இராணுவ வீரர்கள் 05 பேருக்கு விளக்கமறியல்; 11 பேரை கைது செய்ய உத்தரவு

1998 ஆம் ஆண்டு 2 இளைஞர்கள் காணாமல் போன சம்பவத்தில் 05 இராணுவ வீர்ர்களை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார். 1998 ஆம் ஆண்டு அச்சுவேலிப் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்த 16 இராணுவத்தினர் சேர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்களை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட...

நினைவுத் தீபங்களேற்றி தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி

துளி நீரேனும் அருந்தாது உயிர்க்கொடை புரிந்த தியாகி திலீபனின் 29ஆவது நினைவு தினமான நேற்று திங்கட்கிழமை (26.09.2016) மாலை 6மணிக்கு நல்லூரில் அவரது இடித்தழிக்கப்பட்ட நினைவுத் தூபி அருகே நினைவுத் தீபங்களேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், பா. கஜதீபன் ஆகியோருடன் ஏராளமான பொதுமக்களும்...
Ad Widget

தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தலும் இரத்ததானமும்

தமிழ் மக்களின் உரிமைக்காக உண்ணாநோன்பிருந்து தன்னுயிரைத் தியாகம் செய்த லெப் கேணல் தீலீபன் அவர்களின் 29ஆம் அண்டு நினைவு நாள் நேற்றாகும். இதனை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் கந்தர்மடத்தில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து தியாகதீபம் திலீபன் அவர்களது தியாகத்தினை நினைவு கூரும் முகமாக இரத்தான நிகழ்வும் இடம்பெற்றது.

500வது டெஸ்ட் : இந்தியா அபார வெற்றி!

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கான்பூரில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 97 ஓவர்களில் 318 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக முரளி விஜய் 65, புஜாரா 62, ஜடேஜா 42...

யாழ் பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி விஜயம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு வரும் நீர்வடிகட்டியை எதிர்வரும் 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பணப் பல்கலைக்கழக ஆண் மாணர்கள் விடுதியில் போதிய நீர் வடிகட்டிகள் இன்மையால் குடிதண்ணீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வதாக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் ஜனாதிபதிக்கும் கடந்த மாதம் எழுத்துமூலம் கோரிக்கையை...

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் கடும்போக்குவாதத்தை அனுமதிக்கின்றார் : ராஜன் ஹூல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடும்போக்குவாத்தை அனுமதிக்கின்றார் என பிரபல கல்வியியலாளர் கலாநிதி ராஜன் ஹூல் குற்றம் சுமத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யாழ் பல்கலைக்கழக துணை வேந்தரின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை என அவர் தெரிவித்துள்ள அவர் மாணவர்கள் கடும்போக்குவாத போராட்டங்களை நடாத்த அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக...

யாழ் பல்கலைக்கழகத்தில் திலீபனின் அஞ்சலி நிகழ்வுகள்

தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாளின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னறில் ஒன்று கூடிய மாணவர்கள் திலீபனின் படத்திற்கு முன்னால் ஈகைச்கூடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதேவேளை யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு, ஜனநாயக போராளிகள் கட்சியின்...

பிளாஸ்டிக் கேன்களை பிடித்தபடி தமிழகத்தை அடைந்த இலங்கையர்கள் இருவர் குறித்து விசாரணை!!

கடலில் பிளாஸ்டிக் கேன்களை பிடித்தபடி தமிழகத்தை அடைந்த இலங்கையர்கள் இருவர் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், சோழியக்குடி கடல் பகுதியில், தேவிபட்டினம் மரைன் பொலிசார், நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது பிளாஸ்டிக் கேன்களை பிடித்து கரை சேர்ந்த, இருவர் சிக்கினர் என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. விசாரணையில், அவர்கள்...

கால்நடை மருத்துவ நடமாடும் சேவை உடையார்கட்டில் இடம்பெற்றது

வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள் பயன் பெறும் விதமாகக் கால்நடை மருத்துவ நடமாடும் சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை (25.09.2016) நடைபெற்றுள்ளது. உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையை வடக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். கால்நடை...

டோணியிடம் சூர்யாவின் மகன் கூறிய ரகசியம்!

நானும் உங்களை போன்று தான் குறும்புக்காரனாக்கும் என நடிகர் சூர்யாவின் மகன் தேவ் கிரிக்கெட் வீரர் டோணியிடம் தன்னைப் பற்றிய ரகசியத்தை தெரிவித்தார். கூல் கேப்டன் டோணியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தி படம் எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி. இந்த படத்தை விளம்பரப்படுத்த டோணி சென்னை வந்தார். சத்யம் சினிமாஸில்...

‘இருமுகன்’ படம் வசூலில் சாதனை!

'சீயான்' விக்ரம் நடித்த 'இருமுகன்' படம் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் நடிகர் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்த 'இருமுகன்' படம் கடந்த 8 ம் தேதி வெளியானது.கலவையான விமர்சனங்கள் வந்த பொழுதும்...

“கபாலி’ படத்துக்கு வரி விலக்கு வழங்கியதை எதிர்த்து வழக்கு

ரஜினிகாந்த் நடித்து வெளியான "கபாலி' திரைப்படத்துக்கு வரி விலக்கு வழங்கிய தமிழக வணிக வரித் துறையின் உத்தரவை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வழக்குரைஞர் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்த மனு விவரம்: கடந்த 2009-ஆம் ஆண்டு, திமுக ஆட்சியில் திரைத் துறையின் வளர்ச்சிக்காக தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்கள், தமிழ் கலாச்சாரம்,...

தியாகி திலீபன் நினைவஞ்சலியில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா

தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாளின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. தியாகதீபம் திலீபனின் அஞ்சலி வணக்க நிகழ்வுகள் யாழ்ப்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வந்தநிலையில் இறுதிநாள் நிகழ்வு இன்றைய தினம் யாழப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது...

தியாகதீபம் திலீபனின் 29ஆம் ஆண்டு இறுதிநாள் அஞ்சலி நிகழ்வு இன்று

தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாளின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகில் முதன்முதலில் சாத்வீகப்போராட்டத்தின் உச்சக்கட்டமான நீராகாரம் இன்றி சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு உயிர் துறந்த திலீபன் வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடம் பெற்றுள்ளான். யாழ்ப்பாணம் – ஊரெழுவைச் இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் திலீபன், 1963ஆம் ஆண்டு...

அனுராதபுரச் சிறையில் உண்ணாவிரதம் இருந்த தமிழ்க் கைதி ஒருவர் போகம்பரை சிறைக்கு மாற்றப்பட்டார்!

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கண்டி நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை நடைபெறவுள்ளதால் குறித்த தமிழ் அரசியல் கைதி போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய 16 கைதிகளும் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

எழுக தமிழ் கூட்டமைப்புக்கு எதிரானது!! கூட்டமைப்புக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!! சுமந்திரன்

சனிக்கிழமை நடைபெற்ற எழுக தமிழ் கூட்டமைப்புக்கு எதிரானது எனவும், அதற்கும் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனவும், அதில் தாம் கலந்துகொள்ளவில்லையெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் நாட்டின் நல்லிணக்கத்திற்குப் பாதகம் விளைவிக்கும் எனவும் குற்றம் சுமத்தினார். நாட்டில் தற்போது புதிய...

‘தமிழரின் நம்பிக்கைக்கு உரிய தலைவன்’ என வடக்கு முதல்வரை விழித்த மக்கள்

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழில் நேற்று சனிக்கிழமை (24) இடம்பெற்ற 'எழுக தமிழ்' பேரணியில் கலந்துகொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, 'தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவன்', 'தமிழரின் தலைவன்' என விழித்துக் கோசமிட்டனர். யாழ். பல்கலைக்கழகம் மற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து இரு பிரிவுகளாக ஆரம்பமான பேரணியினை வடக்கு மாகாண...

எழுக தமிழ் : அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயற்பாட்டுக்கு இடையூறை விளைவிக்கும்

வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற எழுக தமிழ் எதிர்ப்பு பேரணியானது, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயற்பாட்டுக்கு இடையூறை விளைவிக்கும் என்று, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். ரத்டெம்பேயில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,...

‘எழுக தமிழ்’ பேரணியில் பங்குபற்றாமை எதிர்ப்பு அல்ல

“‘எழுக தமிழ்’ பேரணியில் பங்குபற்றாமை எதிர்ப்பு அல்ல. தமிழரசுக் கட்சியைத் தாக்குவதை ஏற்கவும் முடியாது” என, தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் வடமாகாண சபை அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) தெரிவித்தார். சனிக்கிழமை (24) இடம்பெற்ற “எழுக தமிழ்” பேரணியில் கலந்துகொள்ளாமை குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

சிகரெட்டின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிப்பு?

சிகரெட்டின் விலையை ஐந்து ரூபாவினால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான ஆவணம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என்று சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். 15 வீத வற் வரிக்கு அமைவாக சிகரெட்டின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். ஏற்கனவே...
Loading posts...

All posts loaded

No more posts