இயல்பு நிலையினை உதாசீனம் செய்யாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும் –யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்

தற்போதுள்ள இயல்புநிலையினை உதாசீனம் செய்யாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவதானமாக செயற்படுங்கள் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”யாழ்ப்பாண மாவட்டமானது பொது முடக்கத்தின் பின்னர் சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது தற்போது...

ஐப்பசி 6ஆம் திகதியை தேசிய கறுப்பு தினம் – ஆசிரியர்களின் சங்கம் அறிவிப்பு!

இலங்கையில் ஆசிரியர் தினம் எதிர்வரும் ஐப்பசி மாதம் ஆறாம் திகதி கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் அன்றைய தினத்தை நாம் தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி இருக்கின்றோம். என இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் ஜீவராசா ருபேஷன் தெரிவித்தார். இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண செயலாளர்...
Ad Widget

யாழ். பல்கலை இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐவருக்கும் மாணவர்கள் மூவருக்கும் கொரோனா தெற்று!

யாழ். பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐந்து பேருக்கும் மாணவர்கள் மூவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊடாக அனுப்பி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 5 விரிவுரையாளர்களுக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவுரையாளர்களுடன் மாணவர்கள் மூவரும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்னர்...

யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தின் கட்டடப் பராமரிப்பு செலவை 5 ஆண்டுகள் இந்தியா பொறுபேற்கும்

யாழ்ப்பாணம் மத்திய கலாசார மண்டபத்தின் கட்டடப் பராமரிப்புச் செலவை இந்திய மத்திய அரசு பொறுப்பேற்றுக கொள்ளும் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர், மத்திய கலாசார மண்டபத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்தார். தமிழ் மக்களின் கலாசார பண்பாடுகளுக்காக இந்திய...

பொலிஸாரின் கடமைக்கு பிரதேச சபை உறுப்பினர் இடையூறு; பொலிஸார் துப்பாக்கிச் சூடு!!

வலி.கிழக்கு பிரதேச சபையில் ஈபிடிபி உறுப்பினர் கடமைக்கு இடையூறு விளைவித்ததால் பொலிஸார் வானத்தை நோக்கி சூடு நடத்தி எச்சரித்தனர். இந்தச் சம்பவம் ஊரெழு பகுயில் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றது. “ஊரெழு பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தனர். மோட்டடார் சைக்கிள் ஒன்றில் இருவர் தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் பயணித்தனர் அவர்களை வழிமறித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை...

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடம் வழங்கப்படாது – யாழ். மாநகர முதல்வர்

ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. உட்புகுத்தப் போவதுமில்லை என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஆரிய குளத்தின் மத்தியில் மத நல்லிணக்க மண்டபம் அமைப்பது தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக சனிக்கிழமை ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....

ஒன்பது முக்கிய நீண்ட கொரோனா அறிகுறிகள் – புதிய ஆய்வில் அடையாளம்

கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட 90-180 நாட்களுக்குப் பின்னர் ஒன்பது முக்கிய நீண்ட கொரோனா அறிகுறிகள் ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திமா ஜீவந்தரா கூறினார். இந்தப் புதிய ஆய்வு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தீவிரமான...

விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள் ஓடியவருக்கு 125,500 ரூபாய் தண்டம்!

மதுபோதையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்தவர் இன்று நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரினால் முற்படுத்தப்பட்டார். அவர் மீது 7 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து குற்றப்பத்திரத்தை பொலிஸார் தாக்கல் செய்தனர். மதுபோதையில் வாகனம்...

சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஆர்ப்பாட்டம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகரின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம் பெற்றது. இதன்போது அண்மையில் ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், அதற்கெதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன. இன்று...

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் கைது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை மற்றும் மன்னாரில் கடற்படையினரால் பொதுமக்கள் தாக்கப்பட்மை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணை அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,...

யாழ்ப்பாணத்தில் பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பரிந்துரைக்கு அமைய 12 தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டம் யாழ்.போதனா வைத்தியசாலையில், இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 12 தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்ட நீண்ட கால நோய் உடையோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வைத்தியர் ஒருவரின் சிபாரிசின் அடிப்படையில் குறித்த தடுப்பூசியினை...

காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக் காலத்தை நீடிப்பு!!

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்து அதிசிறப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையெழுத்திட்டார். அதன்படி, ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30ஆம் திகதிவரை காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் திகதியிலிருந்து 12 மாதங்கள் நீட்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று ஒக்டோபர் முதலாம் திகதி காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின்...

காணாமற்போன கோப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!!

கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் காணாமற்போயிருந்த நிலையில் இரண்டு நாள்களின் பின்னர் நேற்று நவாலியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் (வயது-51) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6 மணி தொடக்கம் அவரைக் காணவில்லை என...

அடுத்த 2 வாரங்களில் கோவிட்-19 வைரஸ் பரவல் அடிப்படையில் கட்டுப்பாடுகள் இறுக்கப்படலாம்

அடுத்த இரண்டு வாரங்களில் கோவிட் -19 தொற்றுநோய் பரவல் அடிப்படையில் பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்தார். சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது வெளியிடப்பட்டுள்ள அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்....

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறினால் நிலைமை மேலும் மோசமாகும் – ஆ. கேதீஸ்வரன்

ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் நிலையில், பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி ஒன்றுகூடினால், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். அத்துடன், தடுப்பூசி பெற்றவர்களாக இருந்தாலும், சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றுவது அவசியமாகும் எனவும், அவர் கூறினார்....

ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக அறிவிப்பு!!

ஆட்பதிவு திணைக்களம் எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கான தங்களது சேவையை மீள ஆரம்பிக்கவுள்ளது. எனினும் அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை தொடர்ந்து முன்னெடுக்கப்படாது என கூறப்படுகின்றது.

உற்சவங்கள் மற்றும் விருந்துபசார நிகழ்வுகளுக்கு தடை- இரவு நேர ஊரடங்கு அமுல் : விசேட அறிவிப்பு வெளியானது!

நாடு, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திறக்கப்பட்டாலும் இரவு நேர ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்று முதல் 15ஆம் திகதி வரை பதிவுத் திருமணங்களில் 10 பேர் மாத்திரம் கலந்துகொள்ள முடியுமெனவும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது....

வடக்கில் 12-19 வயதுக்குட்பட்ட சிறப்பு தேவை, நாள்பட்ட நோயுடையோருக்கு பைசர் தடுப்பூசி வழங்கல் வெள்ளியன்று ஆரம்பம்

வடக்கு மாகாணத்தில் சிறப்பு தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதினருக்கான கோவிட்-19 தடுப்பு மருந்தேற்றும் நடவடிக்கை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கோவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் சிறப்புத்...

தேவாலயங்கள் மீதான தாக்குதல் குறித்த செய்திகளால் பீதியடைய வேண்டாம் – பாதுகாப்பு அமைச்சு

சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் இலங்கை தேவாலயங்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற செய்தி அடிப்படைத் தகவலை அடிப்படையாகக் கொண்டது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு குறித்த தகவல் அந்தந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல். கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து பீதியடைய எந்த...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் முதலாம் திகதி தளர்வு!!

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், புதிய சுகாதார வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading posts...

All posts loaded

No more posts