- Saturday
- July 4th, 2026
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வ பணிகளுக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு இதுவரை கிடைக்கப் பெறாத காரணத்தினால் எதிர்வரும் 21.8.2023 அன்று திட்டமிடப்பட்டிருந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு தொடர்பிலான வழக்கு விசாரணைகள் வியாழக்கிழமை (17) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ரி.பிரதீபன்...
குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர்கள் தரப்பால் இன்றையதினம்(18.08.2023)பொங்கல் வழிபாடு முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு சிங்கள் மக்கள்,பெளத்த பிக்குகள் மற்றும் சில அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருப்பினும் நீதிமன்ற அனுமதியுடன் இன்றைய தினம் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டுக்கான ஆயத்தங்கள் செய்யப்படும் நிலையில் நேற்றையதினமே (17) குறித்த பகுதிக்கு...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முக்கிய இரகசியங்கள் பல அறிந்த இராணுவ தளபதி மர்மமான முறையில் திடீரென்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விளாடிமிர் புடினுக்கு சொந்தமான 1 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான அரண்மனை தொடர்பிலான இரகசியங்களை அறிந்த இராணுவ தளபதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவினை சேர்ந்த 69 வயதான ஜெனடி லோபிரேவ் என்ற இராணுவ...
காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும் பொலிஸார் திருட்டுக்களை கட்டுப்படுத்த தவறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மாங்கொல்லை பகுதியில் இருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர். ஆனாலும் குறித்த பகுதி இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை. அதனால்...
முல்லைத்தீவு- குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்தன. குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்று (17) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பெளத்த இந்து...
கர்ப்பப்பை குழாயில் கரு தங்கியதில் கர்ப்பப்பை குழாய் வெடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த, மன்னார் சென் சேவியர் பெண்கள் கல்லூரியின் ஆசிரியையான அனுசன் துளசி (வயது 30) என்பவரே புதன்கிழமை (16) உயிரிழந்துள்ளார். திடீர் வயிற்று வலியினால் துடித்த அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது , அவர் ஏற்கனவே...
நெடுந்தீவு பகுதியில் இளைஞர் ஒருவர் கடந்த 11 ஆம் திகதி முதல் காணவில்லை என தெரிவித்து நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். கடந்த 11 ஆம் திகதி வீட்டிலிருந்து மதிய உணவினை உட்கொண்டு விட்டு சென்ற பின்னரே குறித்த 27 வயதான தம்பிப்பிள்ளை விதுசன் எனும்...
பொங்கல் நிகழ்வினை சிறப்பிக்கவும், தமிழ் மக்களின் இருப்பினை நிலைநாட்டவும் குருந்தூர்மலைக்கு நாளை ( 18 ) அணிதிரண்டு வருமாறு முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயத்தில் நாளை இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் அவரது மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் உள்ளனர் என வெளியிடப்பட்டுள்ள செய்தி நகைப்புக்குரியது என பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது. பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத், இதனை ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டார். அந்த செய்தியில், தனது கவனத்தை ஈர்த்துக்கொள்ளும் வகையில்...
வவுனியா பொது வைத்தியசாலையில் சிசுவொன்றுக்கு சிகிச்சை அளிப்பதில் தாதியர் நடந்துகொண்ட விதம் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் தமது கடமையை சீராக செய்யவில்லை என தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரணை செய்ய வட மாகாண ஆளுனர் தலைமையில் மூவர் கொண்ட குழு வடமாகாண சுகாதார பணிப்பாளரால் நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் கடந்த 4 ஆம் திகதி குழந்தை பேற்றிற்காக...
மேற்கு ஆபிரிக்காவின் கேப்வேர்ட்டின் கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் 60 குடியேற்றவாசிகள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. சிறுவர்கள் உட்பட 38 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக சர்வதேச புலம்பெயர் அமைப்பு தெரிவித்துள்ளது. செனெகல் சியாரோ லியோனை சேர்ந்த 100க்கும் அதிகமானவர்கள் குறிப்பிட்ட படகில் பயணித்துள்ளனர் – ஒரு மாதகாலமாக இந்த படகு கடலில் காணப்பட்டுள்ளது என தகவல்கள்...
உக்ரைனில் உள்ள Danube நதித்துறைமுகத்தில் உள்ள முக்கிய தானியக்கிடங்குகள் மீது ரஷ்யா நேற்றிரவு வான்வெளித்தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்றிரவு, இரண்டு முறை ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஒடிஷா பகுதி கவர்னரான Oleh Kiper தெரிவித்துள்ளார். தானியக்கிடங்குகளின் கூரைகள் தாக்குதலில் சேதமடைந்துள்ளதைக் காட்டும் படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்த தாக்குதலில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை...
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களம் ,மகாவலி அதிகார சபை, வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வினைப்...
அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை ஓகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி ஓகஸ்ட் 28ம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி, பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும்...
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் கடந்த திங்கட்கிழமை முதல் தண்ணீர் வசதியின்றி நோயாளர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் அத்தியட்சகர் கருத்துத் தெரிவிக்கையில் ”எமது மருத்துவ மனைக்கு நீர் வழங்கும் பிரதான நீர்ப்பம்பி செயலிழந்துள்ளமையினால் தண்ணீர் வசதியின்றித் தவித்து வருவதாகவும், இதனையடுத்து சிறிய ரக...
பல நூறு கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்து வந்து முல்லைத்தீவில் உள்ள குருந்தூர் மலை பொங்கலை குழப்பும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் எனவே பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு உறுதுணையாக இருக்க அனைவரும் முன்வர வேண்டும் எனவும் முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்தார். குருந்தூர் மலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள...
நான் அறிந்த வகையில் விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவர் உயிருடன் இருக்கலாம். ஆனால் அதை நான் சவாலுக்குட்படுத்த விரும்பவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,''2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த...
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடங்கிய போர் 500 நாட்களை கடந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் இராணுவ வளங்கள் ஏறத்தாழ தீர்ந்துவிட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறியுள்ளார். மாஸ்கோவில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பேசியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், "மேற்கு நாடுகளின் (அமெரிக்கா, ஐரோப்பா) ஆயுத உதவி இருந்தபோதும் உக்ரைனால்...
கிளிநொச்சியில் பதிநான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 30 வயதுடைய நபருக்கு பத்து வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட மற்றுமொரு 18 வயதுடைய இளைஞனுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் 14 வயதுடைய சிறுமி...
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 08 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு அதில் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய நேற்று (10) தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி அடங்கிய குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் இன்று சம்பவ இடத்திற்கு...
Loading posts...
All posts loaded
No more posts
