- Tuesday
- November 3rd, 2026
இலங்கையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களுக்குள் சீராகும் என லிட்ரோ லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தற்போது தினமும் சுமார் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் நவம்பர் 1ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நான்கு கப்பல்கள் மூலம் மொத்தம் 15,600 மெட்ரிக்...
தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கமைய 2026ஆம் ஆண்டிற்கான பிரதான தேருநர் இடாப்பு மற்றும் 2026 (1) ஆம் இலக்க குறைநிரப்பு தேருநர் இடாப்பின் பிரகாரம், இலங்கையின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,534,397ஆக பதிவாகியுள்ளது. அரசியலமைப்பின் 98ஆம் உறுப்புரையின் (8)ஆம் உப உறுப்புரையின் கட்டளைக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தலின்படி, நாடு முழுவதும் உள்ள 22 தேர்தல்...
நுவரெலியா, மீபிலிமான பகுதியில் வாடகைக்கு பெறப்பட்ட வீடொன்றில் தங்கியிருந்த தம்பதியினர் விஷ வாயுவை சுவாசித்தமையினால் இன்று (03) அதிகாலை உயிரிழந்துள்ளனர். அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய மற்றும் 46 வயதுடைய இத்தம்பதியினர், மீபிலிமான பகுதியில் சுற்றுலா விடுதியொன்றின் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வந்ததுடன், அச்சுற்றுலா விடுதி நிர்மாணிக்கப்படும் வரை அதற்கு அருகிலேயே தற்காலிகமாக வாடகைக்கு...
அண்மைக்காலமாக வடமாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிக கவலையை ஏற்படுத்துகின்றன. தற்கொலைகள் ஒருபுறமும், வீதி விபத்துகள் மறுபுறமும் பல குடும்பங்களிடமிருந்து பெறுமதியான இளம் உயிர்களைப் பறித்துச் செல்கின்றன என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். “இந்த வாரம் வீதி விபத்துகளைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்”...
கடந்த 2025ம் வருடம் அஜித்தின் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி வசூல் வேட்டை செய்தது. இப்படத்திற்கு பிறகு அஜித் எந்த படத்திலும் கமிட்டாகாமல் கார் ரேஸில் முழு கவனத்தையும் காட்டி வந்தார். இந்த வருடம் தான் அஜித்தின் புதிய...
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன், பாராளுமன்ற உறுப்பினர் இரா. அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உட்பட 6 பேருக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு, நேற்றையதினம் (02) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அ. தர்ஷினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிமன்றத்தில்...
எட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை அந்த இலக்கத்தைப் பெறாத பெருந்திரளான மக்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அலுவலகங்களுக்கு வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திலும் பிராந்திய அலுவலகங்களிலும் கடும் நெரிசல் ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. அத்துடன், TIN இலக்கத்தைப் பெறுவதற்கு...
இரண்டாம் இணைப்பு!! திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த நபர் கடற்படைச் சிப்பாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் சாரதியாக இருந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவராவார். காயமடைந்த 28 மற்றும் 38 வயதுடைய...
நாட்டிலிருந்து இணையதளம் ஊடாக ஒன்லைன் நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத மோசடிகளில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டவர்கள் குழுவொன்று கொழும்பு, மருதானை டெக்னிகல் சந்தி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து நடத்திய கூட்டுச் சோதனையின் போதே இவர்கள் கைது...
தெதுரு ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவைகளுக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது. குருநாகல் மற்றும் மஹவ இடையிலான ரயில் மார்க்கம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அம்மார்க்கத்திலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பில் இருந்து பயணிக்கும் ரயில்கள் குருநாகல் வரையிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் ரயில்கள் மஹவ வரையிலும் மட்டுமே...
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கேற்ப அத்தகைய உடன்பாட்டை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரான் கூடிய விரைவில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை எட்ட எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரானுடன் போர் ஏற்படாது...
மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 7%க்கும் அதிகமான அளவினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7.63% சரிவடைந்து, 104.77 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மீண்டும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள்...
ஈரானுக்குச் சொந்தமான கெஷ்ம் (Qeshm) தீவைக் இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. வெளிநாட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மூன்று அமெரிக்க அதிகாரிகள் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இந்தத் தாக்குதல்கள் தற்காப்பு நடவடிக்கையாகவே முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மற்றும் இராணுவ வளங்களைப் பாதுகாப்பதே இந்தத் தாக்குதல்களின் நோக்கம்...
