ஒரு வாரத்தில் அனைத்து அரச மருத்துவமனைகளும் மூடப்படும் அபாயம்?

இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து அரச மருத்துவமனைகளும் மூடப்படும் நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். அரசாங்க மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய மருந்துகளை அரசாங்கம் வழங்காவிட்டால் இந்த நிலை ஏற்படும் எனவும் அவர்...

முருகன் ஆலயத்தில் புத்தர் சிலை – அனுமதிக்க முடியாதென தீர்மானம்!!

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலைகளை வைத்து பிரித் ஓதுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாதென ஆலய தர்மகத்தா சபையும் ஆலய பக்தர்களும் ஒன்றிணைந்து தீர்மானமொன்றை எடுத்தனர். ஆலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு...
Ad Widget

வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் கைது!

யாழில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட...

ஒருலட்சம்தானா எனது பிள்ளையின் பெறுமதி? கோகிலவாணி கேள்வி

ஒருலட்சம்தானா எனது பிள்ளையின் பெறுமதி? அவ்வாறு எனது பிள்ளையை பெறுமதி தீர்க்க இவருக்கு என்ன அருகதை இருக்கின்றது? என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி இராமநாதன் கோகிலவாணி கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு...

நாடளாவிய ரீதியில் இன்று முதல் வழமைக்கு திரும்புகின்றது எரிவாயு விநியோகம்!

நாடளாவிய ரீதியில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் எரிவாயு விநியோகம் செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு படிப்படியாக நீங்கும் எனவும் லிட்ரோ நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது....

ஜனாதிபதியுடனான கூட்டமைப்பின் கலந்துரையாடல் இரத்து!!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த சந்திப்பு 25 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகம் ஒத்திவைப்பது குறித்த அறிவித்தது என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எமக்கு உறுதிப்படுத்தினார். ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்போகும் விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தற்போது கலந்துரையாடி வருகின்றனர். குறித்த கலந்துரையாடல்...

மரணச் சான்றிதழுடன் 100,000 ரூபாய் இழப்பீடு: ராஜபக்ஷ அரசாங்கம் அறிவிப்பு!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழ், 100,000 ரூபாய் இழப்பீடு மற்றும் காணி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஐ.நா. கூட்டத்தொடரின் பின்னர் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமக்கு உண்மையும் நீதியும் மட்டுமே வேண்டும் என்றும் இழப்பீடும் தேவையில்லை என்றும் தெரிவித்தே...

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற அமைச்சரவை இணங்கியது!!

நாட்டில் தற்போது டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்களை இறக்குமதிசெய்வதில் பல்வேறு சிக்கல் நிலைதோற்றம் பெற்றுள்ளது. இதனால் நாட்டு மக்கள் எரிபொருள், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தவற்கு நாள்தோறும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சர்வதேச...

நெடுந்தீவு சிறுமியை கொன்ற குற்றவாளியே கர்ப்பிணிப் பெண்ணை கொடூரமாகக் கொலை செய்தார்!!

ஊர்காவற்றுறை பகுதியில் 2017 ஜனவரி 24ஆம் திகதி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணித் தாயின் வழக்கு விசாரணைகள் 5 ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவில் 12 வயதுச் சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட ஈபிடிபியின் முன்னாள் உறுப்பினரே...

நாட்டில் கொவிட் தொற்றாளர், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது!!

நாட்டில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் , கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கனிசமானளவு குறைவடைந்துள்ளது. 80 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இரு கட்ட தடுப்பூசிகளும் வழங்கப்பட்டமையே இதற்கான காரணமாகும் என்று விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத்...

ஜனாதிபதி – தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு இன்று!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இடையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. சந்திப்பிற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூடுவதுடன், சந்திப்பின் நோக்கம், முன்வைக்க வேண்டிய காரணிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியல் தீர்வு விடயங்களில் அரசாங்கம் காட்டவேண்டிய...

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக ஈழமக்கள் ஐனநாயக கட்சி கண்டன போராட்டம்!

பிரதேச அபிவிருத்திகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளின் போது யாழ் மாவட்ட செயலகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்து யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக கண்டன போராட்டமொன்று இடம்பெற்றது. ஈழமக்கள் ஐனநாயக கட்சியினுடைய ஏற்பாட்டில் நேற்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுகூடிய அக்கட்சியினுடைய உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் வாயில் கதவை அடைத்து போராட்டத்தில்...

கேஸ் விலையும் 800 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது?

" ஆசியாவின் அதிசயமான நாட்டில் வாழ வைப்போம் என இலங்கை மக்களுக்கு தேர்தல் காலத்தில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இன்று ஆசியாவின் படுபாதாளத்துக்குள் நாட்டு மக்களை இந்த குடும்ப ஆட்சி தள்ளியுள்ளது." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற எம். உதயகுமார் குற்றஞ்சாட்டினார். அத்துடன், நாட்டு மக்களின் தோழன் சஜித்,...

கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 198 புள்ளிகள்!!

2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் தமிழ்செல்வன் கஜலக்ஸன் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு 9.55 மணிக்கு பரீட்சைகள் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் வெளியிடப்பட்டன. அதனடிப்படையில் 10.20 மணிவரை உத்தியோகபூர்வமாக வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் கல்வி வலயப்...

மீண்டும் பாரிய சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் அபாயம் – லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் மீண்டும் பாரிய சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தனது கையிருப்பில் உள்ள எரிவாயு திங்கட்கிழமை (14) வரை மட்டுமே போதுமானது என பிரதான எரிவாயு விநியோகஸ்தரான லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் தலா 3500 மெட்ரிக் டொன் எரிவாயுவுடன் இரு கப்பல்கள்...

50 கிலோ எடையுள்ள சீமெந்தின் விலை அதிகரிப்பு !

50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலையை 350 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் புதிய விலை 1,850 ரூபாயாக அதிகரித்துள்ளது. சீமெந்து மூட்டையின் விலை தற்போது 1,500 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்.போதனாவில் வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்தம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை இன்று (திங்கட்கிழமை) முதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையில் மாதிரி சேகரிப்பு பணியிலிருந்து வைத்தியர்கள் விலகுவதால் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நிறுத்தப்படுகிறது என அவர்...

வேலணையில் தாய் மற்றும் மகள் மீது கத்திக்குத்து – குத்தியவரும் தனது உயிரை மாய்க்க முயற்சி!

தாய்க்கும் மகளுக்கும் கத்தியால் குத்திய நபர் தனது உயிரையும் மாய்க்க முயன்ற நிலையில் மூவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடும்ப பெண் மற்றும் அப்பெண்ணின் மகள் ஆகியோர் மீது ஒருவர் வீடு புகுந்து சரமாரியாக கத்தியால்...

மீண்டும் அதிகரிக்கப்படுகின்றது எரிபொருளின் விலை – உறுதிப்படுத்தினார் பஷில்?

லங்கா IOC நிறுவனம் எரிபொருளுக்கான விலையை அதிகரித்ததை போன்று, ஏனைய நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு வெளியில் நடக்கும் விடயங்கள் காரணமாகவே இவ்வாறான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக...

கோதுமை மாவின் விலையும் அதிகரிப்பு!

நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. செரன்டிப் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாணின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்...
Loading posts...

All posts loaded

No more posts