இன்று நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டம்!!

இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (23) தேசிய எதிர்ப்பு தினமொன்றை முன்னெடுக்கப் பல தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இதற்கமைய, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், தாதியர்கள், சுகாதார உதவிப் பணியாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு உரிய பதில் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களையும் இணைத்துக்கொண்டு இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அரச அலுவலகங்களுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளதாக தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் தேசிய குழு உறுப்பினர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.

Related Posts