மலேசிய கபாலி போலீசில் சரண் அடைந்தாரா?

உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரஜினிகாந்தின் கபாலி படத்தின் மலேசிய பதிப்பின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில் அவர் போலீசில் சரணடைந்ததாக தோன்றும் எழுத்துகள் இந்திய ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் நேற்று வெளியான ‘கபாலி’ படம் ரஜினி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் இறுதிக்கட்ட காட்சி அவர் துப்பாக்கியால் சுடப்படுவதுபோல் முடிவதில்...

கறுப்பு ஜூலை நினைவு தினம்: யாழில் துண்டு பிரசுரங்கள் விநியோகம்!!

கறுப்பு ஜூலை படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அணியினரால் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி அப்போதைய ஆட்சியாளர் ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் இன படுகொலையின் 33ஆவது ஆண்டு இன்று நினைவுகூறப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று...
Ad Widget

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சம்பவத்தால் சிங்கள மாணவர்கள் அச்சத்தில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவத்தையடுத்து சிங்கள மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருவதாகவும், அவர்களுக்கான பாதுகாப்பை அரசாங்கம் வழங்கவேண்டுமெனவும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஊடகவியலார்களுக்கென ஒழுங்குபடுத்தப்பட்ட விசேட கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த மூன்று தசாப்தங்களாக பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை முடிவுக்குக்...

போக்குவரத்து விதிமுறையை மீறிய பெண்ணுக்கு 22,500 ரூபாய் தண்டம்

போக்குவரத்து விதிமுறையை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திய பெண் ஒருவருக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் வெள்ளிக்கிழமை (22) தீர்ப்பளித்தார். சாரதியனுமதிபத்திரம், வருமானவரிபத்திரம், காப்புறுதிபத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியமை, மோட்டார் சைக்கிளை பதிவு செய்யாமை, ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்தை...

ஜெர்மனியிலுள்ள இலங்கையர் தொடர்பில் விசாரணை

ஜெர்மனியின் மியூனிச் நகரில் வணிக வளாகத்தில் மர்ம நபரால் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை அங்குள்ள தூதரகத்தின் ஊடாக விசாரித்து வருவதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் மியூனிச் நகரில் வணிக வளாகத்தில்...

தமிழகத்தில் இலங்கை பெண் தற்கொலை

தமிழகத்தின் தாரமங்கலத்தில், தலைக்கு பூசும் சாயம் குடித்த இலங்கை தமிழ் பெண் உயிரிழந்துள்ளார். தாரமங்கலம் அடுத்த, பவளத்தானூர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் காளிமுத்து. அவரது மகள் பவித்ரா (17). பிளஸ் 2 முடித்துள்ளார். அவரது குடும்பத்தில் உள்ள பிரச்சினையால் மனமுடைந்து காணப்பட்ட அவர், கடந்த, 14ம் திகதி, தலைக்கு பூசும் சாயத்தை குடித்துவிட்டார். உயிருக்கு...

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சகல பட்டதாரிகளுக்கும் விரைவில் வேலை வாய்ப்பினை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என வலியுறுத்தி, அகில இலங்கை பட்டதாரிகள் சங்க சமூகத்தின் செயலாளர் தம்பிக்க முனசிங்க தலைமையில் இந்த பேராட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வட மாகாணத்தின்...

சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக இரட்டை சதம் விளாசினார் விராட் கோஹ்லி

மேற்குகிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தனது இரட்டைச் சதத்தை பூர்த்தி செய்தார். கோஹ்லி தலைமையிலான, இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் நாட்டில், சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி, நேற்று இந்திய நேரப்படி...

கண்டிய நடனம் புகுத்தியமையே மோதலுக்கு காரணம்!-டி.எம். சுவாமிநாதன்

யாழ்.பல்கலைகழகத்தில் வழமைக்கு மாறான நடைமுறை மேற்கொள்ளப்பட்டதே மாணவர்களுக்கு இடையிலான மோதலுக்கு காரணம் என அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பரஸ்பர இணக்கப்பாட்டுடன் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டிப்பின் இந்த மோதல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு...

தமிழ் படைச்சிப்பாயின் தாக்குதலுக்குள்ளான தந்தையும்,மகனும் வைத்தியசாலையில்

கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் விடுமுறையில் வந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் தாக்குதலுக்குள்ளான நிலையில் அதே இடத்தைச்சோ்ந்த தந்தையும்,மகனும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது தொடா்பில் மேலும் தொியவருவதாவது கடந்த 20-07-2016 அன்று இரவு எட்டு மணியளவில் முழங்காவில் விஜி வீதியைச்சோ்ந்த செல்லத்துரை துரைசிங்கம் என்பவரும், அவரின் மகன் கௌதமன் வயது 23 என்வருமே தாக்கப்பட்டு...

கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் முன் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனக் கோரி போராட்டம்

கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் முன் எமது நிலம் எமக்கு வேண்டும் எனும் கோரிக்கையுடன் ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை 22-07-2016 ஜனநாயகத்திற்கான வடக் இளைஞர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலை வவுனியாவிலும்,ஓமந்தையிலும்,மதியம் கிளிநொச்சி இரனைமடு படை முகாமிலும், பரவிபாஞ்சான் பிரதேசத்திலும் மாலை வலி வடக்கிலும் குறித்த போராட்டம் நடத்தபட்டுள்ளது....

மத்திய அரசின் கையாட்களாக இயங்கமுடியாது: வடமாகாண முதலமைச்சர்

மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக மாகாண அரசாங்கம் இயங்கமுடியாது என உலக வங்கியின் அலுவலர்களிடம் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மத்திய, மாகாண அரசுகளுக்கு இடையில் புரிந்துணர்வு மனோநிலை இல்லையாயின் பணியை சரிவர முன்னெடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த உலக வங்கியின் அலுவலர்களான பீற்றர் டி எலிஸ், ஜெசிக்கா ரசல் ஸ்மிற், யென்...

பாடசாலைக்கு சென்ற சிறுவன் சடலமாக மீட்பு!

வவுனியா கண்டிவீதி மூன்று முறிப்பு பகுதியை சேர்ந்த (டிப்போ பின்பகுதி) மவிது நின்சர என்ற எட்டு வயது சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளான் மேலும் நேற்றைய தினம்(22.07.2016) காலை பாடசாலைக்கு சென்ற சிறுவனை காணவில்லையென பெற்றோரால் தேடப்பட்டுங்கொண்டிருந்த போதே அதேபகுதியில் இரவு ஒன்பது மணியளவில் கிணறு ஒன்றினுளிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான் சடலம் தற்பொழுது வவுனியா பொதுவைத்திய சாலையில்...

முச்சரக்கர வண்டி இறக்குமதிக்கு கட்டுப்பாடு!

இலங்கையில் முச்சக்கர வண்டிகள் தேவைக்கதிகமாக உள்ளதால் அவற்றை இறக்குமதி செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்று, பாதுகாப்புடனான நவீன முச்சக்கர வண்டி ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் முச்சக்கரவண்டிகளில் பல குறைபாடுகள் உள்ளதாகவும் அவற்றை நிவர்த்தி செய்வது...

பூர்வீக இடங்களிலேயே மீள்குடியமர்த்தப்படவேண்டும்

இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களை வேறு இடங்களில் மீளக்குடியமர்த்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அருணாச்சலம் குணபாலசிங்கம் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக இடம்பெயர்ந்த நிலையில் மீளக்குடியமர முடியாதிருக்கும் மக்களில் பெரும்பாலானோர் மயிலிட்டி மற்றும் அதனை அண்டிய 12 கிலோ மீற்றர் கரையோரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கும் மீள்குடியேற்றக் குழுவின்...

ஜேர்மனி தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!!

ஜேர்மனியின் தெற்கு நகரான மூனிக்கின் வணிக வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 3 பேர் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தினர் எனக் கூறப்படுகின்றது. இந்தத் தாக்குதலை அடுத்து மூனிக் நகரம் முழுவதும் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் இடம்பெறுகின்றது. தாக்குதல் இடம்பெற்றபோது தாக்குதல்தாரிகள் இஸ்லாமியத்துக்கு ஆதவான கோஷங்களை எழுப்பினர் எனக்...

சங்குப்பிட்டி விபத்தில் பொலிஸ் உட்பட இருவர் பலி!

பூநகரி - சங்குப்பிட்டி பாலத்துக்குச் சமீபமாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி அம்மன் வீதியைச் சேர்ந்த கதிரவேலு கபில்ராஜ்(வயது 26) என்ற குடும்பஸ்தரும் மாவத்தகமைவைச் சேர்ந்த பொலிஸார் ஒருவரும் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த பொலிஸாரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கதிரவேலு...

யாழ் பல்கலையில் இடைநிறுத்தப்பட்ட கலைப்பீட பரீட்சைகள் 25ம் திகதி ஆரம்பம்!

யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட கலைப் பீட பரீட்சைகள் 25ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன் கல்விச் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ள அனைத்துப் பீடங்களும் விரைவாக ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். வரும் திங்கட்கிழமை கலைப்பீடம், முகாமைத்துவ வணிக பீடம் உள்ளிட்ட சில பீடங்களில் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியுமா...

தமிழ் மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சித்தீர்வை ஏற்க வைப்பதற்கும், பொறுப்புக் கூறலின்றி அரசு தப்பித்துக் கொள்வதற்கும் சம்பந்தன், சுமந்திரன் துணைபுரிகின்றனர்!!

எதிர்காலத்தில் தமிழரின் அரசியல் தீர்வு மற்றும் இனஅழிப்பு தொடர்பான பொறுப்புக்கூறல் விடயங்களுக்கு என்ன நடைபெறப்போகின்றது என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை நடாத்தியது. கடந்த 20-7-2016 அன்று கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இணைந்து நடாத்திய ஊடக மாநாட்டிலேயே...

யாழ் பல்கலைக்கழகம் மண்ணின் தனித்துவத்தை பேணிப்பாதுகாக்க வேண்டும்: கஜேந்திரகுமார்

கடந்த 16ம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தும் ஊடக மாநாடு கட்சியின் யாழ்-கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றம் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இணைந்து நடாத்திய மேற்படி...
Loading posts...

All posts loaded

No more posts