... “இது தொடர்பில் உறுதியாக கூற...
மாதகலில் கடற்படை முகாம் அமைப்பதற்கு தனியார் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று மதியம் ஒரு மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தலைமையில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் மாதகல் காணி உரிமையாளர்கள் மற்றும்...
நாட்டில் தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சமையல் எரிவாயு தொடர்பான தீ பரவல் மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், அது தொடர்பில் அறிவித்தலொன்றை விடுத்துள்ள லிட்ரோ நிறுவனம், தரம் குறைந்த சாதனங்கள் காரணமாக இச்சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது. குறித்த அறிவித்தல் வருமாறு, தேசிய எரிவாயு வழங்குனரான Litro Gas...
னைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் கடந்த சில வருடங்களாக எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (01) உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சமத்துவமின்மைக்கு முடிவு கட்டுங்கள், எய்ட்ஸை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்´ என்பதுதான் இந்த...
வட்டுக்கோட்டையில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது. வட்டுக்கோட்டை காளி கோவிலடியில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட எரிவாயு அடுப்பே வெடித்துச் சிதறியுள்ளது. எனினும் வேறு சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, சுன்னாகம் கந்தரோடையில் உள்ள வீடு ஒன்றில் இதேபோன்ற சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை...
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த உண்மைகள் திருபுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ஊடகவியலாளர் மீது படையினர் தாக்குதல் நடத்தவில்லை எனவும் இராணுவத் தலைமையகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. இராணுவ வீரர்களுடன் பேசியவாறு பின்னோக்கிச் சென்றவேளை, ஊடகவியலாளர் தனது மோட்டார் சைக்கிளின் மீது மோதி, கம்பி வேலி...
வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர், சாவகச்சேரி- தனங்களப்பு பகுதியிலுள்ள பண்ணை வீட்டில் இருந்து சடலமாக இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளார். புத்தூர் வடக்கு, ஆவரங்கால் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் சிவபாலன் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆவரங்கால் பகுதியை சேர்ந்த குறித்த நபர், தனங்களப்பு- தென்னம் தோட்டம் ஒன்றினை பராமரித்து...
காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் தாக்கியதில் க.பொ.த. சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் ஒரு பக்கக் காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தலில் ஒழுக்காற்று விசாரணையும் நடைபெறவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் தாக்கியுள்ளார். காதில் ஏற்பட்ட வலி காரணமாக மாணவன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...
அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்Lள்ளது. இதற்கமைவாக 2021 ஆம் ஆண்டின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகள்...
எதிர்வரும் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த புதிய சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைய புதிய வழிகாட்டல்களுக்கு அமைய, திருமண மண்டபத்தின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மாத்திரமே...
Loading posts...
All posts loaded
No more posts
