- Saturday
- July 4th, 2026
ஜப்பான் அரசின் நிதியனுசரனையுடன் ஜப்பானிய தூதுவராலயத்தினால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் நேற்றைய தினம் இந்நிகழ்வு இடம்பெற்றது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொசி மற்றும் அவரது தூதரக அதிகாரிகள் இணைந்து இதனை வழங்கி வைத்த நிலையில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையினரால் யாழ் இசைக்கருவி நினைவு...
யாழ்ப்பாண மாநகர சபையின் பொறுப்பில் உள்ள கோம்பயன் இந்து மயானத்தில் மூடப்படாத மனிதப் புதைகுழியில் உள்ள இறந்த உடல்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நேற்றையதினம் (10.08.2023) ஆறுகால் மடப்பகுதியில் இறந்த குழந்தை ஒன்றின் தலைப் பகுதி வீட்டுக் காணி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப...
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் அதன் அதிகபட்ச கொள்ளளவை மின்சாரத்திற்கு பயன்படுத்தினால் அதன் உற்பத்தி திறன் 30 நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர் மட்ட உயரம் கடல் மட்டத்திலிருந்து 438 மீட்டர் ஆகும். ஆனால் நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு குறைந்துள்ளதால், தற்போது நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர்மட்டம்...
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உக்ரைன் மீண்டும் இரு ஆளில்லா விமானங்களை ஏவியதாகவும், அவை இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. அவற்றில் ஒன்று நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள கலுகா பகுதியிலும், மற்றொரு ட்ரோன் மாஸ்கோவின் முக்கிய சுற்றுச் சாலைக்கு அருகிலும் அழிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தலைநகா் மாஸ்கோவின் புகா் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் நேற்றுமுன்தினம் (09.08.2023)...
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (08) ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவரொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று குறித்த மாணவனின் முகத்தில் ஆசிரியர் கடுமையாகத் தாக்கியுள்ளார் எனவும் இதனால் முகத்தில் கடும் வலி ஏற்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில்...
காங்கேசன்துறை சீமெந்துதொழிற்சாலையில் இரும்புகள் களவாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் தான் எந்தவேளையிலும் பொலிஸாரிடம் சரணடைய தயார் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நான் சிஐடியின் முன்னிலையில் செல்வேன் அதன் காரணமாக பொலிஸார் என்னை கைதுசெய்யலாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கைதுசெய்வதற்கு சபாநாயகரின் அனுமதி தேவை என்பதால் அதனை வழங்குமாறு சபாநாயகரை...
பிரமிட் திட்டங்கள் இலங்கையில் சட்ட விரோதமானவை என்றும் பிரமிட் திட்டங்களில் பங்கேற்றல் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் இலங்கை மத்திய வங்கி 8 பிரமிட் திட்டங்கள் பற்றி ஊடகங்கள் வாயிலாக தெளிவுபடுத்தியுள்ளதாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கடந்த 2 மாதங்களுக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போதே அதிகாரிகளால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது ” யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி வரும் நிலைமை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த...
கிழக்கு உக்ரைனின் போக்ரோவ்ஸ்க் நகரில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது இரண்டு ஏவுகணைகள் நகரத்தைத் தாக்கியுள்ளதுடன், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்த 30க்கும் மேற்பட்ட பொதுமக்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். என அறிவிக்கப்பட்டுள்ளது. பொக்ரோவ்ஸ்க்...
வெளிமாவட்ட வியாபாரிகள் , உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் காசோலை மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் , இது தொடர்பில் உள்ளூர் உற்பத்தியாளர்களை விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ் உற்பத்தியாளர்களை நாடி வரும் வெளிமாவட்ட வியாபரிகள் , அவர்களிடம் இருந்து உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்து விட்டு , பணத்திற்கு பதிலாக காசோலைகளை...
தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம். கே சிவாஜிலிங்கம் பதவியில் இருந்து நீக்கப்பட்டது உண்மை எனவும், இதனை கட்சியின் தலைவர் சிறிகாந்தாவும் சிவாஜிலிங்கமும் வெளிப்படையாக உளச்சான்றுடன் தெரிவிக்க வேண்டும் எனவும் அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சு.நிசாந்தன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போதே அவர் இதனைத்...
வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 69,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது யாழ் மாவட்டத்தில் நிலவுகின்ற வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக இதுவரை 21,714 குடும்பங்களைச் சேர்ந்த 69,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கூடுதலாக...
சுன்னாகம் பகுதியில் 19 வயது யுவதியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தர் கிராம மக்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சங்குவேலி பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் ஜெயதாஸ் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கடந்த 5 ஆம் திகதி யுவதியொருவரை காணவில்லை என உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
நீண்ட தூர இலக்குகளை தாக்கக்கூடிய SCALP ஏவுகணைகளை உக்ரைனுக்கு பிரான்ஸ் வழங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 525 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய ஏவுகணை தங்களுக்கு வழங்குமாறு மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றது. இந்நிலையில் நீண்ட தூர இலக்குகளை...
2024ஆம் ஆண்டு முதல் அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தவணை பரீட்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். இத்தீர்மானம் தரம் 01 முதல் உயர்தரம் வரை அதாவது தரம் 13 வரை ஒவ்வொரு பாடசாலையிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதுவரை ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு வருடத்தில் மூன்று...
கருங்கடலில் ரஷ்ய டேங்கர் மீது கிவ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ரஷ்ய மற்றும் உக்ரைனிய படைகள் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. ஒரே இரவில் தீவிர வான்வழி தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்போது குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் உக்ரைனில் போரை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்பது குறித்து,...
மோட்டார் சைக்கிளில் இயந்திர , அடிச்சட்ட இலக்கங்களை முச்சக்கர வண்டிக்குப் பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற குற்றச்சாட்டில் யாழ் பொலிஸாரினால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் நீதிமன்றினால் பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தெரியவருவதாவது , யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர்...
மீசாலையில் பயணிகள் தரிப்பிடத்துடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில், பயணிகள் தரிப்பிடமும் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்றிரவு பயணித்த பேருந்தொன்றே மீசாலை , புத்தூர் சந்திக்கு அருகில் இவ்வாறு பயணிகள் தரிப்பிடத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது. ”பேருந்தின் பிரேக் மற்றும் ஸ்ரேறிங் வேலை செய்யவில்லை”...
சுற்றுலாப் பயணிகளை பிரதான இலக்காகக் கொண்ட ‘யாழ் நிலா ஒடிஸி’ என்ற ரயில் இன்று முதல் கல்கிசைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ளது. வார இறுதி நாட்களில் இயக்கப்படும் ‘யாழ் நிலா ஒடிஸி’ இன்று இரவு 10 மணிக்கு கல்கிசை நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மன்னார் மாவட்டத்தை சேர்ந்த, யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட இரண்டாம் வருட மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு அருகில் வீடொன்றில் சக மாணவிகளுடன் வாடகைக்கு தங்கியிருந்த நிலையில் நேற்றையதினம் மாணவி விரிவுரைக்கு செல்லாது அறையில் தனித்து இருந்ததாகவும், சக மாணவிகள் அறைக்கு வந்த வேளை மாணவி...
Loading posts...
All posts loaded
No more posts
