Ad Widget

ஒமிக்ரோனை தொடர்ந்து டெல்டாக்ரோன் புதிய கொரோனா திரிபு கண்டுபிடிப்பு : அச்சத்தில் மக்கள்

ஒமிக்ரோன் தொற்று உலகளாவிய ரீதியில் கவலைகளை தோற்றுவித்துள்ள நிலையில் டெல்டா மற்றும் ஒமிக்ரோனின் அம்சங்களை இணைக்கும் புதிய SARS-CoV-2 இன் புதிய திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சைப்ரஸில் உள்ள உயிரியல் அறிவியல் பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

தற்போது ஒமிக்ரோன் மற்றும் டெல்டா நோய்த்தொற்றுகள் உள்ளன, இதனிடையே இந்த இரண்டு வைரஸுகளும் கலந்து புதிய திரிபினை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

புதிய திரிபில் டெல்டா மரபணுவிற்குள் ஒமிக்ரோன் போன்ற மரபணு அடையாளம் காணப்பட்டதால் இந்த கண்டுபிடிப்புக்கு டெல்டாக்ரோன் என்று பெயரிடப்பட்டது என்று சைப்ரஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், உயிரி தொழில்நுட்பம் மற்றும் மூலக்கூறு இரசாயனவியல் ஆய்வகத்தின் தலைவருமான லியோண்டியோஸ் கோஸ்ட்ரிகிஸ் கூறினார்.

சைப்ரஸில் இதுவரை 25 ‘டெல்டாக்ரோன்’ தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் லியோண்டியோஸ் கோஸ்ட்ரிகிஸ் மற்றும் அவரது குழுவினர் கூறியுள்ளனர்.

Related Posts