- Wednesday
- July 8th, 2026
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும் , யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் , வடமாகாண பண்பாட்டலுவல்கள் இணைந்து நடாத்திய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) யாழில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தலைமையில் இடப்பெற்ற இவ்விழாவில் , பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் எஸ்,எம்.சமன் பந்துலசேனவும்...
யாழ்ப்பாணம் நகரில் போலியான உறுதி நிறைவேற்றப்பட்டு மேற்கொள்ளப்பட்ட காணி மோசடி தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் மன்றில் முற்படுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகரில் மறைந்த தம்பதியரின் சார்பில் நிறைவேற்றப்பட்ட அறுதி உறுதியின் மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினர் ஒருவரை கைது...
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட ஏனைய துறைகளில் பணிபுரியும் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கு போட்டிப்பரீட்சை நடத்துவது தொடர்பாக எதிர்வரும் வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம் ஜயந்த நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 200 இற்கும் அதிகமானவர்கள், விரிவுரையாளர்கள் பட்டப்பின் படிப்பிற்காக வெளிநாடு சென்று திரும்பி வரவில்லை....
தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் கட்டம் கட்டமாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ஆகியோருக்கு தமிழ் மக்கள் சார்பில் தனது நன்றியையும் அவர் தெரிவித்தார்....
நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் இதனைத் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலாக எதிர்வரும் 29ஆம் திகதி பாடசாலை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி...
இந்தோனேசியாவில் திரவ இருமல் மருந்துகளை உட்கொண்ட 100 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் பலியான சம்பவம் உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில்,மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் உயிரிழந்த 66 குழந்தைகளும் உட்கொண்ட சிரப் மருந்து இந்தியாவின் மைதன்...
ரஷ்ய குண்டுவீச்சு விமானங்களை இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் அலாஸ்கா அருகில் இடைமறித்தாக வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்புக் கட்டளை (NORAD) தெரிவித்துள்ளது. அலாஸ்காவிற்கு அருகில் பறந்த Tu-95 Bear-H ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள் திங்களன்று அலாஸ்கன் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் நுழைந்ததை அடுத்து அவை இடைமறிக்கப்பட்டதாக NORAD செவ்வாயன்று தனது அறிக்கை ஒன்றில்...
பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மா கிலோ ஒன்றின் மொத்த விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் வெதுப்பக பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அந்தச் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்த்தன தெரிவித்தார். கோதுமை மாவின் விலை...
யாழ்.மாநகர எல்லைக்குள் வீதிகள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசுகின்றவர்களை புகைப்படம் மற்றும் காணொளி பதிவு செய்து ஆதாரத்துடன் மாநகரசபைக்கு அறிவிப்பவர்களிற்கு குறித்த குற்றத்திற்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தில் பத்து வீத தொகையினை சன்மானமாக வழங்குவதென யாழ்.மாநகர சபை தீர்மானித்துள்ளது. யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற மாநகர சபைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டது. மேலும்,...
சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] காரைநகர் கடற்பரப்பில் நேற்றைய தினம்(புதன்கிழமை) இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்த போதே கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைதான மீனவர்களையும் அவர்களின் படகினையும் மேலதிக நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல்...
கோதுமை மாவின் மொத்த விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் கோதுமை மாவின் மொத்த விலை 290 ஆக காணப்பட்டதுடன், தற்போது 25 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கோதுமை மாவின் புதிய மொத்த விற்பனை விலை 265 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் ஒருவரும் ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 772ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில்...
புதுக்குடியிருப்பு- ஆனந்தபுரம் பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு- ஆனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த (11.10.2022) கண்டுப்பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மீதான தடயவியல் பரிசோதனை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நேற்று (19.10.22) மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில்...
இலங்கையின் முன்னாள் பிரதமர் ராஜபக்ச தனது மனைவியுடன் சேர்ந்து கொழும்பில் உள்ள திரையரங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து ரசித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், முன்னாள்...
ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவ சட்டம் நடைமுறைப்படுத்துவதாக புடின் தெரிவித்துள்ளார். சிறப்பு இராணுவ நடவடிக்கை என கூறி உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 8 மாதங்கள் ஆகின்றது. ஆனாலும் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டு இருக்கின்றது. இந்த போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை...
வீதியால் சென்ற முதியவர் ஒருவரை வழிமறித்த இரு வழிப்பறி கொள்ளையர்கள் , அந்த முதியவரை கத்தியினால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தி விட்டு , முதியவரின் ஒன்றரை பவுண் சங்கிலி மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பி சென்றுள்ளனர். சங்கானை பகுதியில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) குறித்த சம்பவம்...
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவரை அவருடைய தாயார் தனது மகனை திருத்தித் தருமாறு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் இன்று (புதன்கிழமை) காலை ஒப்படைத்துள்ளார். ஒப்படைக்கப்பட்ட இளைஞன் க. பொ. த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய பின் வீட்டில் இருப்பதாகவும் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே சார்ல்ஸ் நிர்மலநாதன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் தகைசார், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பத்மநாதன் எழுதிய திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் பற்றிய மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா இன்றைய தினம் (புதன்கிழமை) யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இந்து நாகரிகத்துறை ஏற்பாட்டில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நூல்...
Loading posts...
All posts loaded
No more posts
