- Sunday
- September 14th, 2025

அமெரிக்க டொலருக்கு (USD) நிகரான இலங்கை ரூபாய் (LKR) இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (15) வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.311.60 ரூபாவாகவும், விற்பனை விலை 328.92 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது..

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஆறு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மீண்டும் மலேரியா அச்சுறுத்தல் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் இதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் (Anopheles stephens) என்ற நுளம்புகளின் தாக்கம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பாறை மாவட்டத்திலுள்ள, அக்கரைப்பற்று, திருக்கோவில், ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை மற்றும்...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பரீட்சை குறித்த விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூலை 06 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய வேலைத்திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பொதிகள் சேவைமூலம் தமது வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள...

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் கோஷ்டி மோதல்கள்/ போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியிடம் எடுத்துரைத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரம் தெரிவித்தார். யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக புதிதாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ கெட்டியாராச்சி நேற்றைய...

இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை இந்த கப்பல் காங்கேசன் துறைமுகத்துக்கு வரவுள்ளது. குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு யாழிற்கு விஜயம் மேற்கொள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை காங்கேசன் துறைக்கும் இந்தியாவுக்கும்...

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நயினாதீவு பகுதியில்,36 இலட்சம் ரூபாய் பெறுமதியான 22 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நயினாதீவு ஐந்தாம் வட்டார பகுதியில் நேற்று முன்தினம் (13.06.2023) இரவு இரண்டு பெண்கள் வசித்துவரும் வீட்டில் அவர்கள் உறக்கத்தில் இருந்த போது வீட்டுக் கூரையை உடைத்து வீட்டில் இறங்கிய திருடர்கள் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த 22 பவுண் நகைகளை...

உக்ரைன் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓட முயற்சிக்கும் சக வீரர்களை ரஷ்ய இராணுவத்தினர் கொன்று குவிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான காணொளி ஒன்றை உக்ரைன் ட்ரோன் விமானம் ஒன்று பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அந்த காணொளியானது 14 நொடிகள் மட்டும் பதிவாகியுள்ளதாகவும் டெலிகிராம் சமூக ஊடகம் ஒன்றில் முதலில் வெளியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,...

கொழும்புத்துறை - உதயபுரம் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் சிக்கி முன்பள்ளி சிறுவர்கள் 11பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியின் சாரதியும் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று புதன்கிழமை காலை முன்பள்ளிச் சிறுவர்களை அதிகளவில் ஏற்றிக்கொண்டு பயணித்த முச்சக்கரவண்டி கவிழ்ந்துள்ளது. விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம்...

விபத்துக்களில் சிக்கி மூளைச்சாவடைந்தவர்களின் சிறுநீரகத்தினை தானமாக வழங்குவதற்கு உறவினர்கள் முன் வர வேண்டும் என சிறுநீரக வைத்திய நிபுணர் எஸ்.மதிவாணன் கேட்டுக்கொண்டார். சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையில் இடம் பெறவுள்ள கிரிக்கெட் போட்டி தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், திடீரென ஏற்படும்...

மருதங்கேணி விவகாரம் குறித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மேலும் சில உறுப்பினர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், மகளீர் அணித் தலைவி வாசுகி சுதாகரன், மகளீர் அணி செயற்பாட்டாளர் கிருபா கிரிதரன் ஆகியோரே விசாரணைக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்க்கு வருமாறு பொலிஸ் அழைப்பாணை விடுத்துள்ளது.

வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு இந்திய பிரதமர் மோடி ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் ஊடாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் மகஜர் ஒன்றை கையளித்தனர். யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழில் உள்ள இந்திய துணை தூதுவரை சந்தித்து நேற்று (13) காலை கலந்துரையாடினர்....

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஆகவே வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் இடம்பெற்ற விபத்துகளில் மோட்டார் சைக்கிள்...

தனியார் துறையினரால் சுமார் 8 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அச்சடிக்கும் இயந்திரங்களின் திறன் குறைபாடு காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் மாதக்கணக்கில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புக்கு பொறுப்பான...

உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய படைகள் வசமிருந்த 7 கிராமங்களை கைப்பற்றிவிட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு எதிர்தாக்குதல் நடத்தி 90 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை கைப்பற்றி, ரஷ்ய படைகளை விரட்டி அடித்ததாகவும் உக்ரைன் கூறியுள்ளது. தெற்கு சபோரிஜியா பிராந்தியத்தில் உள்ள...

இந்தியச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சாந்தனின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் உள்ளிட்ட 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். முதலில் பேரறிவாளன்...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303 ரூபாய் 73 சதமாக பதிவாகியுள்ளது. இதேநேரம் கொள்வனவு விலை 290 ரூபாய் 06 சதமாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதேவேளை கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 228 ரூபாயாகவும் கொள்விலை 215 ரூபாயாகவும்,...

சர்வதேச அளவில் காணப்படும் அணு ஆயுதங்கள் குறித்த பட்டியலை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சீனா தனது அணு ஆயுதங்களைக் கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பல நாடுகளும் சீனாவுடன் மோதல் போக்கை கொண்டிருக்கும் நிலையில், இந்த விடயம் உலக ஆராய்ச்சியாளர்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது. எனினும் உலகளவில் பார்க்கும் போது அணு...

கருங்கடலில் உள்ள முக்கிய எரிவாயு குழாய்களுக்கு அருகே ரஷ்ய கப்பலை உக்ரைன் தாக்க முயன்றதாக ரஷ்யா கூறியுள்ளது. கருங்கடலில் ஆறு அதிவேக ட்ரோன் படகுகள் மூலம் ரஷ்ய கடற்படை கப்பலை தாக்க உக்ரைன் மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியா தீபகற்பத்தில் உள்ள ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் தலைமையகமான...

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸை தமிழ் தேசய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது,வடக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. வடக்கு மாகாண ஆளுநராக இருந்த ஜீவன் தியாகராஜா ஐனாதிபதியால் நீக்கப்பட்டு புதிய...

All posts loaded
No more posts