- Wednesday
- April 8th, 2026
யாழ்.திருநெல்வேலியில் உள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் 12 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸாருக்க கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் சிறுவனிடம் வாக்குமூலம் பெற்றிருந்தனர். அதன் அடிப்படையில் விடுதிக் காப்பாளரான குறித்த நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மன்னாரைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின் பின் சந்தேக...
ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கும் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணனுக்கும் இடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாண மாநகர சபையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்கள ஆசிய பசுபிக் பிரிவுக்கான பணிப்பாளர் பீற்றர் டியு, அரசியல் விவகார அதிகாரி அல்மா சாலியு,...
செஸ் வரி திருத்தம் காரணமாக அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களின் விலையில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை மாற்றியமைக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். [caption id="attachment_115903" align="aligncenter" width="548"] Stationery isolated on white[/caption] இன்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார். செஸ் வரி மாற்றத்தால் பாடசாலை...
கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் கீழான ஒதுக்கீடு பிரதேசங்களில், சட்டவிரோதமாக காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டினால், அங்கு அமைதியின்மை நிலவியது. நேற்று (வியாழக்கிழமை) சட்டவிரோதமாக காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதனை, அழிப்பதற்காக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் பொலிஸாருடன் சென்ற வேளை, அவர்களுக்கும் சட்டவிரோதச் செய்கையாளர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது. ஆரம்பத்தில் பயிர்செய்கை நடவடிக்கை மேற்கொள்ளும்போது குறித்த அதிகாரிகளால் எந்த விதமான...
வடக்கு மாகாணசபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாக 2014ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. அதன் அடிப்படையில், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் கார்த்திகையில் மரநடுகை மாதத்தைச் சிறப்பாக கொண்டாடி வருவதோடு, மலர்க்கண்காட்சி ஒன்றையும் நடாத்தி வருகின்றது. இவ்வருடமும் மரநடுகை மாதத்தைக் கொண்டாடும் வகையில் இம்மாதம் இன்று 18ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் அமைந்துள்ள...
ஊவா மாகாணத்தில் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சங்கத்தின் உதவிச் செயலாளரும் பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரியுமான பாலித ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். சிறார்கள் மத்தியில் தற்போது பரவி வரும்...
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண மீண்டும் தெரிவுக் குழு, ஆணைக்குழு அமைத்து நிதியை செலவு செய்யாமல், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொண்டு வந்த பிராந்தியங்களின் ஒன்றிய தீர்வு திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தலாம். விட்டுக் கொடுப்புடன் அரசாங்கமும் செயற்பட வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ.17) இடம்பெற்ற...
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை சனிக்கிழமை (19) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நவம்பர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இலங்கையின் வடக்கு கரையோரத்தை நெருங்குவதற்கு அதிக...
இலங்கையிலுள்ள வங்கிகளில் பெறப்பட்ட கடன்களுக்கான வங்கி வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு அசௌகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் வங்கியுடன் கலந்துரையாடி நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஷெஹான்...
ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெறும் வரை உக்ரைனில் அமைதி சாத்தியமில்லை, ஆனால் மாஸ்கோ அவ்வாறு செய்யத் தயாராக இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவிக்கும் போதே பொரெல் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,ரஷ்யா தனது...
வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் ,உள்ளூர் உற்பத்திகளை ஒன்லைனில் விற்பனை செய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜ தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற மாதாந்த மகளீர் சந்தை நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்: உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும்...
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த 9 ஆம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி ஓரிரு நாள்களில் வலுவிழந்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழையும், ஒரு சில இடங்களில் மிகக் கனமழையும் கொட்டித் தீர்த்தது. இந்நிலையில்...
துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு, அதன் புனிதத்தை பாதுகாக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இந்த கோரிக்கையை விடுத்தார். யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் வவுனியா...
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 தமிழக மீனவர்கள் நேற்று புதன்கிழமை (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்புக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் குறித்த 14 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டதுடன் , அவர்களின் படகொன்றினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களை...
உடன் நடைமுறைக்கு வரும் வகையில், 634 அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியாகியுள்ளது. ஜனாதிபதி முன்வைத்த வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கமைய இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் 634 பொருட்களின் விலை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி...
யாழ். செம்மணி குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த குளத்தினை அண்மித்த பகுதியில் வசித்துவரும் இளைஞன் ஒருவரே தூண்டிலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவேளை இவ்வாறு காணாமல் போயுள்ளார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் குளத்தில் தேடுதல் நடாத்தி வருகின்றனர். எனினும் குறித்த இளைஞனை காணவில்லை. இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்...
இலங்கையில், அதிகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு கட்டணங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. இன்றையதினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து வகையான கடவுச் சீட்டு கட்டணங்களையும் திருத்த குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்து, அது தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டிருந்தது. இதன்படி, ஒருநாள் சேவை கடவுச் சீட்டுக் கட்டணம் 15 ஆயிரம் ரூபாவில் இருந்து 20 ஆயிரம்...
டியகோ கார்சியா தீவில் தங்கியுள்ள மூன்று இலங்கை அகதிகளை சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக "The New Humanitarian" இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த தீவு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உள்ளது. 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் டியகோ கார்சியா தீவுக்கு சுமார் 200 இலங்கையர்கள் வந்தடைந்துள்ளதாக பிரித்தானிய...
கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை இடமாற்றக் கோரி கர்ப்பிணி தாய்மார்கள், பொதுமக்கள் என பலர் ஒன்று கூடி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது மதுபோதை பாவித்து விட்டு வைத்தியம் பார்க்காதே, வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களை அவமதிக்காதே, வெளியேறு வெளியேறு விடுதியை விட்டு வெளியேறு, சீரழிக்காதே...
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை , வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்படுவோரின் நிலை மற்றும் சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை தொடர்பில் குறித்த விஜயத்தின் போது ஆராய்ந்தார்.
Loading posts...
All posts loaded
No more posts
