- Sunday
- August 24th, 2025

யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு...

இலங்கையில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களிலும் நேற்று (19) எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலைக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எடுத்த தீர்மானமே காரணம் என எரிபொருள் பிரிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய முறையின்படி, எரிபொருள் ஆர்டருக்கு முந்தைய நாள்...

வவுனியா வைத்தியசாலையில் நாய் ஒன்று வாயு துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே நேற்று (19.) இவ்வாறு சுட்டுக் கொலை செய்துள்ளார். வைத்தியசாலையின் பிரேத அறையருகில் நின்ற நாய் மீதே பாதுகாப்பு உத்தியோகத்தர் தன்னிடம் இருந்த வாயு துப்பாக்கியை பயன்படுத்தி கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது. இதனால் காயமடைந்த நாய்...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் நுழைந்த நபர் காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று நேற்றையதினம் மாலை இடம்பெற்றது. மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை வைத்தியசாலை காவலாளி தடுக்க முற்பட்டபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றது. 35 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். காயமடைந்த காவலாளி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் நிமால் தெரிவித்துள்ளார். ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து வருகை தந்தவருக்கே இவ்வாறு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று கரை ஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது. குறித்த படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர். அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில்...

தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (17.12.2024) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவும், மாவட்டச் செயலகத்தில் 2024.12.11 ஆம் திகதி நடைபெற்ற...

ரஷ்ய அரசாங்கம் புற்றுநோய்க்கு எதிரான தனது சொந்த ‘mRNA’ தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்து உள்ளார்....

யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியினால் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக நேற்று (18) அவதூறு வழக்கொன்றை யாழ்.மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்து 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளார். நேற்றுமுன்தினம் (17) தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்குத் தொடர்பான கட்டாணை வழங்குவது தொடர்பாக யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் மேலதிக மாவட்ட நீதிபதி...

யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7,200 பேருக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் 8 பேரும்...

க.பொ.த சாதாரண தர பரீட்சை மார்ச் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் நேற்றையதினம் (18) பிற்பகல் அறிவித்துள்ளது. இம்முறை சாதாரண தர பரீட்சையை 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் மார்ச் 26ஆம் திகதி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ.அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இது தொடர்பான...

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ். வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து சபைக்கு முரணான வகையிலும் நிலையியற் கட்டளைகளுக்கு முரணாகவும் உரையாற்றியதால் அவரின் உரை சபாநாயகரால் ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கப்பட்டது. பாராளுமன்றம் புதன்கிழமை (18) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது. இதனையடுத்து நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா வேளையின்போது...

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்க பிரதேசம் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (13) நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது...

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்தும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துவரப்பட்ட சிறைக் கைதியொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் நேற்று காலை வழக்கொன்றுக்காக அழைத்துவரப்பட்டவரே இவ்வாறு உயிரிழந்தார். நாவற்குழி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 40 வயதான இரத்தினசிங்கம் சந்திரகுமார் என்பவரே உயிரிழந்தவராவார். இக்கைதி பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தொடர்பு பட்டவர்...

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான காய்ச்சல் காரணமாக இதுவரை 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இக்காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் யாழ். போதனா வைத்தியசாலயிலும் 32 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வைத்தியகலாநிதி. ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,...

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக மர்ம காய்ச்சல் காரணமாக அதிகளவிலான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. இதேவேளை இவர்களுக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவிவருகின்றது. இந்நிலையில் கொழும்பு தொற்று நோய்யியல் பிரிவை சேர்ந்த வைத்தியர் பிரபா அபயக்கோன் உள்ளிட்ட குழுவினர் யாப்பாணத்துக்கு விஜயம் செய்து ஆய்வு நடவடிக்ககைகளில் ஈடுப்பட்டுள்ளனர். நேற்று யாழ்...

நாட்டின் அண்மைக்காலமாக நிலவிவரும் தேங்காய் தட்டுப்பாட்டிற்கு வருடத்தின் முதல் சில மாதங்களில் நிலவிய கடுமையான வெப்பமான வானிலையே பிரதான காரணம் என ருஹுனு பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் வருடாந்தம் பயிரிடப்படும் தென்னை மரக்கன்றுகளின் எண்ணிக்கை சுமார் 70 இலட்சம் வரை குறைந்துள்ளமையும் இதற்கான காரணமாக...

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, விசாரணைக்காக இன்று வியாழக்கிழமை (12) எடுத்துக்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் காணாமல்போனோர் அலுவலகம் (ஓ எம் பி ) சார்பில் அலுவலகத்தின் சட்டத்தரணி, ஓஎம்பி அலுவலகத்தின் கிளிநொச்சி , முல்லைத்தீவு பிராந்திய இணைப்பாளர் கிருஷாந்தி ரத்நாயக்க,...

வடமாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் உயிரிழந்த 07 பேரிடம் எடுக்கப்பட்ட பல மாதிரிகளில் எலிக்காய்ச்சல் அல்லது லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (12) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அதன் சமூக சுகாதார நிபுணர் டாக்டர் துஷானி பெரேரா இதனைத் தெரிவித்தார். உயிரிழந்த 7 பேரின்...

வட மாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக தேவையேற்படும் பட்சத்தில் மாவட்டத்தின் ஏனைய சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளிலிருந்து ஆளணியினரைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வட மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று(11) மாலை வரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக...

All posts loaded
No more posts