40 இலட்சம் ரூபா மோசடி குற்றச்சாட்டில் இருவர் கைது

arrest_1யாழ். வியாபாரியொருவரை ஏமாற்றி 40 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர் இருவரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான மஜிஸ்திராத்தும் மேலதிக மாவட்ட நீதவானுமான ருவன்னிகா மாரப்பன உத்தரவிட்டார்.

அநுராதபுரம் ஹிதோகம பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்த பஸ் உரிமையாளர் ஒருவருக்கு பராக்கிரமபாகுவின் முகத்தை ஒத்த உலோகத் தட்டை தங்கம் எனக் கொடுத்து 40 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளனர்.

வியாபாரி அதனைப் பரிசோதித்த பின்வு அவை போலி எனத் தெரிய வந்ததையடுத்து இதுதொடர்பாக அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.