- Wednesday
- July 8th, 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணையின் படி மின்சார கட்டணத்தை மீண்டும் 30 வீதத்தால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 15ம் திகதி முதல், மின் கட்டணத்துக்காக, சமூக பாதுகாப்பு வரியாக, 2.56 ரூபாய் வசூலிக்கப்படுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...
ல்லிப்பழையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றைய தினம் விழிப்புணர்வுப் பேரணியொன்று இடம்பெற்றது. தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வலிவடக்கு பிரதேச சபை தெல்லிப்பழை உப அலுவலகம் மற்றும் தெல்லிப்பழை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய முன்றலில் காலை 9 மணியளவில் ஆரம்பித்த பேரணி தெல்லிப்பழைச் சந்தியில் நிறைவடைந்தது. போதைப்பொருள் பாவனையை ஒழித்தல், வாசிப்பு...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவருமே இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் அல்லவென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ”இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட முன்வந்து, அது தொடர்பில் யாராவது ஆட்சேபத்தை தெரிவித்தால்...
யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் மனிதப் பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை விற்பனைக்கு தயார் செய்து கொண்டிருந்த போது பொதுச்சுகாதார பரிசோதகரால் கையும் மெய்யுமாக பிடிபட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. யாழ் நகர பொதுச் சுகாதார பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய யாழ் மாநகர பொதுச்சுகாதார பிரிவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள களஞ்சியம்...
இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பினூடாக இனப்பிரச்சினைக்கான...
யாழ். வடமராட்சி - புலோலி, சிங்கநகர் பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த இரு இளைஞர்கள் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தோட்டக்கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இரு இளைஞர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இருவரது சடலத்தின் மீதும் பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய போது மதுசாரம் மற்றும் ஐஸ்...
கொழும்பை முற்றுகையிட்டு எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்தும், விரைவில் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஐக்கிய மகளிர் சக்தி, முன்னிலை சோசலிச கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உள்ளிட்ட பிரதான கட்சிகளும், சிவில்...
முக்கிய தெற்கு நகரமான கெர்சனுக்குள் ரஷ்யா மேலும் துருப்புக்களை அனுப்புவதாக உக்ரைனின் உளவுத்துறைத் தலைவர் கைரிலோ புடானோவ் எச்சரித்துள்ளார். சில ரஷ்ய பிரிவுகள் வெளியேறக்கூடும் என்று உக்ரைன் முன்பு கூறியிருந்த நிலையில், தற்போது கெர்சனை பாதுகாக்க தயாராகி இருக்கலாம் என்று புடானோவ் கூறியுள்ளார். அத்துடன், ரஷ்ய எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக மாயையை உருவாக்க முயற்சிக்கிறது என்று அவர்...
இளவாலை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞனை மோதி விட்டு தப்பி சென்ற தனியார் பேருந்து சாரதியை ஊரவர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கீரிமலை பிரதான வீதியில் சேந்தான்குளம் பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த நோபேர்ட் நிலக்ஸன் (வயது 19) எனும் இளைஞனை பின் புறமாக வந்த...
இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். உரும்பிராய் பகுதியை சேர்ந்த முருகதாஸ் மனோஜ் (வயது 17) எனும் சிறுவனே படுகாயமடைந்துள்ளான். குறித்த சிறுவன் பாடசாலை கல்வியை இடை நிறுத்தி , இணுவில் பகுதியில் உள்ள அலங்கார...
தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதைப் போல் பொங்கலுக்கு மேலுமொரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிப்பதாக ஐனாதிபதி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர், “நானும், அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றியும் கொழும்பில்...
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா,...
இன்று (ஒக்டோபர் 25) செவ்வாய்க்கிழமை நிகழவிருக்கும் சூரிய கிரகணம் இலங்கையிலும் ஒரு பகுதி தெரியும் என்று அறிவிக்கபட்டுள்ளது. அரிய நிகழ்வைப் பார்க்கும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானியலாளர்கள் எச்சரித்துள்ளனர். சூரிய கிரகணம் யாழ்ப்பாணத்தில் மாலை 5.27 முதல் 5.46 வரை தெரியும். அதன்போது சூரியன் சந்திரனை 8.8 சதவீதம் மறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பில் பகுதி...
பருத்தித்துறை புலோலி சிங்கநகர் பகுதியில் நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (வயது- 24), மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் லம்போசிகன் (வயது ப24) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பெருநாளான நேற்று இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களுக்குக் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில், புதுமுக மாணவர்களைப் பகிடிவதைக்குட்படுத்திய சிரேஷ்ட மாணவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இடம்பெற்ற விசாரணைகளின் போது குற்றம் நிரூபிக்கப்பட்ட...
அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட பலநூற்றுக்கணக்கானோர் படகுமூலம் சென்று இந்தியாவில் ஏதிலிகளாக தஞ்சமடைந்துள்ளனர். அந்தவகையில் இன்று காலை திருகோணமலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று படகு மூலம் இந்தியா சென்று தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆகியோரே இவ்வாறு ஏதிலிகளாக சென்றுள்ளனர்....
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பள அதிகரிப்பு சாத்தியமில்லை என்றால் இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு அரச ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய, சுமார் ஐந்து இலட்சம் அரச ஊழியர்கள் கையெழுத்திட்ட மனுவுடன் அரசிடம் கோரிக்கையொன்றினை முன்வைக்க அரசு ஊழியர் சங்கங்களின் ஒன்றியம் முடிவு செய்துள்ளது. நாட்டில் தற்போது பணவீக்கம் வேகமாக உயர்ந்துள்ளதுடன், பெறப்படும் சம்பளம் வாழ்க்கைச் செலவுக்கு...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் மருத்துவமனையை கட்டுவதன் மூலம் மேற்கத்திய நாடுகளுடன் போருக்கு தயாராகி வரலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிழக்கு உக்ரைன் பகுதியில் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், உக்ரைனிய படைகளின் எதிர்ப்பு தாக்குதலால் ரஷ்ய படைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து...
இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35வது நினைவு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். அந்த கொடூர சம்பவத்தின் 35ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் போதனா...
2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், க.பொ.த. உயர்தரப் பரீட்சையை அடுத்த வருடம் (2023) ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17ஆம் திகதி...
Loading posts...
All posts loaded
No more posts
