Ad Widget

நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

நேற்று (05) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ நிறூவனம் அறிவித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 334 ரூபாயினாலும் 05 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 134 ரூபாயினாலும் அதிகரித்துள்ளது.

எனவே நேற்று நள்ளிரவில் இருந்து 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 4,743 ரூபாய்க்கும் 5 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,904 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.

இதேவேளை 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 61 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 822 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

Related Posts