Ad Widget

90 கிலோ மட்டை சிங்கிறால் வைத்திருந்த 3 மீனவர்கள் கைது

arrest_1அனுமதியின்றி மட்டை சிங்கிறால் பிடித்த மூன்று மீனவர்கள் கடற்றொழில் பரிசோதகரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளர் என். கணேசமூர்த்தி தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்றொழில் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காட்டு கடற்பரப்பில் மட்டை சிங்க இறால் 6 பெட்டியுடன் 3 மீனவர்கள் கடற்றொழில் பரிசோதகரினால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

மேற்படி வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பருத்தித்துறை நீதிவான் சிறிநிதி நந்தசேகரம் மூன்று மீனவர்களுக்கும் தலா 3 ஆயிரம் படி 9 ஆயிரம் தண்டம் அறவிட்டதுடன், சுமார் 54 ஆயிரம் பெறுமதியான 90 கிலோ சிங்கி இறால்களையும் அழிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, கடற்றொழில் சட்டத்தின் பிரகாரம், பெப்பரவரி உட்பட செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில், சிங்கி இறால் தனது இனப்பெருக்கத்தினை விருத்தி செய்யும் காலப்பகுதியாகையினால் இந்த காலப்பகுதியில் சிங்கி இறால்கள் பிடிப்பது சட்டத்திற்குரிய குற்றமென்றும், அதேவேளை அனுமதியின்றி 90 கிலோ சிங்கி இறால்களை பிடித்த குற்றத்திற்காக அவற்றினை பறிமுதல் செய்து அழிக்குமாறு உத்தரவிட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை உதவிப்பணிப்பாளர் மேலும் கூறினார்.

Related Posts