ஒமிக்ரோனை தொடர்ந்து டெல்டாக்ரோன் புதிய கொரோனா திரிபு கண்டுபிடிப்பு : அச்சத்தில் மக்கள்

ஒமிக்ரோன் தொற்று உலகளாவிய ரீதியில் கவலைகளை தோற்றுவித்துள்ள நிலையில் டெல்டா மற்றும் ஒமிக்ரோனின் அம்சங்களை இணைக்கும் புதிய SARS-CoV-2 இன் புதிய திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சைப்ரஸில் உள்ள உயிரியல் அறிவியல் பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார். தற்போது ஒமிக்ரோன் மற்றும் டெல்டா நோய்த்தொற்றுகள் உள்ளன, இதனிடையே இந்த இரண்டு வைரஸுகளும் கலந்து புதிய திரிபினை நாங்கள் கண்டறிந்துள்ளோம்....

அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க தயார்! யாழில் சஜித்

அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் அதிருப்தி தீவிரமடைவதால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதென அக்கட்சித் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தியின்...
Ad Widget

மனைவியை கிணற்றில் தள்ளி கொலை செய்த கணவர் கைது!!

முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் கிணற்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டார் என்று அவரது கணவர் பொலிஸில் ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார். பெண்ணின் தலையில் காயம் காணப்பட்டதாகவும் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா அறிக்கையிட்டுள்ள நிலையில் பொலிஸாரின் விசாரணையில் பெண்ணின் கணவர் குற்றத்தை...

கல்கிசை – காங்கேசன்துறை குளிரூட்டப்பட்ட கடுகதி சேவைக்கு புதிய தொடருந்து!!

கல்கிசை – காங்கேசன்துறை இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையில் புதிய தொடருந்து நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 5.10 மணியளவில் கல்கிசையிலிருந்து சேவையை ஆரம்பித்த தொடருந்து நண்பகல் 12.15 மணிக்கு யாழ்ப்பாணம் முதன்மை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு பயணத்தைத் தொடர்ந்தது. காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு சேவையை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட...

இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்துள்ள கீழ் வளிமண்டல தளம்பல் நிலை

இலங்கைக்கு தென்கிழக்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்துள்ளது. எனவே இன்றும், நாளையும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

பகலில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது -இலங்கை மின்சார சபை

நாட்டில் பகலில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான எரிபொருள் இருப்புக்களை வழங்க இணங்கியுள்ளதால் இம்மாதம் மின்வெட்டை அமுல்படுத்தவேண்டிய தேவையில்லை என அந்த மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். எதிர்வரும் 05 நாட்களுக்கு போதுமான எரிபொருள் தற்போது கிடைத்துள்ளதாக அவர்...

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் வழமைக்கு திரும்பின!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று (திங்கடகிழமை) முதல் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இதுவரை காலமும் பாடசாலைகளில் பகுதி பகுதியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் வழமை போன்று அனைத்து வகுப்புகளுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது....

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து சண்டிலிப்பாயில் போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனமும், மாதகல் பிரதேச கடற்தொழிலாளர்களும் இணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தனர். 2500 இந்திய இழுவைமடி தொழிலை நிறுத்தும் வரை போராடுவோம், இந்திய அரசு வடக்கு...

யாழ். நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில்!

யாழ்ப்பாண நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலைக்கு முன்பாக எரிவாயு சிலிண்டர்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதன்போது, முதல் வருகைதரும் 300 பேர்களுக்கு மட்டும் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்...

பலாலி சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளமை கவலையளிக்கிறது!! – அர்ஜுன ரணதுங்க

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளமை கவலை அளிப்பதாக முன்னாள் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். ​நேற்று (06) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாண மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் முகமாக...

வடமாகாண ஆளுநர் மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றார் – எம்.கே.சிவாஜிலிங்கம்

வடமாகாண ஆளுநர் மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றார் எனவும் இதனை என்னால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நிரூபிக்க முடியும் எனவும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறும் அவர் வடமாகாண ஆளுநருக்கு அழைப்பு விடுத்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடக...

யாழ்ப்பாண நகர எல்லைக்குள் புதிய வகை நுளம்பு! துரிதமாக பரவும் அபாய நிலை!!

யாழ்ப்பாண நகர எல்லைக்குள் ´எனோபீலிஸ் டிபென்ஸி´ எனப்படுகின்ற புதிய வகை மலேரியா நுளம்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது மிகவும் அனர்த்த நிலை என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஏ. கேதீஷ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தென்ஆபிரிக்காவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு...

பிரதமர் மோடிக்கான கூட்டு ஆவணத்தில் தமிழ்த் தேசிய தலைமைகள் கைச்சாத்து!!

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்காக இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித் தீர்வினை வழங்க வேண்டும் என்பதோடு, இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்’ எனும் தலைப்பிலான கூட்டு ஆவணத்தில் தமிழ்த் தேசிய தளத்தில் செயற்படும் அரசியல்...

யாழில் மலேரியா நோய் தொற்று ஏற்படக்கூடிய அபாயம்- ஆ.கேதீஸ்வரன்

வெளிநாடுகளுக்குச் செல்ல ஒரு மாதத்திற்கு முன்பு, அதன் பின்னர் அந்த நாடுகளில் தங்கி இருக்கின்ற காலப்பகுதி, நாட்டுக்கு திரும்பிய பின்னர் என தொடர்ச்சியாக மலேரியா தடுப்பு மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,...

மன்னாரில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் – வீடு எரிந்து நாசம்!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தரவான் கோட்டை பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மதியம் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தரவான் கோட்டை பகுதியை சேர்ந்த கூலி தொழிலில் ஈடுபடும் பெண் ஒருவரின் வீட்டில் மேற்படி எரிவாயு மற்றும் அடுப்பு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வெடிப்பு காரணமாக வீடு எரிந்து முற்றுமுழுதாக நாசம்...

சிகிச்சைக்கு வந்த மூதாட்டியின் நகைகள் திருட்டு!

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த வயோதிப பெண்மணியின் 3 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக, பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த வயோதிப பெண் இன்று (06) சிகிச்சையின் நிமித்தம், எக்ஸ்ரே எடுப்பதற்காக சென்ற போது, தான் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் காப்பு ஆகியவற்றினை கழட்டி தனது...

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் உயிரை மாய்க்க முயற்சி!

பருத்தித்துறை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் , தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டு , யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அல்வாய் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே அவ்வாறு...

மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு – ஆசிரியரின் விளக்கமறியல் நீடிப்பு!

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிசாரால் 24.12.21 அன்று கைது செய்யப்பட்டார். பாடசாலை சிறுமிகள் மீது ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோக முயற்சி தொடர்பில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவிற்க கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து 24.12.21 அன்று முல்லைத்தீவு பொலிசாரால் குறித்த ஆசிரியர்...

ஆரியகுளத்தின் உரிமையை உறுதிப்படுத்துங்கள் மாநகர ஆணையாளருக்கு ஆளுநர் கடிதம்!

யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் பொதுமக்களின் சமய உரிமையை மீறும் வகையில் செயற்படும் அதிகாரம் மாநகர சபைக்குக் கிடையாது என சாரப்பட – மாநகர சபையை அச்சுறுத்தும் பாணியில் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். யாழ். மாநகர முதல்வரின் ஏற்பாட்டில் தனியார் நிதிப் பங்களிப்புடன் ஆரியகுளம் அழகுபடுத்தப்பட்டு, பொழுதுபோக்குத்...

கொரோனா அச்சம் காரணமாக வல்வை பட்டத்திருவிழா இடைநிறுத்தம்!

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா கொரோனா காரணமாக இடைநிறுத்தப்படுவதாக, ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் வருடாந்திரம் தைப்பொங்கல் தினத்தன்று மாபெரும் பட்டத்திருவிழா இடம்பெறுவது வழமையாகும். அந்த வகையில் இம்முறையில் பட்டத்திருவிழாவை நடாத்த ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்திருந்தனர். இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்காத நிலையில், பட்டத்திருவிழாவை நடாத்தும் போது, கொரோனா தொற்று அபாயம் அதிகரிக்கும் என பிரதேச மக்கள்...
Loading posts...

All posts loaded

No more posts