23 பேரின் தண்டனையை தளர்த்த தீர்மானம் : டீ.எம்.சுவாமிநாதன்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள 23 பேரின் தண்டனையை தளர்த்துவது தொடர்பில் சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக, அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்தக் கலந்துரையாடலின் படி புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகத்தின் ஊடாக இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கமைய 23 கைதிகளையும் 6 மாதங்களுக்கு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின்...

ஐ.நாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரை

ஐக்கிய நாடுகள் சபையின் 71வது கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா கூட்ட தொடரில் தனது உரையினை நிகழ்த்தினார். இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை 2017ஆம் ஆண்டு ஏழ்மையில் இருந்து விடுதலை அடையும் ஆண்டாக பெயரிடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் உருவாகி 20 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இலங்கை...
Ad Widget

உடுவில் மகளிர் கல்லூரி நெருக்கடி நிலைமை தொடர்பாக தவராசா அவசர பிரேரணை

உடுவில் மகளிர் கல்லூரியில் அண்மையில் மாணவிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாகவும், அக் கல்லூரியில் பல ஒழுக்க சீர்கேடுகள் நடைபெற்று வருவதாக பெற்றோரினால் கூறப்படும் முறைப்பாடுகள் தொடர்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா நாளை 22.09.2016 நடைபெறவுள்ள சபை அமர்வின் போது ஓர் அவசர பிரேரணையைக் கொண்டுவரவுள்ளார். அப் பிரேரணையில் கூறப்பட்டுள்ளதாவது,...

ஸ்மாட் கையடக்கத் தொலைபேசிகளுக்கான தீர்வை வரியை முற்றாக நீக்க அரசாங்கம் திட்டம்

ஸ்மாட் கையடக்கத் தொலைபேசிகளுக்கான தீர்வை வரியை முற்றாக நீக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் தொழினுட்ப அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மேற்படி திட்டத்தை உள்ளடக்குவதற்கு நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...

இனி க.பொ.த. சாதாரண தர பரீட்சை சித்தியில்லாமல் உயர்தரத்திற்கு அனுமதி!!

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு முதல் க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் கணக்கில் கொள்ளப்படாமல், மாணவர்கள் உயர்தர வகுப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

அநுராதபுரம் சிறையிலுள்ள அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இன்று புதன்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த சிறைச்சாலையில் உள்ள 25 தமிழ்க் கைதிகளே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். நாளை அல்லது நாளை மறுதினம் அளவில்...

யாழ் பல்கலைக்கழக சூழலில் மது அருந்திவிட்டு இளைஞர்கள் அட்டகாசம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழ சுற்றுப்புறச் சூழல்களில் இளைஞர்கள் மது அருந்தி விட்டு அட்டகாசம் புரிவதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மது அருந்தி விட்டு அட்டகாசம் புரியும் இளைஞர்கள் தகாத செயல்களிலும் ஈடுபட்டு வருவதாகவும் குறித்த மக்கள் தெரிவித்தனர். தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக வீதிகளில் வருபவர்களை மறித்து அட்டகாசம் புரிகிறார்கள். இது தொடச்சியாக இடம்பெறுவதாகவும்...

நடுவீதியில் டயர்களை கொழுத்திய இளைஞர் கைது

யாழ். நகர் முட்டாஸ் கடைச் சந்தியில் ரயர் கொழுத்திய இளைஞர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.உடையார் கட்டு முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க இளைஞரே கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ். நகர் முட்டாஸ் கடைச் சந்தியில் இன்று அதிகாலை பழைய ரயரினை போட்டு எரித்துள்ளார். சம்பவத்தினை அறிந்த யாழ்ப்பாணம் பொலிஸார் சென்று இளைஞரை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம்...

பாறையைப் பிளந்து விதை முளைப்பது போல் வெளிவரும் செப்டம்பர் 24 ‘எழுக தமிழ் பேரணி’ வெல்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அவர்களின் எழுக தமிழ் நிகழ்விற்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தி! பாறையைப் பிளந்து கொண்டு விதை முளைப்பது போல், தமிழின ஒடுக்குமுறைகளைப் பிளந்து கொண்டு 'தமிழ் மக்கள் பேரவை' உருவாகியிருப்பது, உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சம் குளிரும் செய்தியாகும். பல்வேறு அரசியல் இயக்கங்கள் மற்றும் வெகு மக்களை ஒருங்கிணைத்துக் கொண்டு...

யாழ் முற்றவெளியில் திரள்வீர்!! வைகோ

எழுக தமிழ் நிகழ்விற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளளர் வைகோ அவர்கள் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தி

விஜய் பட வேலைகளை தொடங்கினார் அட்லி

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் தெறி. சமந்தா-எமிஜாக்சன் என பலர் நடித்த அந்த படம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனால் அஜீத்தை வைத்து வீரம், வேதாளம், அஜீத்-57 ஆகிய படங்களை தொடர்ச்சியாக சிறுத்தை சிவா இயக்கி வருவது போன்று அட்லிக்கும் உடனடியாக விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது...

சிவகார்த்திகேயன் யாருடைய ரசிகர்!

வளர்ந்து வரும் நடிகர்கள் தங்களது அபிமான நடிகர்களின் ரசிகர்களாக நடிப்பது சமீபகாலமாக சினிமாவில் நடந்து வருகிறது. அந்த வகையில், சிலர் ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களாக நடித்துள்ளனர். ஆனால், சிவகார்த்திகேயன், நான் சின்ன வயதில் இருந்தே ரஜினி ரசிகர் என்கிறார். அதோடு, அஜித் ரசிகர் என்றும் சொல்லிக்கொள்கிறார். இந்நிலையில், அவர் நடித்துள்ள ரெமோ படத்தின் ட்ரெய்லரில்...

ரஜினி படத்தில் மலையாள வில்லன்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.ஓ’ படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் நாயகியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். இந்நிலையில், மற்றொரு வில்லனாக நடிக்க மலையாள நடிகர் கலாபவன் சாஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்ஷய்குமாருக்கு இணையான வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கலாபவன் சாஜன்...

வடக்கில் மேற்கொள்ளப்படும் தொழில் முயற்சிகள் விவசாயிகளைக் கூலித்தொழிலாளிகளாக மாற்றிவிடக் கூடாது

வடக்கில் பல்வேறு வகையான தொழில்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எமக்கு அபிவிருத்தி அவசியம். ஆனால், அபவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் தொழில் முயற்சிகள் எதுவும் விவசாயிகளைக் கூலித்தொழிலாளிகளாக மாற்றிவிடக் கூடாது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து விவசாய உள்ளீடுகளை வழங்கி...

யாழ் சிறையில் காரைக்கால் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

யாழ்ப்பாணம் சிறையில் கடந்த 40 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்கள் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி திடீர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி காரைக்கால் அருகே உள்ள டி.ஆர்.பட்டினத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கணேஷ்குமார், பிச்சைபாண்டி, முகமதுகான், ரகுமான்கான் ஆகியோர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். குறித்த நால்வரும் நெடுந்தீவு அருகே...

எழுக தமிழா பேரணி அரசியல் தீர்வு முயற்சியை குழப்பிவிடும்! சுமந்திரன் எம்.பி அச்சம்

மக்­க­ளது எழுச்­சியை தென்­ப­கு­தி­யிலே வேறு வித­மாக சித்­த­ரிப்­ப­வர்­களும் இருக்­கின்­றார்கள். தற்­போதும் அவர்கள் தென்­ப­கு­தி­யிலே தமிழ் மக்கள் மீண்டும் ஆயு­த­மெ­டுக்கும் சாத்­தி­யங்கள் உள்­ளன போன்ற பிர­சா­ரங்­களை செய்து கொண்டு இருக்­கி­றார்கள். ஆனாலும் செயற்­பா­டுகள் வெற்­றி­பெ­ற­வில்லை. இவ்­வா­றான சூழ்­நி­லையில் வடக்கில் மக்களைத் திரட்டி அரசிற்கு எதிராக எழுச்சியைஏற்படுத்த முனைவதானது இப்­ப­டி­யான நிகழ்­வு­களை காண்­பித்து பிர­சாரம் செய்­வ­தற்கு அவர்­க­ளுக்கு கரு­வி­யாக...

பேரத்துள் சிக்கினாரா யாழ் வணிகர் கழக தலைவர் ! பேரணிக்கு ஆதரவா? எதிர்ப்பா?

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு யாழ்மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச வணிகர் கழகங்களும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பேரணிக்கு ஆதரவு வழங்குவதா வேண்டாமா என முடிவெடுக்கமுடியாமல் யாழ்.நகர் வணிகர் கழகத் தலைவர் திணறிவருவதாக தெரியவருகின்றது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஊடகவியலாளர்கள் இருவரின் உதவியோடு சுரேஸ் பிரேமச்சந்திரனை...

உரிமைக்காக குரல் கொடுக்க 24ஆம் திகதி எழுக தமிழ் பேரணியில் இணையுங்கள்! சுரேஷ் பிரேமச்சந்திரன்

உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு எழுக தமிழ் பேரணியை வெற்றி பெறச்செய்வோம் என்று முன்னாள் நடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மக்கள் பேரவை நடாத்தும் 'எழுக தமிழ்' பேரணி தொடர்பாக, அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை எதிர்வரும்...

முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி ; ஆரம்பித்து வைத்தார் சங்கா

இலங்கையிலுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களிடையே நட்புறவை பேணும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி தொடர்ந்தும் 5 ஆவது முறையாக இன்று (21) ஆரம்பமாகவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு நிலும்பியசவில் நேற்று மாலை மூன்று மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான...

மருந்துப்பொருட்களின் விலையை அரசாங்கம் உடனடியாகக் குறைக்கவேண்டும்!

நாட்டில் மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது. இது தொடர்பாக அந்தச் சங்கம் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, அரச வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றபோதிலும், தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தமட்டில், அவர்கள் தமக்கேற்றாற்போல் விலைகளைத் தீர்மானித்து மருந்துகளை விற்பதால் மக்கள் பெரும் அசௌகரியங்களைச் சந்திக்கின்றனர்....
Loading posts...

All posts loaded

No more posts