யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம் ; 09 சபைகளை நிராகரித்து விட்டார்கள் – சித்தார்த்தன்

யாழ்ப்பாணத்தில் எல்லா சபைகளிலும் வெல்லக்கூடிய வெற்றி வாய்ப்புகள் இம்முறை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு உள்ள நிலையில் சில சபைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் சித்தார்த்தன் தெரிவித்தார். சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) ஊடகங்களை சந்தித்த போதே...

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் திங்கட்கிழமை (24) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையில் , உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை , உயிரிழந்த இளைஞனுடன் இணைந்து போதைப்பொருளை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும்...
Ad Widget

சட்டவிரோத தையிட்டி விகாரையும் புதிய மடாலயமும் இன அழிப்பு தொடர்வதற்கான அடையாளங்களே!

இன அழிப்பை தொடர்வார்கள் என்பதற்கான அடையாளங்களாகவே சட்ட விரோத தையிட்டி விகாரையும் புதிய மடாலயமும் அமைந்துள்ளன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று செவ்வாய்க்கிழமை (25) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:...

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநிறுத்தம்!!

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தர்க்கத்தையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா மற்றும் இளங்குமரன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இந்த கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கடும் குழப்ப நிலை ஏற்பட்டதையடுத்து, கூட்டத்தின் தலைவர் அமைச்சர் சந்திரசேகரனால் நிலைமையை...

14 வயது சிறுமியை கட்டி வைத்து தாக்கிய பெண்!!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை பொற்பதியில் 14 வயது சிறுமி ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி, மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். குறித்த பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவர், நேற்று முன்தினம் (23) மாலை, அயலில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு...

குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்!

கடந்த வாரத்தில் நாட்டில் இரண்டு துயரமான குழந்தைகள் இறப்புகள் பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து, பெற்றோர்கள் தங்கள் சிறு பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் பதிவான முதல் சம்பவத்தில், ஒரு வீட்டில் காலியான குளிர்பான போத்தலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசலை உட்கொண்டதால் ஒரு குழந்தை இறந்தது. சம்பவத்தைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் குழந்தையை...

டீசலை அருந்திய குழந்தை உயிரிழப்பு!!

ஊர்காவற்றுறையில் குளிர்பானம் என்று நினைத்து போத்தலில் இருந்த டீசலை அருந்திய குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டின் அருகே இருந்த டீசல் போத்தலை குழந்தை குளிர்பானம் என்று நினைத்து அருந்தியதாகவும், இதைப் பார்த்த பெற்றோர் உடனடியாக குழந்தையை ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி...

போக்குவரத்து அபராதங்களுக்கு Govpay இல் கட்டணம்!

போக்குவரத்து அபராதங்களை Govpay இல் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவு (ICTA) தெரிவித்துள்ளது. வாகன சாரதிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பொதுமக்கள் விரைவில் Govpay மூலம் போக்குவரத்து அபராதங்களை செலுத்த முடியும் என்று ICTA இன் உறுப்பினர் ஹர்ஷா புரசிங்க தெரிவித்தார். இது தொடர்பான அடிப்படைப் பணிகள் ICTA இனால்...

போலிச் செய்திகளைக் கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம்!! -கல்வியமைச்சு

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தெளிவூட்டும் வகையில் கல்வியமைச்சின் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த போலிச் செய்தியில் கீழே குறிப்பிட்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்...

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்குத் திரும்ப வேண்டும்!- வட மாகாண ஆளுநர்

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்குத் திரும்ப வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது ஈழ அகதிகள் நாடு திரும்புவது...

தையிட்டியில் மற்றுமொரு புதிய கட்டிடம்: பொதுமக்கள் போராட்டம்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் குறித்த பகுதியில் நேற்று மற்றுமொறு புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திஸ்ஸ விகாரைப் பகுதியில் கள ஆய்வுகளை...

சிக்குன்குனியா நோய் பரவல் தொடர்பில் எச்சரிக்கை!

சில வருடங்களின் பின்னர் கொழும்பு மற்றும் கோட்டை பகுதிகளில் சிக்குன்குனியா நோய் பரவல் அதிகமாக பதிவாகி வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. நுளம்புகள் பெருகும் இடங்களை முடிந்தவரை அழிப்பதன் மூலம் மட்டுமே சிக்குன்குனியா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். “சிக்குன்குனியா” நோய் தற்போது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்களிலும் பசுபிக்...

யாழ். மாவட்டத்தின் வேட்புமனுக்கள் தொடர்பான முழுமையான விபரம் அறிவிப்பு!

யாழ் மாவட்டத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான முழுமையான விபரத்தை யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் மற்றும் பரிசீலனை நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போது இதனை தெரிவித்தார். அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்முறை தேர்தலுக்காக 148 கட்சிகளும் 27 சுயேட்சைக் குழுக்களுமாக கட்டுப்பணத்தை...

வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதிலடி!

யாழிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது குழறுபடிகள் அல்லது சதி நடவடிக்கைகள் இடம்பெற்றிருப்பதாக சில தரப்புக்கள் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் பதிலளித்துள்ளார். வேட்புமனுத் தாக்கல் தொடர்பில் நேற்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண உள்ளூராட்சி...

ஆட்சேபனைகளை முன்வைக்க ஒன்றரை மணி நேரம் கால அவகாசம்!!

திர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. அதன்படி, ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை முன்வைப்பதற்கு ஒன்றரை மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்று பிற்பகல் 1.30 மணிவரை ஆட்சேபனைகளை முன்வைக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் காணாமல்போன மீனவர்கள் இராமநாமபுரம் கடலில் மீட்பு!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற வேளை காணாமல் போன மீனவர்கள் ஐந்து நாட்களின் பின்னர் தமிழக கடலோர பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் தொண்டி மீன்பிடித்துறைமுகத்திற்கு சற்று தொலைவில் படகொன்று தத்தளித்துக்கொண்டிருந்ததை கண்ணுற்ற தமிழக கடலோர பொலிஸ் படையினர் அவர்களை படகுடன் மீட்டு கரை சேர்த்துள்ளனர். பின்னர், அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த இருவரும் குருநகர் பகுதியை...

யாழில் வேட்புமனு தாக்கல் செய்த இலங்கை தமிழ் காங்கிரஸ்!!

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. நேற்று (19) பிற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், யாழ். மாவட்டத்தில் உள்ள 9 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான வேட்புமனு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சி – சுமந்திரன்

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம். ஆனால், எல்லாருக்கும் தெரிந்த விடயம், இந்த தேர்தல் முறைமையிலே எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம். ஆனாலும் நாங்கள் முயற்சி செய்கிறோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை...

பட்டலந்த பற்றி பேசும் அரசாங்கம் தமிழின அழிப்பு பற்றியும் விவாதிக்க வேண்டும் – சிறீதரன்

‘பட்டலந்த’ என்ற சொல்லின் ஊடாக தமிழ்த் தேசியத்திற்கு எதிரான இனப்படுகொலையை மறைத்துவிட வேண்டாம். தமிழர் மீது நடத்தப்பட்டது இனப்படுகொலையல்ல யென வாதிடும் நீங்கள் பட்டலந்த படுகொலை தொடர்பில் பேசுவதற்கு தயாராகின்றீர்கள். நாங்கள் அதனை எதிர்க்கவில்லை. விசாரணை வேண்டும். யார் அநியாயமாக கொல்லப்பட்டார்களோ, யார் நீதியின் கண்களுக்கு முன்னால் சித்திரவதை செய்யப்பட்டார்களோ அவர்களுக்கு நீதி வேண்டும் என்பதனை...

வடக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதியை எவ்வாறு வினைத்திறனாக பயன்படுத்துவது?? ஆளுநர் ஆராய்வு

வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி இம்முறை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் இணைத் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (18) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் வடக்கு மாகணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், ஒதுக்கப்பட்டுள்ள நிதி...
Loading posts...

All posts loaded

No more posts