Ad Widget

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகளுக்கு புதிய எச்சரிக்கை விடுத்த புடின்

உக்ரைனுக்கு தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்கும் நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் 100 நாட்களாக நீடித்து வருகிறது. ரஷியப் படைகள் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ளது.

இருப்பினும், கடந்த சில தினங்களாக உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணைகளை சில மேற்கத்திய நாடுகள் கொடுத்து உதவுவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புதிய எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த எச்சரிக்கையில் ரஷ்ய ஜனாதிபதி அவர் தெரிவித்திருப்பதாவது,

“ உக்ரைனுக்கு தொலைதூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் வழங்கினால், நாங்கள் அதற்கான சரியான முடிவை எடுக்க நேரிடும். எங்களது ஆயுதங்களை அவர்களின் மீது உபயோகிக்க வேண்டி வரும்” என எச்சரித்துள்ளார்.

இதேவேளை, உக்ரைன் தலைநகர் கீவில் இன்று அதிகாலை ரஷ்யா திடீர் என ஏவுகணை தாக்குதல்களை நடந்த்தியது பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

Related Posts