தப்பியோடிய 24 வருட சிறைத்தண்டனை பெற்ற கைதி மீண்டும் கைது!

யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடிய நிலையில், இளவாலை பகுதியில் வைத்து மீள கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5...

கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் (தரம் III) வெற்றிடங்கள்!!

வடக்கு மாகாண பொதுச்சேவையின் கீழ் இயங்கும் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தில் காணப்படும் 20 கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் (தரம் III) வெற்றிடங்களை நிரப்புவதற்காகத் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. முக்கிய விபரங்கள்: பதவியின் பெயர்: கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் (தரம் III) வெற்றிடங்களின் எண்ணிக்கை: 20 விண்ணப்பிக்கும் கடைசித் திகதி: 2026 செப்டம்பர்...
Ad Widget

புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் சாதனையாளர் மதிப்பளிப்பு!!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில், புதுக்குடியிருப்பு பங்கிற்ற்கு உட்பட்ட சாதனையாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். அந்தவகையில் புதுக்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்பணி எஸ். அஜந்தன் தலைமையிலும், முல்லைத்தீவு மாவட்ட குருமுதல்வர் இராஜசிங்கம் அடிகளார் அவர்களது ஆன்மீகத் தலைமையிலும் இடம்பெற்ற இந்த மதிப்பளிப்பு...

அமெரிக்க இராணுவ தளம் மீது தாக்குதல்!!

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. சுமார் ஒரு மாத காலத்தில் முதல் முறையாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் மேற்காசியாவில் போர்ச் சூழல் ஆறாவது மாதத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ்...

கோயில் குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

இந்தியாவின் தோல்ப்பூர் மாவட்டம் நாதூவாபுரா கிராமத்தைச் சேர்ந்த ரவி குமார் (21), அவரது சகோதரிகள் மனோரமா (22), போட்டோ (25) மற்றும் அவர்களின் உறவினர் பெண் நிஷா (18) ஆகிய நால்வரும் பிர்ஜா கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஹிராமன் பாபா திருக்கோயிலுக்குச் சென்றிருந்தனர். ரக்ஷா பந்தனை முன்னிட்டு கடந்த 29 ஆம் திகதி இரவு நடைபெற்ற...

தோனி குறித்து வெளியான பரபரப்பு செய்தி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை தோனி கோரியதாகப் பரவி வரும் வதந்திகளை அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் தோனியின் எதிர்காலம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தோனிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு...

சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து லியோனல் மெஸ்ஸி ஓய்வு!!

அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது "வேதனையான" ஒரு முடிவு என்றாலும், "அதற்கான நேரம் வந்துவிட்டது" என்பதைத் தான் புரிந்து கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்குத் தலைமை தாங்கி சாம்பியன் பட்டம் வென்று...

கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை!!

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் சென்ற ஜூலை 22 ஆம் திகதி முதல் மேற்கோள்ளப்பட்டு வரும் கட்டிட நிர்மாண வேலைகளை, உள்ள நிலையிலேயே இடைநிறுத்துமாறு திருகோணமலை மேல்நீதிமன்றம் இன்று (31) திங்கட்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், இது தொடர்பில் மேல் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கில்,எதிர்வரும் செப்டெம்பர் 22...

ரவி கருணாநாயக்க கைது!!

விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க, ரவி கருணாநாயக்க திங்கட்கிழமை (31) காலை சுமார் 8:15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப்...

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இராஜினாமா!!

வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன், தனியார் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். குறித்த தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர், நெல்லியடிப் பகுதியில்...

பாண் விலை அதிகரிப்பு!!

இன்று நள்ளிரவு (ஆகஸ்ட் 31) முதல் 450 கிராம் எடையக்கொண்ட பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 30) ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு எவ்வித unfair (முறையற்ற)...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவிதி அறியாத துயரம்: தாய்மார்கள் உயிரிழப்பு பேரதிர்ச்சி!

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் தாயார்கள், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என அறியாமலே இறந்து போவது மிகவும் மோசமான ஒரு சம்பவமாகும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணிக்குழுவின் பிரதிநிதி அனா லோறினா டெல்கடிலோ பெரஸ் (Ana Lorena Delgadillo Pérez) கவலை...

ஐஓசி, சினோபெக் பெற்றோல் விலைகளும் குறைப்பு!!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் பெற்றோல் விலைகளைக் குறைத்ததைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் (LIOC) தனது எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது. இதற்கமைய, ஐ.ஓ.சி நிறுவனம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக...

யாழில் இருவருக்கு மரண தண்டனை!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்துள்ளார். திருநெல்வேலி பகுதியில், கடந்த 2012 ஆம் ஆண்டு மது போதையில் இளைஞன் ஒருவரை மூர்க்கத்தனமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 09 நபர்களை கைது செய்திருந்தனர்....

அர்ச்சுனாவின் எம்.பி பதவி எதிர்ப்பு மனுவை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிக்கை!!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அவரது சட்டத்தரணி இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இம்மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோதே, அர்ச்சுனா எம்.பி சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன இக்கோரிக்கையை முன்வைத்தார். எவ்வாறாயினும்,...

பொதுமக்களுக்கான அவசர வேண்டுகோள் – தயவுசெய்து தீ வைக்க வேண்டாம்!

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு பொதுமக்களுக்கு விடுக்கும் அவசர வேண்டுகோள்.... முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவும் வரண்ட காலநிலை காரணமாக, மக்கள் தங்களுடைய காணிகளை சுத்தப்படுத்துவதற்காக வைக்கும் தீ, கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள காணிகள், வீடுகள் மற்றும் ஏனைய சொத்துகளுக்கும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. எனவே, காணிகளுக்கு தீ வைப்பதை பொதுமக்கள் முற்றாகத்...

சைப்ரஸில் படகு கவிழ்ந்து விபத்து; 07 பேர் உயிரிழப்பு, 23 பேரைக் காணவில்லை

வடக்கு சைப்ரஸின் கிரேனியா துறைமுகத்திலிருந்து துருக்கி நோக்கிப் பயணித்த சுமார் 270 பயணிகளைக் கொண்ட கட்டுமரப் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 12.30 மணியளவில் கிரேனியா துறைமுகத்திலிருந்து துருக்கியின் தசுச்சு துறைமுகம் நோக்கிப் புறப்பட்ட...

இந்த படத்தை கண்டிப்பாக பாருங்க, நல்ல படத்தை என்கிரேஜ் பண்ணனும்- நடிகர் சிம்பு

ம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் படம் எப்போது வரும் என பலரும் காத்திருப்பார்கள். இந்த நிலையில் சிம்பு சோலோ ஹீரோவாக கடைசியாக நடித்த படம் அச்சம் என்பது மடமையடா தான். எப்போதும் சிம்பு சோலோ ஹீரோவாக நடிப்பார் என காத்திருந்த நிலையில் அரசன் படம் படு ஜோராக படப்பிடிப்பு நடந்து வருகிறது,...

அஜித்தின் டேர்டெவில் படத்தில் ஷாலினி!!

அஜித் கார் ரேஸில் கலந்துகொள்வதற்காக சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு இருக்கிறார். அவர் அடுத்து நடிக்கும் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். அந்த படத்திற்கு டேர்டெவில் என டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதை ஷாலினி அஜித் தான் தயாரிக்க போகிறார். செப்டம்பர் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஷாலினியை...

ஒலி உபகரணங்களை பயன்படுத்த புதிய கட்டுப்பாடு!!

பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள், ஆம்பிளிஃபயர்கள் மற்றும் ஏனைய ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். இந்த ஒலி மாசுபாடானது கைக்குழந்தைகள், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பாரிய சுகாதார மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தமது அறிக்கையில்...
Loading posts...

All posts loaded

No more posts