- Wednesday
- May 6th, 2026
மூன்று நாள் பயணமாக நேற்று இலங்கை வந்தடைந்த பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோறே ஸ்வைர் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். யாழ்பாணம் வந்தடைந்த பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்துக்குச் சென்று முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அத்துடன் இங்குள்ள நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்தார். அவருடன் இலங்கைக்கான பிரிட்டன் தூதர் ஜோன்ரன்கினும் கூட...
முன்பள்ளி நிர்வாகத்தில் இராணுவத்தினரின் அத்துமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு புதன்கிழமை (28) கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 'சிவில் பாதுகாப்பு பிரிவிலிருந்து முன்பள்ளி ஆசிரியர்களை விடுவித்தல்' என்னும் தலைப்பிட்டு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'இலங்கை நாட்டின் 6ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட...
வட மாகாண விவசாய அமைச்சால் நடத்தப்பட்ட உழவர் திருநாள் போட்டியில், வட மாகாணத்தில் சிறந்த கோழி வளர்ப்பாளருக்கான விருதை இராமன் சுதர்சினி என்ற பெண் பெற்றுக்கொண்டார். யுத்தத்தில் கணவனை இழந்த இவர், தனது இரண்டு பிள்ளைகளுடன் அம்பாள்புரத்தில் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டில் கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்கி நடத்தி வருகின்றார். இவரது கோழிப்பண்ணையை நாளடைவில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களான இலங்கை கடற்படை ரக்பி குழுவின் தலைவர் யோசித்த ராஜபக்ஷ மற்றும் இலங்கை இராணுவ ரக்பி குழுவின் தலைவர் ரோஹித்த ராஜபக்ஷ ஆகிய இருவரையும் அந்தந்த விளையாட்டுக்குழுக்களின் தலைவர் பதவிகளிலிருந்து நீக்குமாறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அந்தந்த குழுக்களில் அவ்விருவரும் விளையாடுதல் மற்றும் அவ்விருவருக்கு எதிராகவும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கவனத்தில்...
நேர்முக பரீட்சைக்குத் தோற்றிய ஆயிரம் கிராம சேவைகள் உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது. கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கான பரீட்சையில் சித்திபெற்று, நேர்முக பரீட்சைக்குத் தோற்றியவர்கள் இவ்வாறு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா கூறினார். மேலும் நாட்டில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் தமது பணிகளை உரியமுறையில் முன்னெடுப்பதற்கு தற்போது...
பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தனது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அதனையடுத்து அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவர்தன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பீ.எம்.யூ.டி.பஸ்நாயக்க, பாதுகாப்புப் படை அதிகாரிகள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துக் கொணடனர்.
அவுஸ்திரேலியாவுக்கு அகதித்தஞ்சம் கோரி படகில் கடல்வழியாகச்சென்ற 157 ஈழத்தமிழர்களை நடுக்கடலில் தடுத்துவைத்த அவுஸ்திரேலிய அரசின் செயல் சட்டப்படி சரியான செயலே என்று அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த்திருக்கிறது. சென்ற ஆண்டு இந்த அகதித்தஞ்சக் கோரிகளை சுமார் ஒருமாதகாலம் நடுக்கடலில் அவுஸ்திரேலிய கடற்படையினர் படகில் தடுத்து வைத்திருந்த செயல் பெரும் சர்ச்சையை தோற்றுவித்தது. சிறு குழந்தைகள் உட்பட...
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பணியாற்றும் 16 ஆயிரத்து 700 பேரை வேறு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்க அல்லது இடமாற்றம் வழங்க நடவடக்கை எடுக்கப்படுகின்றது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் டாக்டர் ஹர்ச டி சில்வா தெரவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: பட்டதாரிகளான இவர்கள் மாதாந்தம் 28 ஆயிரம்...
இலங்கை அரசு உறுதியான, நம்பத்தகுந்த நடவடிக்கைகளை எடுத்த பின்னரே இலங்கை அகதிகளை அவர்களின் தாயகத்துக்கு திருப்பி அனுப்பும் நடைமுறை குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்றுப் புதன்கிழமை அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளை தாயகம் அனுப்பி வைப்பதற்கான...
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை காரணம் காட்டி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கையை காலந்தாழ்த்தி வெளியிட அனுமதிக்க கூடாது என்றும் இது தமிழ் மக்களின் பிரச்சினைகளை இல்லாமல் செய்யும் முயற்சியாகும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து...
100 நாட்கள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டது போல எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளோம். அந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதை விடவும் மூன்று மடங்குகளால் விலைகள் குறையும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினருமான அசாத் சாலி தெரிவித்தார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாகவே அத்தியாவசிய...
வலி.வடக்கு மற்றும் சம்பூர் பகுதிகளில் இராணுவம் குடியிருக்காத இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய அல்லது அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய மக்களுக்கு சொந்தமான காணிகளை அடுத்த ஒருவார காலத்திற்குள் அரசு முதல் கட்டமாக மக்களிடம் கையளிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றம் தொடர்பில்...
வலி.வடக்கு மக்களை சந்திக்க வரும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வலி.வடக்கு மக்களை இன்றைய தினம் பிரிட்டன் வெளியுறதுத் துறை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் நேற்று காலை வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு சிவில்...
அஜீத்தின் என்னை அறிந்தால் படத்துக்கு புதிய மிரட்டல் வந்துள்ளது. அந்தப் படம் வெளியாகும் பிப்ரவரி 5-ம் தேதி, சென்னையில் 8 அரங்குகளில் குண்டு வெடிக்கும் என மிரட்டியுள்ளனர் சிலர். இதுகுறித்து சென்னையில் உள்ள உதயம் தியேட்டர் மேலாளருக்கு கடிதம் ஒன்றும் வந்துள்ளது. அஜீத், திருவான்மியூர் என்ற பெயரிலிருந்து வந்த கடிதத்தை தியேட்டரின் மேலாளர் ஹரிஹரன் வாங்கிப்...
ராசியில்லாத நடிகை என்ற முத்திரையுடன் சினிமாவில் அறிமுகமாகி, இன்று இந்தியாவின் முன்னணி நடிகையாகத் திகழும் ஸ்ருதி ஹாஸனுக்கு நேற்று (28-1-2014) பிறந்த நாள். இந்த நாளை அவர் தனது தந்தை கமல் ஹாஸனுடன் சென்னையில் கொண்டாடினார். பாடகி, இசையமைப்பாளர், நடிகை என பன்முகம் கொண்ட கலைஞர் ஸ்ருதிஹாஸன். மிக இளம் வயதிலேயே, தன் தந்தையின் உன்னைப்...
இந்தியாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு தமிழர் என்றால் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசைக்கான அனைத்து விருதுகளையும் வாங்கி விட்டார். ஆனால், சில நாட்களாகவே இவர் படத்தின் பாடல்கள் பெரிய அளவிற்கு ஒன்றும் ஹிட் ஆகவில்லை. அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் நடித்த லிங்கா படத்தின் பாடல்கள் மிகவும் ரசிகர்களை சோதித்தது. இந்நிலையில் இவரின் ஆஸ்தான...
தனது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட வகையில் பழிவாங்கள் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார். தனது தங்காலை - கால்ட்டன் இல்லத்தில் இருந்தவாறு தன் மீதான குற்றச் சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் முகமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஒரு போதும் இல்லாதவாறு தனக்கும் தனது...
சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட கழிவு எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூயநீர் வழங்குவதற்கான செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. யாழ். பொது நூலகத்தில் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று புதன்கிழமை (28) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த செயலணி உருவாக்கப்பட்டது. இந்த செயலணியின் இணைத் தலைவர்களாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், சுகாதார...
யாழ்.பல்கலைக் கழகத்திற்கு வெளிவாரியாக தெரிவு செய்யப்பட்ட பேரவை உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலகுமாறு கோரி பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்து நீதியரசாக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். தற்போதய பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று காலை ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ள நிலையில் சிராணி பண்டாரநாயக்க உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்து கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இவர்...
Loading posts...
All posts loaded
No more posts
