- Monday
- November 23rd, 2026
கிளிநொச்சி குளத்தின் வான்கதவு (துருசு கதவு) திருத்தப் பணிகளுக்காக நீர் வெளியேற்றப்பட்டதையடுத்து, குளத்திலிருந்த இலட்சக்கணக்கான மீன்கள் உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளன. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், குடிநீர் மாசடைந்திருக்கலாம் என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் சனிக்கிழமை (21), கிளிநொச்சி குளத்தின் துருசு கதவில் ஏற்பட்டிருந்த சேதத்தினை சீர்செய்யும் நோக்கில் குளத்தின்...
சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் வந்த விமானம், யாழ்ப்பாணத்தில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகத் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியுள்ளது. இன்றைய தினம் (திங்கட்கிழமை) சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தபோது, மழையுடனான காலநிலை நிலவியுள்ளது. இதனால் விமானத்தைத் தரையிறக்குவதற்கான போதிய பார்வைத் தெளிவு இல்லாத காரணத்தினால் விமானம் மீண்டும் சென்னைக்குத் திரும்பியது. யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும்...
வலிகாமம் வடக்கு, மல்லாகம் - கோணப்புலம் கிராமத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த தனியாருக்குச் சொந்தமான 2.71 ஏக்கர் காணி இன்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட குறித்த காணிக்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் வைத்து மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனிடம் கையளிக்கப்பட்டன. பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல்...
'ராமாயணா' படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மூன்று ஆண்டுகள் செலவிட்டதாகத் தெரிவித்தார். நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள 'ராமாயணா' படத்திற்கு ஜெர்மானிய இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தியாவில் இப்படத்தின் மொத்த வசூல் ரூ. 1,126 கோடியை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று (22) கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட...
கூட்டுறவுச் சங்கங்களில் கணக்கு வைப்புகளின் மூலம் உரிய காலத்திற்குரிய பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, கணக்குகளை இற்றைப்படுத்தி முடிவுறுத்துவதற்கு 'கணக்குத் தேர்ச்சி பெற்ற குழாம்' ஒன்றை அமைப்பதற்கு வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், யாழ்ப்பாண மாவட்டக் கூட்டுறவுச்சபை இவ்வேலையினை மேற்கொள்ள பின்வரும் தகைமைகளை உடையவர்களை இக்குழாமில் இணைத்து, மேற்படி வேலைகளை...
ஜாவாவில் தீ விபத்தால் அழிந்த ஒரு தொழிற்சாலையில் இருந்து, ஞாயிற்றுக்கிழமை (22) இந்தோனேசிய காவல்துறை 24 சடலங்களை அகற்றியது. ஒரு நாள் முன்னதாக, கட்டிடம் முழுவதும் தீ பரவி எரிந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் எஞ்சியிருந்த தீப்பொறிகளை அணைக்கப் போராடினர். மேலும், காணாமல் போன பல தொழிலாளர்களைத் தேடும் பணி ஞாயிறு இரவு முழுவதும் இடைநிறுத்தப்பட்டது....
பிரபாகரன் சரணடைவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டபோதும், தன்மானப் பிடிவாதத்துடன் அதனை நிராகரித்து இறுதிவரை போரிட்டு உயிரிழக்கத் தீர்மானித்தார். விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் கைதுசெய்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம் ஆரம்பமாகியிருக்கும் என முன்னாள் இராணுவத் தளபதியும் ஃபீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார். 'அபிமானமிக்க தேசத்தையும் தலைமுறையையும் கட்டியெழுப்புவதற்காக' எனும் தொனிப்பொருளில் சனிக்கிழமை (21) திகதி காலியில்...
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் காணியை அபகரிக்கும் நடவடிக்கையை உரிய அதிகாரிகள் உடனடியாகக் கைவிட வேண்டும் என அகில இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கட்சி சார்பற்ற தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்தின் காணியை அபகரிக்கும் முயற்சியில் மாநகர சபை மற்றும் போக்குவரத்து அதிகார சபையின்...
காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்க முன்வந்த போதிலும், அவற்றை அபிவிருத்தி செய்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் வளர்ச்சியடைந்துவிடும் என்பதற்காகவே இலங்கை அரசாங்கம் அவற்றை மேம்படுத்த ஆர்வமின்றி உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்....
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று முன்தினம் (21) வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 2,330 பாரிய வீதி விபத்துகளில், 2,463 பேர் உயிரிழந்துள்ளதாகப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர், இதே காலப்பகுதியில்...
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில், T-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 தோட்டாக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிளொன்றை வழிமறித்துச் சோதனையிட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்...
சாதாரண கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கு வழங்கும் உடன்படிக்கையில் இலங்கையும் தாய்லாந்தும் கையொப்பமிட்டுள்ளன. பயணங்களை எளிதாக்குவதற்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோவ் (Sihasak Phuangketkeow) மற்றும்...
உலகில் அதிக பொது விடுமுறைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக பியூ ஆராய்ச்சி மையத்தின் (Pew Research Center) புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 12ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த ஆய்வின்படி, 2026ஆம் ஆண்டில் இலங்கையில் 25 பொது விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 190 ஐ.நா. உறுப்பு...
இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (23) தேசிய எதிர்ப்பு தினமொன்றை முன்னெடுக்கப் பல தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதற்கமைய, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், தாதியர்கள், சுகாதார உதவிப் பணியாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தப்...
வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (23) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும்...
யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில் பல மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் சேதமடைந்துள்ளன. யாழ். நகர் பகுதியில் இருந்து தீவகம் நோக்கிப் பயணித்த கார், பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனையடுத்து, பண்ணை கடற்கரைப் பூங்காவுக்கு வருகை...
சந்தையில் செத்தல் மிளகாய் கிலோகிராம் ஒன்றின் மொத்த விலை எதிர்காலத்தில் 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள செத்தல் மிளகாய் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்குத் துரித நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் நாட்களில் சந்தையில் செத்தல் மிளகாய்க்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அந்த...
